நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

………………………….

………………………………………………………………………..

இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌.

இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு;

தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌.

தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு;

நீந்த தெரிந்து விடும்‌.

கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌.

…………………………………

முடியாது, முடியாது என்பவனும்‌, அது இல்லை, இது இல்லை” என்று

வாதிடும்‌ நாத்திகனும்‌ – மரக்கட்டைகள்‌…. !!!

” உண்டு ” என்பவனுக்கே

உள்ளம்‌ வேலை செய்கிறது.

எதையும்‌ கண்ணால்‌ கண்டால்தான்‌ நம்புவேன்‌, என்கிறவன்‌ –

முகத்தில்‌ மட்டுமே கண்களைப்‌ பெற்றவன்‌; அகத்திலே கண்ணில்லாதவன்‌.

ஊனக்‌ கண்‌ ஒரு கட்டத்திலே ஒளியிழந்து போகும்‌; ஞானக்கண்‌ எப்போதும்‌

பிரகாசிக்கும்‌.

…………………………………………….

நம்பிக்கையோடு முயன்றால்‌, சாணத்தில்‌ தங்கம்‌ கிடைக்கும்‌.

சந்தேகத்தோடு பார்த்தால்‌, தங்கமும்‌ சாணம்‌ மாதிரித்தான்‌ தெரியும்‌.

கல்யாணமான ஒருத்தி, பாலகிருஷ்ணன்‌ பொம்மையை வைத்துக்‌ கொண்டு,

“வாடா கண்ணா! வாடா கண்ணா!”

என்று அழைத்துப்‌ பார்க்கட்டும்‌ ……………….

மலடி வயிற்றிலும்‌ மகன்‌ பிறப்பான்‌…. !!!

திருநீறோ, திருமண்ணோ இடும்போது – கடனுக்கு இடாமல்‌ நம்பிக்கையில்‌ இடு.

அவை இருக்கும்‌ வரை மூளை பிரகாசிக்கும்‌.

நம்பியவர்‌ கெட்டாரா… ???

நம்பாதவர்‌ வாழ்ந்தாரா… ???

ஒரு தாயின்‌ தெய்வ நம்பிக்கையால்‌,

புத்தியில்லாது இருந்த நானும்‌ ஓரளவு புத்தியுள்ளவனானேன்‌.

என்னுடைய தெய்வ நம்பிக்கையால்‌ –

நான்‌ எதிர்பாராத அளவுக்குச்‌ சூழ்நிலைகள்‌ வாய்த்துள்ளன.

முப்பத்து மூன்று வருஷங்களுக்கு முன்னால்‌, பத்திரிகையில்‌ வேலைக்குச்‌

சேர்ந்தபோது, “ப்ரூப்‌ படிக்கத தெரியுமா?” என்றார்கள்‌; “தெரியும்‌” என்றேன்‌.

பழக முடியும்‌ என்று நம்பினேன்‌.

பழகிக்‌ கொண்டேன்‌.

” கவிதை எழுதத்‌ தெரியுமா?” என்றார்கள்‌; நம்பினேன்‌. எழுதினேன்‌.

“முடியும்‌” என்றால்‌ முடிகிறது;

தயங்கினால்‌ சரிகிறது.

கூந்தலை முடிக்கக்‌ கை இல்லாதவர்களுக்குத்தானே,

அது சரிந்து விழுகிறது.

நாளைக்குத்‌ திருச்சி போய்ச்‌ சேருகிறோம்‌’ என்று ராக்போர்ட்‌ எக்ஸ்பிரஸில்‌ ஏறு;

அது திருச்சி போய்ச்‌ சேர்ந்துவிடும்‌.

இதுவா…? போகுமா …?” என்று சந்தேகப்படு; அது புறப்படவே புறப்படாது.

…………………….

சீதை பத்தினி என்ற நம்பிக்கையில்தான்‌, ராமன்‌ தைரியமாக இருந்தான்‌;

ராமன்‌ வருவான்‌ என்ற நம்பிக்கையில்தான்‌ சதை உயிரோடிருந்தாள்‌.

ராமன்‌ மீது நம்பிக்கை வைத்தே, விபீஷணன்‌ அவனோடு சேர்ந்தான்‌.

இராவணன்‌ மீது நம்பிக்கை வைத்தே, கும்பகர்ணன்‌ அவனோடிருந்தான்‌.

நம்பினால்‌ கை கொடுப்பது நம்பிக்கை….

…………………………….

ஈஸ்வரனை நம்பி நம்பி விழு.

பகவானை நம்பி அவன்‌

பாதாங்களில் விழு.

விழுந்த பின்‌ எழுவதற்கு உன்‌ கைகள்‌

தாம்‌ பயன்படுகின்றன என்றால்‌, அந்த

கைகள்‌ அவனுடைய கைகள்‌ என்று அர்த்தம்‌.

அங்கே போனால்‌ அது கிடைக்காது; இங்கே போனால்‌ இது கிடைக்காது என்று சந்தேகப்பட்டால்‌, நீ எங்கேயும்‌ போக மாட்டாய்‌; எதிலும்‌ முன்னேற மாட்டாய்‌. இருந்த இடத்தில்‌ இருந்தே சாவாய்‌….

…………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக