இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!!

……………………………..

…………………………….

……………………………….

எப்ஸ்டீன் – செத்துப்போன ஒரு மனிதன் இப்போது எத்தனை பேர்
தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறான் பாருங்கள்….

உலகம் முழுவதும் எக்கச்சக்கமான கேள்விகள் ….

இவர் உண்டா, அவர் உண்டா….?
அய்யோ – அடப்பாவி – இவருமா …?
இதெல்லாம் எப்படி நடந்திருக்கும் …?
அத்தனை உயர்ந்த இடங்களில் இருந்தவர்கள் எல்லாம்
இத்தனை “சீப்” பான மனிதர்களா …?
இவர் போட்டோவில் மட்டும் தானா….?
இல்லை வீடியோவும் வெளிவருமா …???

………..

இந்த விஷயம் குறித்து விவரமாக அலச பொருத்தமான நபர்
யாராக இருக்குமென்று யோசித்தேன்… கிடைத்தார்….
அவரது விவரமான அலசல் கீழே …

………………………………………………..….

அளவுக்கதிகமான செல்வமும்,
அதிகாரமும் சராசரி மனிதனைத் தாண்டி,
தான் – மேலே என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வைக்கும்.

வீடு, பங்களா, சார்டட் ஃபிலைட் என்றெல்லாம் ஆன பின்
ஒரு கட்டத்துக்கு மேல் வேறு என்ன என்ற நிலை வருகையில் “செக்ஸ்” வருகிறது.

இங்கேதான் செக்ஸ் ஆபத்தானதாக மாறுகிறது.
காதலில்லாத , ரிலேஷன்ஷிப் இல்லாத செக்ஸ்
ஆபத்தானதாக மாறுகிறது.

என்னதான் ஓல்ட் ஸ்கூல் என்றாலும், இங்கேதான் அன்பு,
பாசம், காதல் மற்றும் மரியாதை போன்றவை மனித சமூகத்துக்கு கை கொடுக்கின்றன.

காதலுடன், அன்புடன் , மரியாதையுடன் கூடிய செக்ஸ் ஆபத்தில்லாதது மற்றும் உடலுக்கும் மனதுக்கும் சமூகத்துக்கும் நல்லது.

வெறும் “செக்ஸ்” அனைத்துக்கும் ஆபத்தானதாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதையும் விபச்சாரத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். விபச்சாரம் என்பது ஜஸ்ட் ஒரு டிரான்ஸாக்‌ஷன் என்ற அளவில் முடிந்துவிடுகிறது.

அடுத்து எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த அனைவருமே பீடஃபைல் அல்லது செக்ஸ் அஃபெண்டர் என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டுமா என்றால் இல்லை.

அதே நேரத்தில் எவரையும் விடுவிக்கவும் வேண்டாம், ஆதரவும் அளிக்க வேண்டாம்.

உதாரணமாக ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ், நோம் சாம்ஸ்கி போன்றவர்கள் விஷயத்தில் நமக்கு முழு உண்மையும்
தெரியாது என்ற நிலை எடுத்தால் போதுமானது.

இதைப்போன்ற பின்னணி கொண்ட ஒருவனுடன் அவர்கள் தொடர்பிலேயே இருந்திருக்கக் கூடாதுதான்.
இது தவறுதான். ஆனால் அவர்களின் தவறின் எல்லை எது
என்று நமக்குத் தெரியாது.

எப்ஸ்டீன் மைனர் பெண்களை வைத்து இதைப்போன்ற வேலைகளைச் செய்கிறான் என்பது அவர்களுக்குத்
தெரியாமல் கூட இருந்திருக்கலாம். அவன் இவர்களிடம் மறைத்திருக்கலாம்.

ஏனெனில் எப்ஸ்டினின் மெயின் வேலை –
வெறும் மைனர் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது மட்டும் இல்லை. அவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்கிறான். எதற்கு ? வேறு பல வேலைகளை முடிப்பதற்கு.

பணம் இல்லாதவர்களை பணத்தால் அடித்து இருக்கிறான்.

பணம் இருப்பவர்களை பெண்களால் அடித்து இருக்கிறான்.

எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்பவனாக இருந்திருக்கிறான். பிம்ப்களின் முக்கிய குணாதிசயமே இதுதான். இதுதான் அவர்களின் பலம்.

நோம்சாம்ஸ்கி மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங்க்ஸ் போன்றவர்கள் பிரமலமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு சார்ட்டட் ஃபிலைட், ஒரு தனித்தீவில் விடுமுறை போன்றவற்றை கொடுப்பதற்கு யார் இருக்கிறார்கள்.

