மனதை கடந்து செல்ல முடியுமா… ??? எப்படி ….???

……………………….

………………………….

கேள்வி: சமீப காலமாக, மனதைக் கடந்து போய், மனதை விட அதிக அனுபவம் பெறும் ஏக்கம் எனக்குள் வளர்வதாக, நான் உணர்கிறேன்.

அது ஒரு நீண்ட செயல்முறை போலத் தோன்றுகிறது. அதற்கு, அதிக காலம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

ஓஷோவின் பதில்…

அஜித் யாமா !

“மனதைக் கடந்து செல்லும் ஏக்கம் மட்டுமே, இருப்பவற்றுள் மிகவும் மதிப்புமிக்க ஏக்கமாகும்.இதை தவிர மனிதன் விரும்பும்,அவன் மனிதன் எதிர்பார்க்கும் அனைத்தும் முற்றிலும் அர்த்தமற்றவை.

உண்மையில் அதை ஒரு ஏக்கம் என்று சொல்வதே சரியல்ல.அது ஒரு ‘ஆசை’ என்பதை விட,

மேலான ‘புரிந்துகொள்’ளும் முயற்சியாகும்.

மனதின் வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்து கொள்வதன் மூலம் ஒருவர் தன் மனதைக் கடந்து செல்வது மிக நல்லது, என்று புரிந்து கொள்வதே ஆகும்.

“இது ஒன்றும் வெகு தொலைவில் உள்ள எதிர்கால இலட்சியம் அல்ல. ஆனால், இப்போதே, இங்கேயே நடக்க, அனுமதி தேவைப்படும் ஒன்றாகும்.

மனம் இதுவரை உனக்கு என்னென்ன செய்துள்ளது?

தொடர்ந்து உனக்கு என்ன செய்து கொண்டே இருக்கிறது என்பதை உன்னால் காண முடிந்தால் எந்த அளவுக்கு அது துயரத்தையும், எந்த அளவுக்கு அது கஷ்டங்களையும், தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே போகின்றது என்பதை,

நீ காண முடிந்தால்.

பிறகு, மனதின் துயரத்தை நீ புரிந்துகொள்ளும் முயற்சி ஒன்றே –

நீ அதை கடந்து செல்ல, உன்னைத் தூண்டிவிட போதுமானதாகிவிடும் !!

எப்படி மனதைக் கடந்து செல்வது என்று நீ கேட்க மாட்டாய்;

உன்னால் கண்டிப்பாக வெறுமனே மனதிலேயே உழன்று கொண்டே

இருக்க முடியாது.

“உன் துயரங்கள் மனதால் உருவாகின்றன என்பது,உனக்குத் தெளிவாகப் புரியாததால் தான் நீ மனதிலேயே தேங்கி இருக்க காரணமாகும்.”

அந்தப் பொறுப்பை, நீ இங்கும் – அங்கும் காரணங்கள் கூறி ஏற்றிவிடுகிறாய்..

“அடுத்தவர்கள்தான் நரகம்” என்ற ஜீன் பால் சாத்ரே கூற்று பிரபலமாகிவிட்டது… !

எப்போதுமே அடுத்தவர்கள்தான் துயரத்தை உருவாக்கிவிடுகிறார்கள்…

இல்லாவிட்டால் – நீ சொர்க்கத்திலேயே இருப்பாய் என்பது போல…

இப்படி சாதாராணமாக பொருள்படப் பார்த்தால், சாத்ரே, கூறிய கூற்றில் மிக அர்த்தம் உள்ளது.ஆகவேதான் அது மிக பிரபலமாகவும், மிக முக்கியமானதாகவும் உள்ளது.

“ஆனால், உண்மையில் இந்தக் கூற்றானது, அடியாழத்தில் ‘அறியாமை’யில் வேரூன்றி உள்ளது !”

அடுத்தவர் நரகமல்ல.அடுத்தவர் ஒரு கண்ணாடிதான்.

“அடுத்தவர் உன் மனதை, உன் உண்மையான முகத்தை மட்டுமே பிரதிபலிக்கிறார்.”

