…………………………………………………..

……………………………………………………
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் – காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசி வருவதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது ….. கீழே –
உடனடியாக இது சாத்தியம் இல்லையென்றாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில், இப்படி ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் விஜய்யுடன் வந்து விட்டால், விசிக மற்றும் இதர கட்சிகள் அதிக முயற்சி இல்லாமல், தன்னாலே வ்ந்து விடக்கூடும்.
இந்த கட்சிகள் எல்லாவற்றிற்குமே – ஆட்சியில் பங்கு என்பது மிகப்பெரிய விஷயம்…. !!!
இப்படி ஒரு கூட்டணி உருவாகும் பட்சத்தில் – திமுக-வின் ” 26-ல் மீண்டும் ஆட்சி ” கனவு – பகற்கனவாகவே போய் விடலாம்…..!!!
………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



என்க்கு ஒன்று உண்மையாகவே புரியவில்லை. ஆனானப்பட்ட விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது 8 சதம் வாக்குகள் மாத்திரமே பெற்றார். அப்போது அதிமுக 35, திமுக 30 சதம். இப்போ விஜய்க்கான 25 சத வாக்குகள் எங்கிருந்து வரும்? தற்போது திமுக 20, காங்கிரஸ் 5, விசிக 3, கம்யூனிஸ்ட் 4, மதிமுக 0.5, மத வாக்குகள் 10, அதிமுக 20-25, பாஜக 10, பாமக 3, நாம் தமிழர் 6 என்று வைத்துக்கொண்டால், விஜய்க்கான 25 சதம் எங்கிருந்து வருகிறது? விஜயகாந்திற்குப் போடாத பொது மக்கள் விஜய்க்குப் போடுவார்களா?
என்னுடைய அனுமானம் விஜய்க்கு 6-8 சத வாக்குகள் கிடைக்கலாம். இது தவிர மத வாக்குகள் மடை மாறினால் இன்னும் ஒரு 3 சதம். இதுவே நான் அதிகமாக நினைத்திருக்கிறேனோ என்று தோன்றுகிறது.
விஜய்க்கு வாக்கு சதம் அதிகமாகவேண்டும், அப்போதுதான் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதனுடன் சேரும் என்ற நம்பிக்கையால்தால், அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கிறார், விஜயுடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகளைப் பரப்புகின்றனர்.