என்ன என்ன சாபிட்டா உடலுக்கு நல்லதுன்னு பேசும் பலர் …. !!!

…………………………………..

……………………………………

என்ன என்ன சாப்பிட்டா உடலுக்கு நல்லதுன்னு பேசும் பலர் அதைத்தான் சாப்பிடுகிறார்களா என்ற doubt இருக்கிறது…

இவர்கள் பேசும் நெல்லிக்காய், அவரை, மொச்சை வெள்ளைக்கரு, வாழைப்பழம் எல்லாம் வீராப்பா இருக்கும்.. ஆனா பேசும் பலரின் பில்டிங் structure ல் இதைச் சாபிட்ட எந்த அறிகுறியும் இருக்காது.

இந்தியா போனபோது ஒரு annual check எடுக்க போனோம். Electrocardiogram எடுக்க வேறு ஒரு doctor வர வேண்டி இருந்தது..

Shift முடித்து விட்டு வந்து எடுத்தார்.

இத்தனைக்கும் அவர் lift ல் வந்து test எடுத்து முடிக்கும் வரை மூச்சு வாங்கிக் கொண்டு வியர்த்து கொண்டு இருந்தார்.

Test முடியும் வரை அவர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற அளவிற்கு ஒரு breathing discomfort ல் இருந்தார்.

அவருக்கு resting heart rate என்னவென்று தெரியவில்லை.. பார்க்கும் போது test அவருக்குத்தான் தேவை என்று கூட தோன்றியது..

இந்தியாவில் உடல் நலனை advice செய்யும் வேலை என்பது BCCI போன்றது.

வழக்கமாக கிரிகெட் மட்டையை வாழ்க்கையில் பிடிக்காதவர்களே இந்தியாவின் கிரிகெட் தலை எழுத்தை நிர்ணயிப்பதை போன்று வித்தியாசமான ஒன்று…. !!!

நான் பல நாட்களாகவே இதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால், என்வேலையை சுலபமாக்கி விட்டார் – கனடாவிலிருந்து திரு. ஸ்ரீதர் ஏழுமலை இதை எழுதியதன் மூலம் …!!! நன்றி நண்பரே ….!!!

இந்த மாதிரி நபர்களின் பேச்சைக் கேட்கும்போது பலருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படும்…. ” அடடா நாம் இப்படியெல்லாம் செய்வதே இல்லையே “என்று….

எனக்கு கூட சில சமயம் அப்படி தோன்றியதுண்டு. ஆனால், இந்த வயதுக்கு மேல் இப்படியெல்லாம் சாப்பிட்டு இன்னும் எத்தனை வருடம் இருந்து என்ன கிழிக்கப்போகிறோம் என்று நினைத்து லைட்’டாக விட்டு விடுவேன்.

“ஊருக்குத் தான் உபதேசம் …. அதுவும் காசு வாங்கிக்கொண்டு தான் ….!!! “

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to என்ன என்ன சாபிட்டா உடலுக்கு நல்லதுன்னு பேசும் பலர் …. !!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எது நல்லது என்று நமக்கு உபதேசம் செய்பவர்கள், தாங்களும் அவற்றைக் கடைபிடிப்பார்கள் என்று எதற்காக எதிர்பார்க்க வேண்டும்?

    இதை இதைச் செய்தால், சாப்பிட்டால் இந்த இந்த நன்மை வரும், இல்லைனா கெடுதல் என்று மருத்துவர்கள் (சித்த மருத்துவர்கள் அல்லது அலோபதி) அறிவுரை சொல்றாங்க. அதைக் கேட்பதும் கேட்காமல் இருப்பதும் நம் இஷ்டம். எனக்கும் (எங்களுக்கும்) பல முறை இந்தச் சந்தேகம் வரும்… நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவு இல்லையே இது என்று (சிறு தானியங்கள் போன்று). அவங்கள்லாம் இரண்டு மூன்று வேளை சாதம் தானே சாப்பிட்டாங்க என்று தோன்றும். ஆனால் அவர்களுக்கிருந்த உடலுழைப்பு நமக்கு இல்லை என்பது நிதர்சனம்தானே.

    நாம, நம்ம குழந்தைகள்ட, கோபப்படாதே, திருடாதே, பிறர்க்கு உதவி செய் என்றெல்லாம் பல அறிவுரைகள் சொல்றோம். முதல்ல நீ அதைக் கடைபிடித்துவிட்டு பிறகு எனக்குச் சொல் என்று குழந்தைகள் சொல்ல ஆரம்பித்தால்?

    உணவில் சில அறிவுரைகளை நாம் கடைபிடிக்கத் தயக்கமாக இருக்கும். இது புதிய பிரச்சனைகளைக் கொண்டுவந்துவிடுமோ என்று. உதாரணமா ஒரு மருத்துவர், பச்சையா காய்கறிகளைச் சாப்பிடுங்க என்று சொல்கிறார், அதிலும் கொத்தவரை கோவைக்காய் போன்று. ஆனால் இதனைக் கடைபிடிக்க ரொம்பவே தயக்கம்.

    சிலர் (மருத்துவர்கள்) பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் உடலுக்கு நல்லதல்ல. இனிப்பும் அப்படியே. சாதம் தோசை போன்றவை கார்போஹைட்ரேட் என்பதால் அவற்றை நாம் எடுத்துக்கொண்டால் (இரண்டு மூன்று தடவை ஒரு வாரத்தில். அதற்கு மேல் அல்ல), நம் தட்டில் அவை 25 சதம்தான் இருக்கணும், 25 சதம் சமைத்த காய், 25 சதம் ப்ரோட்டீன், 25 சதம் சாலட்-சமைக்காதவை மீதி என்கிறார்கள்.

    என்னுடைய அனுபவப்படி, இனிப்பு முற்றிலுமாகத் தவிர்க்கணும், டயபடீஸோ இல்லையோ. அதிலும் எண்ணெய் கலந்த இனிப்பு உடலுக்கு மிகக் கெடுதி (அல்வா, மைசூர்பாக் என்று பலதும்). சாதம் மிகக் குறைவாகச் சாப்பிட்டால் நல்லது. (அதுக்கு பதிலா ஐந்து சப்பாத்தி கூடாது. ஒரு சப்பாத்திதான்) பால் பொருட்கள் தவிர்ப்பது நல்லது. இதனை (இனிப்பைத் தவிர்க்க ரொம்ப கஷ்டப்படுகிறேன்) நான் பல வருடங்களாகத் தொடர்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.