எப்ஸ்டீன் கொடுத்து இருக்கிறான். இவர்கள் மாட்டி இருக்கலாம். அவன் தெளிவாக சமூகத்தின் அனைத்து செல்வாக்கான முகங்களையும் தன் வட்டத்தில் கொண்டுவந்திருக்கிறான்.

இவர்களும் தன் வட்டத்தில் இருப்பது தன் செல்வாக்குக்கு முக்கியம் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது.


இந்த விஷயத்தில் அவன் ஒரு அரசை விட , எந்த ஒரு அமைப்பையும் விட புத்திசாலியாக இருந்திருக்கிறான்.
ஒரு சமூக விஞ்ஞானியாக செயல்பட்டு இருக்கிறான்.
சோஷியல் எஞ்சினியரிங் எக்ஸ்பெர்ட்.

இதில் இதைப்போன்ற ஆளுமைகள் எப்படி மாட்டாமல் இருந்திருக்க முடியும்?

அதற்கு அவர்களுக்கு இந்தியாவில்
விடை இருக்கிறது.

தற்போதைய இந்தியா இல்லை.

கடந்த கால இந்தியா.

தார்மீகம், மதிப்பீடுகள் எனக் கொண்டு தலைவர்கள் வாழ்ந்த இந்தியா. அதன் மிச்ச சொச்சம் இன்னும் இந்தியாவில் இருக்கிறது.

நம் பழைய தலைவர்களை, ஆளுமைகளை இதைப்போன்ற பிம்ப்கள் நெருங்கவே முடியாது.
ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். யாரும் மனம் புண்பட வேண்டாம். அப்துல் கலாம், நல்லக்கண்ணு போன்றவர்களிடம் இவனைப் போன்ற பிம்கள் நெருங்க முடியுமா?

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்,
பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியைப் போன்ற ஒரு
அமெரிக்கக் கவிஞனை இதைப்போன்ற பிம்ப்
நெருங்கியிருக்க முடியும். ஆனால் பாரதி என்ற நெருப்பை எவனாலும் நெருங்கியிருக்க முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அளவுக்கதிகமான செல்வமும் ,
அளவு கடந்த அதிகாரமும் ஆபத்தான எல்லைக்கும்
இட்டுச் செல்லக்கூடும். இங்கே இந்தியாவிலும் பெரும் பணக்காரர்களும் ஆளுமைகளும் உள்ளனர். நாராயண மூர்த்தி , ஷிவ் நாடார் போன்ற செல்வந்தர்கள்
இருக்கிறார்கள். விஞ்ஞானிகள், இண்டெலக்சுவல்ஸ் இருக்கிறார்கள். அமெரிக்கா போல இவர்கள்
ஒரு பிம்பிடம் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் அமெரிக்காவின் பாஸிடிவ் என்பது
அனைத்து ஃபைல்களையும் வெளிப்படையாக மக்களுக்கு அளித்ததுதான். அனைத்தையும் வெளிக்கொண்டு வந்தது மற்றும் சட்ட ரீதியாக அணுகியது.

இந்தியாவில் இப்படி நடக்க வாய்ப்புள்ளதா?
அதுவும் இத்தனை பெரிய தலைகள் சம்மந்தப்பட்டு இருக்கையில்? வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.

மொத்தத்தில் அமெரிக்காவில் சிஸ்டம் சரியாக இருக்கிறது. ஆளுமைகளிடம் தார்மீகமும், மதிப்பீடும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. (நன்றி – அராத்து …!!! )

………………………………………………………

இந்தியாவில் இப்படி நடக்க வாய்ப்புள்ளதா …..? – என்கிற கேள்விக்கு, என்னுடைய பதில் –

எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ ….யாருக்குத் தெரியும்…..???

இந்தியாவிலும் இத்தகைய பெரிய ஆளுமைகள் இருக்கவே செய்கிறார்கள்…

ஆனால், அவர்கள் எல்லாம் மிக மிக புத்திசாலிகள்…..எப்சனிடம் பழகிய பெரிய மனிதர்கள் விட்டுப்போனது போல் தடயம் எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு புத்திசாலிகள்…..அதி சாமர்த்தியசாலிகள்…

தப்பித்தவறி அனுபவமின்மை காரணமாக மாட்டிக்கொள்ளும் ஒன்றிரண்டு அப்பாவி அசடுகளைத் தவிர …..(ரா…. நினைவிருக்கிறதா….. !!! ???)

இங்கே சில சமயங்களில் ஊழல் வழக்குகளுக்கு கூட ஆதாரம் கிடைத்து விடுகிறது….ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கு …. ???

இந்திய ஆளுமைகள் மிகவும் கெட்டிக்காரர்கள் – எல்லாவற்றிலும் … !!!

…………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக