………………………………….

…………………………………….
மூன்று பயணிகள் ஒரு வெயிட்டிங் ரூமில் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் அறுபது வயது முதியவர். அடுத்தவர் நாற்பத்தைந்து வயதுக்காரர்.
மூன்றாமவர் முப்பது வயது ஆசாமி. அவர் இப்படிக் கூறினார். “நேற்றிரவு நான் ஒரு அழகான பெண்ணுடன் இரவைக் கழித்தேன். அவளைப் போன்ற அழகி உலகிலேயே கிடையாது. நான் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது!”
அதைக் கேட்ட நடுத்தர வயதுக்காரர் எரிச்சலுடன் குறுக்கிட்டார். “போதும் , உன் உளறலை நிறுத்து. நான் என் வாழ்வில் பல பெண்களைப் பார்த்தவன். வார்த்தைகளால் விளக்க முடியாத இன்பம் என்று ஒன்று கிடையவே கிடையாது.
நேற்றிரவு நான் இன்பத்தின் நிஜமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன். நேற்று என்னை ஒரு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அதுபோன்ற ஒரு சுவையான உணவை நான் வாழ்நாளில் உண்டதேயில்லை”.
வயதான மூன்றாவது மனிதர் தனது கருத்தை வெளியிட்டார். “நீ சொல்வதும் உளறல்தான்..!!!
நிஜமான இன்பம் என்ன என்று கூறுகிறேன் கேள். இன்று காலை எனக்கு நன்றாக மலம் போயிற்று. வயிறு சுத்தமாயிற்று. அது வர்ணனைக்கு அப்பாற்பட்ட சுகம்..! அதுபோன்ற ஆனந்தத்தை நான் இதுவரை அனுபவித்ததேயில்லை”.
உலக சுகங்கள் எல்லாம் இதுபோன்றவை தான். வயதுக்குத்தகுந்தபடி அவை மாறுகின்றன. அதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.
முப்பது வயதில் சிற்றின்ப சுகம் பெரிதாக இருக்கிறது.
நாற்பது வயதில் உணவின் சுவை உயர்ந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் நாற்பத்தைந்து வயதில் மனிதர்கள் உடல் எடை கூடுகிறது.
அறுபது வயதில் உணவின் மீது நாட்டம் அகன்றுவிடுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருப்பதே பெரிய காரியமாகத்தெரிகிறது.
எனவே மூவர் கூற்றிலும் உண்மை இருக்கிறது. இந்த இன்பங்களுக்காகப் பல பிறவிகள் எடுத்துத் தொலைத்துவிட்டீர்கள். இன்று வரை அதன்மூலம் எந்த லாபமும் கிடைக்கவில்லை.
ஒரு பெண் அழகில்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களிடம் காமஇச்சை என்ற வர்ணம் உள்ளது. எனவே அவள் அழகாகத் தோன்றுகிறாள்.
சிறுமி உங்களை வசீகரிப்பதில்லை. காரணம் அங்கே காம இச்சை உருவாகவில்லை.
வயதான மனிதர் தனது நிறத்தை இழந்து விடுகிறார். உங்கள் முட்டாள் தனத்தைப்பார்த்து அவர் சிரிக்கிறார். ஆனால் அதே முட்டாள்தனத்தை முன்பு அவரும் செய்திருக்கிறார். ஒருநாள் பிறரைப் பார்த்து நீங்களும் சிரிப்பீர்கள்.
தான் செய்து கொண்டிருப்பது முட்டாள்தனமான காரியம் என்று எவர் ஒருவர் நினைக்கிறாரோ அவரே விழிப்புணர்வு பெற்ற மனிதராவார்.
நிறம் என்ற முட்டாள்தனம் உங்களிடமிருந்து விலகிப் போகும்போது சிரிப்பது பெரிய காரியமல்ல. அந்த நிலையில் யார் வேண்டுமானாலும் சிரிக்கலாம்.
நிறமும் , முட்டாள்தனமும் உங்களிடம் தீவிரமாக இருக்கும்போதே –
நீங்கள் விழிப்புணர்வு பெற்றால் நல்லது.
உங்கள் வெளியுலகம் என்பது உங்கள் உள்ளேயிருந்து வெளிப்படுவதுவேயாகும்.
வெளியே இருப்பது வெறும் திரைதான் என்று உணர்ந்தால் அதுதான் பெரிய விஷயம்… விழிப்புணர்வு என்பது அது தான்…..
……………………………………………………………………………………………………………………………………………………………………………….



காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…