………………………………………………….

…………………………………………………
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்கிறார் ….
” முன்னாள் பிரதமர் PV நரசிம்ம ராவு-க்கு 17 மொழி தெரியும். அது தெரிந்தும் கூட இன்னமுமா நாம் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்?? “
———————-
ஒக்கே நாயுடுஜீ. வாஸ்தவமான பேச்சுத்தான். உங்க கட்சி பேர் தெலுங்கு தேச கட்சி.
அதையும் ஹிந்தி தேச கட்சின்னு மாத்திட்டு தேர்தலில் நிற்கவும்… !!!
To remind, இந்தியா மொழிவாரியான மாகாணங்களின் கூட்டமைப்பு. இதுக்கு வழி வகுத்து கொடுத்ததே ஆந்திர மக்கள்தான்.
பொட்டி ஶ்ரீராமுலு என்ற தேசியவாதிதான் மொழிவாரியாக மாநிலம் வேண்டும் என்று 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதை அடுத்து நடத்த மொழிப் போரட்டத்தின் விளைவே மொழிகள் கொண்டு முதல் மாநிலமாக ஆந்திர பிரதேஷ் உருவானது.
1952 ல் நேரு வேறு வழியில்லாமல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வழி வகுத்தார். விதை ஆந்திர மக்கள் போட்டது.
இன்னிக்கு வரைக்கும் எல்லா பிராந்திய முக்கிய மொழிக்கும் இந்தியாவில் மாநிலங்கள் உண்டு. ஆனா இந்திக்கு மட்டும் ஏன் ஹிந்தி dedicated state இல்லை தெரியுமா?? ஹிந்தி பேசும் states பலது இருக்கும். ஆனா டெடிகேட்டட் state ஒண்ணு கூட இல்லை..
சொந்தமா சமைத்து சாப்பிடும் பழக்கம் உள்ள வீட்டில் இரவில் ஏதோ ஒரு ஐட்டம்தான் இருக்கும். தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, மராத்தி mahatastra போன்ற மாநிலங்கள்.
But அதுவே ரா பிச்சைக்கு – நைட் டின்னர் அப்படி இல்லை. எல்லார் வீட்டிலும் பிச்சை எடுத்து மொத்த ஐட்டங்களின் கலவைதான் அவர்களின் plate ல் இருக்கும்.
ஹிந்தியும் அப்படி உருவான ஒரு மொழித்தான். Uttar Pradesh, Madhya Pradesh, Bihar, Rajasthan, Haryana.. சொந்த மொழியைவிட்டு விட்டு ராபிச்சைக்கு மொழியை தாரை வார்த்த மாநிலங்கள்.
சமைத்தவனுக்குத்தான் சோற்றின் அருமை தெரியும்.
இது உணர்ச்சியின் ஊடல்.
ராபிச்சைக்கு கலைவைதான் சுவை.
அது பசியின் தேடல்.
பல உணவு கலவைகளின் ராபிச்சை format ஐ இந்தியா முழுவதும் திணித்து தனித்துவமான இட்லி, புட்டு, கேரள சதயா, பெசரட்டு, கோங்கரா சட்னி, புரன் போலி, வடா பாவ் போன்ற தனித்துவத்தை அழித்துவிட்டு எல்லோருக்கும் காய்ந்த ரொட்டி துண்டுகளை வழங்குவதுதான் -one nation one language policy.
ஓட்டு வாங்கிவிட்டு டெல்லியில் இருந்து கொண்டு வரலாறு தெரியாமல் பேசுவது மடமைத்தனம் நாயுடுகாரு…. !!!
மொழி ஒரு பண்பாட்டின் அடையாளம்.
கலாச்சாரத்தின் தூண்.
அதை அசைக்கத்தான், அரசியல் மூலம் அழிக்கத்தான் – அதிகாரம் கொண்டு போராடுகிறார்கள்.
மொழியை அடமானம் வைப்பது நம் பல்லாயிரக்கணகான கலாச்சார வாழ்வியலின் அடையாளத்தை அடகு வைப்பது போன்றது…!!!
- இதனை முன்மொழிந்தவர் திரு ஶ்ரீதர் ஏழுமலை –
- வழி மொழிகிறேன் நானும்… !!!
