அதானியும், அம்பானியும், இப்படி ஆனது எப்படி ..??

………………………………

………………………………

ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்..!

ஒரு குரங்க நூறு ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சானாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்கை காசு கொடுத்து வாங்கிக்குவாங்களாம்னு யோசிச்சாங்களாம். இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்களை புடிச்சு வியாபாரி கிட்ட கொடுத்து, அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம். இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய மக்கள் குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.

கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தருவதாக சொன்னானாம். அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனே குரங்கு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பாக்கி இருக்கிற குரங்குகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி.

ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு.. ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒன்னுக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க.

ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்க 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி.

தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற குரங்குகள எல்லாத்தையும் பார்த்து பராமரிக்க சொல்லிட்டு, தன்னோட ஊருக்கு போனானாம் வியாபாரி.

பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.

அத பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்க 700 ரூபாய்க்கு விக்கிறதா சொன்னானாம்.

காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க.

அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகளை வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு.

ஒரு குரங்க 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகள வாங்க, ஏழைங்க கடனவுடன வாங்கி, கொஞ்சம் குரங்குகள வாங்குனாங்களாம்.

குரங்குகள எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம்.

யாருமே வரல..! எல்லாரும் அந்த வியாபாரியோடு வேலைக்காரன பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க.

ஆனா அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிட்டான்..!

அப்பதான் ஊர் ஜனங்க,

ஒண்ணுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகளை 700 ரூபாய் கொடுத்து வாங்கி, திரும்ப விக்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணர்ந்தாங்க… !!!

இந்த வியாபாரத்துக்கு பேருதான் பங்குச் சந்தை…….. ஷேர் மார்க்கெட் ….!!! ( படித்து ரசித்தது…)

……………………………………………

இந்த குரங்கு வியாபாரத்தில சொற்ப ஆட்கள் தான் பணக்காரங்க ஆக முடியும். …

அவர்கள் அதானி, அம்பானி மாதிரி ….

பெரும்பாலான ஆட்களுக்கு குடிதான் மூழ்கிப்போகும்…..

நம்ப மாதிரி …!!!

………………………………………………………………………………………………………………………………………………………………….

ithu thani –

………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அதானியும், அம்பானியும், இப்படி ஆனது எப்படி ..??

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எததனையோ லட்சக்கணக்கான சாதாரண மிடில் கிளாஸ் மனிதர்கள் ரிலையன்ஸ், விப்ரோ போன்ற பல பங்குகள் வாங்கி கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறார்கள். ஷேர் மார்க்கெட் என்பது கொஞ்சம் ஸ்பெகுலேடிவ்தான். இருந்தாலும் சாமானியர்களும் பணம் பண்ண உதவுகிறது. அதனால் ஜாலிக்காக படித்தாலும் அதில் உண்மை இல்லை.

    (எனக்கு ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ண இஷ்டம் இல்லை. அது சூதாட்டம் என்ற கொள்கை உடையவன் நான்)

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

vimarisanam - kavirimainthan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி