……………………………………

.படம் ; ‘ ஏழிசை மன்னர் எம்.கே.டி.பாகவதருடன் உணவருந்தும் மக்கள்திலகம் எம்ஜிஆர்
……………………………….
எம்.கே.டி பாகவதர் நடித்த ‘ அமரகவி ‘ படத்துக்கு வசனமும் பாடல்களும் நான்தான்.
பாகவதர் தங்கதட்டில் தான் சாப்பிடுவார் என்று கேள்விப்ட்டிருக்கிறேன். பட விஷயமாக நான் அவருடன் தங்க நேர்ந்தது அன்று,
சாப்பாட்டு நேரத்தில் பாகவதரின் அறைக்கு சென்றேன். அப்போது நிஜமாகவே தங்கத்தட்டில் பாகவதருக்கு சாப்பாடு வைக்கப்பட்டு அருகே ஒரு வாழை இலையில் எனக்கு சாப்பாடு பரிமாறப்பட்டு இருந்தது.
அப்போது சாப்பிட வந்த பாகவதர் தன் உதவியாளரிடம் என்னை அறிமுகப்படுத்தி, ‘இவர் எனது பட வேலையாக என்னுடனே இருக்கும் நண்பர். இவர் இங்கிருக்கும் வரை எனக்கு தங்கத்தட்டில் சாப்பாடு போடுகிற மாதிரி இவருக்கும் தங்கத்தட்டிலேயே பரிமாற வேண்டும்’ என்று உத்தரவு போட்டார்.
அதன் பிறகு எனக்கும் தங்கத்தட்டில்தான் சாப்பாடு. அவரிடம் விசாரிச்சேன் தங்கத்தட்டு 110 பவுனில் செய்ததாம் !
– உவமைக் கவிஞர் சுரதாவின் பதிவிலிருந்து .
( பாகவதரின் இறுதி நாட்கள் மிகப்பரிதாபமாக இருந்தன…. இவற்றைப்பற்றி நான் ஏற்கெனவே வேறு இடுகைகளில் விவரமாக எழுதி இருக்கிறேன்….. )
………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….