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



மொழி என்பது ஒரு இனத்தின் கலாச்சாரம். மொழி சிதைந்தால் கலாச்சாரம் சிதையும். ஹிந்தியை எந்த மாநிலமும் ஏற்காது. ஒருவன் தனது தேவைக்காக அரபு மொழியைக்கூடக் கற்றுக்கொள்வான். ஆனால் அரபு மொழி தாய்மொழியாக ஆகிவிடாது. இந்தி மொழி என்பது சமீபத்தில் வந்த மொழி. அதுவும் மாநில அரசியல் அதிகமாக ஆகிவிட்ட இந்த அறுபது ஆண்டுகளில், ஹிந்தி மொழியை எங்குமே வலிந்து திணிக்க முடியாது. மீறினால், அந்த மொழிக்குக் கடும் எதிர்ப்பே விளையும்.
நான் இருக்கும் இடத்தில் இயைந்து செல்ல வேறு மொழியை நான் விரும்பிப் பேச ஆரம்பிக்கிறேன். ஆனால் என்னுடைய மொழி தமிழ்.
இது வடவர்களுக்குப் புரியாது. தமிழுடன் ஆங்கிலம் கற்பது என்னுடைய வாழ்வுக்கு. அதே சமயம், என்னுடைய வாழ்வு உத்திரப்பிரதேசத்தில்தான் இருக்கப்போகிறது என்றால் விரைவில் ஹிந்தியும் கற்றுக்கொள்வேன். அதுதான் ஒவ்வொரு தமிழனின் அல்லது மாநில மொழிக்காரனின் எண்ணமாக இருக்கும்.
நரசிம்மராவ் அவருடைய சொந்த ஆர்வத்தில் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொண்டார். நாயுடுவின் அரசியல் ஆர்வம் அவரை ஹிந்தி மொழியப் பேச வைத்தது. தேவை இருப்பின் எத்தனை மொழி வேண்டுமானாலும் ஒருவனால் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு மொழியிலும் 100-200 வார்த்தைகள், வாக்கியங்கள் தெரிந்திருந்தாலே பேசிவிட முடியும். அது பெரிய வித்தையில்லை.
ஒரு வருடம் வெளிநாட்டில் வாழ்ந்த தமிழன், அந்த ஊர் ஆங்கிலத்தைப் பேசுவதைப் பார்க்க இயலும். (accent) அதனால் மொழியைக் கற்றுக்கொள்வது பெரிய வித்தையில்லை. நாமென்ன ஒவ்வொரு மொழியிலும் முனைவர் பட்டமா வாங்கப்போகிறோம்? தொழிலுக்காக கமலதாசன் (திமுகவின் தாசன்) மலையாளம் தெலுங்கு ஹிந்தி போன்ற பல மொழிகளில் புலமை பெறவில்லையா?
இன்றைக்கு ஒருவரைச் சந்தித்தேன். சரளமாக கன்னடம் பேசினார். நானும் பேச முயற்சித்தேன். இருவரும் சில நாட்களாக கன்னடத்தில்தான் பேசிக்கொள்வோம். இன்று அவர், நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். நான் இந்த ஊர்தான் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எந்த ஊர் என்றேன். அவர், திருநெவேலி, தென்காசி என்றார். அட.. எங்க ஊர் என்றேன். இருந்தும் இருவரும் கன்னடத்தில் பேசிக்கொண்டோம். மொழியை, தேவை கருதி கற்றுக்கொள்ள முடியும். உபயோகிக்க முடியும். ஆனால் தாய் மொழியை, இன்னொரு மொழியைக் கொண்டு மாற்றிவிட முடியாது. அப்படி மாற்ற நினைப்பவர்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். எதிர்ப்பு மாத்திரமல்ல, வெறுப்பையும்.
One Nation, One Language – இது நம் நாட்டிற்கான வழி அல்ல. இது Canada USA UK அல்ல. இது பல்வேறு மொழி, கலாச்சாரம் கொண்டவர்கள் வாழும் பாரதம். இவர்களை ஒருங்கிணைப்பது மதம் சார்ந்த பழக்கங்கள் நம்பிக்கைகளாக இருக்கலாம், ஆனால் மொழி வேறு. அதை நினைவில் கொள்ளவில்லை என்றால் பாரதத்திற்கு ஆபத்தைக் கொண்டுவரும்.