சாத்ரே போன்ற,இவ்வளவு நல்ல மனிதர்கள், இவ்வளவு கூர்மையான அறிவு படைத்தும் கூட… உன் உறவுகள்,உன் மனதின் பிரதிபலிப்புதான் என்கிற,

சாதாரண உண்மையைப் பற்றி உணராமலே இருந்துவிட்டது –

நம் துரதிஷ்டம்தான்.

“உன் துயரங்களில் இருப்பது, உன் மனம்தான்…… உன் பொறாமையில் இருப்பது, உன் மனம்தான்.

உன் அதிகார வெறிக்குள் இருப்பது, உன் மனம்தான்.

“இப்படி தொடர்ந்து நரகத்தை உருவாக்குவதில், பலவகையான திறமை பெற்றது உன்மனம்.

உனக்கு அதை தொடர்ந்து உருவாக்கித் தருவதை,’ஒரு முறை நீ கண்டுகொண்டுவிட்டால்’ அந்தப் புரிந்து கொள்ளுதலே,உன்னை மனதிலிருந்து வெளியேறச் செய்துவிடும் !!”

நீ ஏக்கப்பட தேவையில்லை.மனதைப் புரிந்து கொள்வதைத் தவிர,

நீ வேறெதுவுமே செய்யத் தேவையில்லை.

நீ என்னிடம், “மனதைக் கடந்து போய் அதனினும் அதிக அனுபவம் பெறும் ஏக்கம் எனக்குள் வளர்வதாக, நான் உணர்கிறேன்” என்று கேட்டுள்ளாய்.

மேலோட்டமாக பார்த்தால், எவருமே, உனக்கு ஆன்மீக ஆசை ஊன்றிவிட்டது என்று கூறிவிடுவார்கள்.ஆனால், நான் உன்னிடம் கடுமையாக இருக்கப் போகிறேன்.

முதலில் உணர்வுகள் என்பது, மனதின் ஒரு பகுதி, ஏக்கங்களும் மனதின் ஒரு பகுதிதான்.இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்பதும், மனதின் இயல்புதான்.இவை அனைத்தையும் எளிமையாய் சொல்லலாம்,

“மனம் எப்போதும் அதிகமாக கேட்கும்”

அது பணமாக இருந்தாலும் சரி,தியானமாக இருந்தாலும் சரிதான்.

மனம் மேலும் மேலும் வேண்டுமென்று கேட்கும்.

ஆகவே நீ ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்.இந்த ஏக்கம் மனதின்

ஒரு பகுதியாக இருக்கக் கூடாது. இன்னும் அதிக அனுபவம் வேண்டும்

என்கிற ஆசையும், மதத்தின் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால், உன்னை ஏமாற்றும் மனமாக இருக்கக் கூடாது.

“மனதையும், அதன் ஏமாற்று வேலைகளையும், அதன் தந்திரத்தையும் தவிர்க்க, ஒரே வ்ழி…இந்த ‘ஏக்கம்’ ‘அனுபவம்’ ‘அதிகம்’ போன்ற வார்த்தைகளை விட்டு உதறிவிடுவதுதான்.”

மனதை புரிந்துகொள்ள, முயல்வதைவிடவும், அது என்ன, என்று கேட்க முயல்வதை விடவும்,

“மனதின் மூலைமுடுக்குகளிலும், எங்கேயிருந்து ஆசைகள் எழுகின்றன…? எங்கேயிருந்து எல்லா ஏக்கங்களும் எழுகின்றன…?

எங்கேயிருந்து எல்லா பாசங்களும் எழுகின்றன…?

என்பதை நன்கு பார்த்துக் கொள்.

உன் வாழ்வின் அனைத்து மூலாதாரமான இதை நன்கு பார். அப்படி, “உன் மனம்தான் நரகம் என்பதை, நீ புரிந்து கொண்ட உடனே, நீ சட்டென மனதைக் கடந்துவிட்டதை அறிவாய்… !”

“உன் வீட்டில் தீப்பற்றிக் கொண்டால் நீ உன் வீட்டிற்குள் எங்கேயிருந்தாலும்,

எப்படி யோசிக்காமல், சட்டென வெளியே குதித்துவிடுவாயோ !” அது போல.

இதை நன்றாகப் புரிந்துகொள். ( …ஓஷோ நான் ஒரு அழைப்பு ….. )

…………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக