…………………………………………….

( என் குறிப்பு – 1964-ல், ஜபல்பூரில், (மத்திய பிரதேசம்)
ஜன்சங் கட்சியின் (அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின்
பெயர்….!!!) ஒரு பொதுக்கூட்டத்தில் தான் –
நான் முதல்முறையாக வாஜ்பாய் அவர்களைப் பார்த்தேன்..
அந்தக்கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக
வாஜ்பாய் அவர்கள் பேசினார் ( ஹிந்தியில் தான்..!!!)
அன்று முதல் இன்று வரை, வாஜ்பாய் அவர்கள் எனக்கு
மிகவும் பிடித்த ஒரு தலைவர் … அவர் எதிர்க்கட்சித் தலைவராக
இருந்தபோதும், ஆட்சியில், அதிகாரத்தில், இருந்தபோதும் கூட …. !!!
வாஜ்பாய் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்…
கவிதை மாதிரி இருக்கும் … இயல்பிலேயே அவர் ஒரு
கவிஞர் அல்லவா …?? நகைச்சுவை உணர்வு மிக்கவர்…பண்பானவவர் …அரசியல் எதிரிகளைக் கூட வசை பாட மாட்டார் … நாகரிகமாகவே குறை கூறுவார்…
நான் நிறைய தடவை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.அவருக்கென்று எப்போதும் என் மனதில் ஒரு தனி இடம் உண்டு… )
- கீழே முக்கியமான தற்கால அரசியலில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி, அராத்து அவர்களின் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் ….
……………………………………………….………………..
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை – Delimitation
ஒரு நிறுவனத்துக்கு புது மேலாளார் வந்தால் இரண்டு வகையாக செயல்படுவார்கள்.
முதல் வகை : உள்ளே இருக்கும் சிஸ்டம், ஒழுங்கீனங்கள், பணியாட்களின் அலட்சியம், ரிப்போர்டிங் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், புது வியூகம் வகுப்பது, இருப்பதை வைத்து தொழிலை முன்னேற்றுவது , வருமானத்தை பெருக்குவது, லாபத்தைப் பெருக்கி, சம்பளத்தை உயர்த்துவது என செயல்படுவார்கள். அதன் பின் புது ரூல் போடுவது , அலுவல் வேலைகளை மாற்றி அமைப்பது, ரிப்போர்டிங் போன்ற சிஸ்டத்தை மாற்றுவது என ஈடுபடுவார்கள்.
இரண்டாவாது வகை: இவர்கள் ரூல்ஸ் ரங்காச்சாரி.
- பதவி ஏற்றதுமே , அட்டெண்டென்ஸ் சரியாக இல்லை, கணக்கு வழக்கு சரியாக இல்லை, வேலை நேரம் சரியில்லை, ரிப்போர்டிங் ஃபார்மேட் சரியில்லை என அனைத்தையும் நோண்டி சீர்படுத்திக்கொண்டே செல்வார்கள். மெமோ கொடுப்பார்கள், வேலையை விட்டுத் தூக்குவார்கள் , காஸ்ட் கட்டிங் செய்வார்கள். தொழிலும் வியாபாரமும் ஏற்கனவே இருந்ததை விட அதள பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்.
முதல் வகைதான் வாஜ்பாய் முதல் மன்மோகன் சிங் வரை செய்தது. இரண்டாவது வகை யாரென்று சொல்லவும் வேண்டுமோ? இப்போதுதான் கண்முன்னே காட்சிகள் அரங்கேறி சிரிப்பாகச் சிரித்துக்கொண்டு இருக்கிறதே.
பொருளாதாரம் கீழே போய்க்கொண்டு இருக்கிறது. பணச்சுழற்சி இல்லை, வேலை வாய்ப்புகள் இல்லை, சிறு குறு தொழில்கள் நடத்தவே முடியாத நிலை. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பேச்சு மூச்சி இல்லை. எந்த திட்டங்களும், செயலாக்கமும் இல்லை.
ஏன் இல்லை…?? இவைகளை எல்லாம் செய்ய வக்கு வேண்டும். மேலும் இவைகளை செய்வது சிரமம். கடுமையாக உழைக்க வேண்டும்.
- எது சுலபம்? இருக்கும் சட்டங்கள், நடைமுறைகளை எல்லாம் மாற்றிக்கொண்டே இருப்பது.
பேப்பரில் இருக்கும் ஒன்றை அழித்து விட்டு இன்னொன்று எழுதுவதுதானே சுலபம்? மெஜாரிட்டியும் இருக்கிறது. என்ன எழவு சில எதிர்கட்சிகள் க்ரியாங், க்ரியாங் எனக் கத்தும். அதுவும் நல்ல எண்டர்டெயின் மெண்ட்தான். ஜாலியாஹ பொழுது போகும்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் உத்தமர்களா ? ஏதோ தங்கள் கட்சியின் பழைய கொள்கைகளை பழக்க தோஷத்தில் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பதால் கத்துவார்கள். அவர்கள் பின்னணியில் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதை ஈடி ஐ விட்டு கோடி காட்டினால் அடங்கி விடுவார்கள்.
கடந்த பத்தாண்டுகளாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. டீ மானிடைசேஷனில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அத அப்டி மாத்து, இத இப்டி மாத்து என மாத்து மாத்து என மாத்திக்கொண்டிருக்கிறார்கள். நம் நேசத்துக்குரிய நாடு வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும், அறிவிலும், நாகரிகத்திலும் கீழே போய்க்கொண்டே இருக்கிறது.
இந்த மாற்றம் மற்றும் மறுவரை மேளாவில் – மும்மொழிக் கொள்கைக்கு அடுத்து நடக்கும் மேளா தான் – நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.
இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால் எந்த சிக்கலான விஷயம் என்றாலும், தெளிவாக அறிவுபூர்வமாக யோசித்தால் தெளிவு கிடைக்கும்.
மாபெரும் ஜனநாயக நாட்டில் மக்கள்தான் முதன்மையானவர்கள். எனவே மக்கள் தான் ஓட்டுப் போட்டு ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறவர்கள். மக்கள் தான் அடிப்படை. எனவே மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும். அதன்படி சுதந்திரத்திற்குப்பிறகான முதல் தேர்தலில் வரையறுக்கப்பட்டு, 489 தொகுதிகளுடன் முதல் தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
அதன்பிறகு 1957 – 494 , 1967 – 520 , 1971- 521 , இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வந்து 1977 இல் 542 ஆக ஆகி இருக்கிறது. (இதை நான் இணையத்தில் தேடி எடுத்தேன். ஒரு சில தவறுகள் இருக்கலாம்). கிட்டத்தட்ட 75 வருடங்களாக 50 தொகுதிகள் அளவுக்குத்தான் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. அதுவும் சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால்.
முதல் இந்தியத் தேர்தல் 1951- 52 இல் ஓட்டுப்போட தகுதியான வாக்காளார்கள் – 19 கோடி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் – 91 கோடி. 2024 தேர்தலில் 96 கோடியாக இருக்கக் கூடும்.
இப்போது மக்கள் தொகை கன்னாபின்னாவென ஏறி மாறி விட்டது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறுதானே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்? அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை என வாதங்கள் வைக்கப்படலாம்.
இந்தியாவில் மாநிலங்களே இல்லை, ஒரே நாடு மட்டும்தான் என்றால் இந்த வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். பல மாநிலங்கள் சேர்ந்ததுதான் இந்தியா என்பதால், மாநில பிரதிநிதித்துவம் என்ற விஷயமும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் வெறும் மக்கள் தொகையை வைத்து நாடாளுமன்ற தொகுதியை வரையறை செய்யக் கூடாது.
அப்படிச் செய்தால், இந்தியாவை நடத்த இவ்வளவு செலவாகிறது, மொத்த செலவை மொத்த மக்கள் தொகையால் வகுத்து , ஒரு நபருக்கு இவ்வளவு என அந்தந்த மாநிலங்கள் கொடுத்து விடுங்கள் எனச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால் தமிழ்நாட்டுக்கு நல்ல லாபம். உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பணம் கொடுக்க முடியாமல் கடனாளி ஆக, தமிழ்நாடு நல்ல நிதி கையிருப்பு மாநிலமாக மாறும்.
- இன்னுமொரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
மூன்று அண்ணன் தம்பிகளுக்கு ஆளுக்கு 2 கடை என பிரித்துக்கொடுக்கப்படுகிறது. அவை பக்கத்துப் பக்கத்தில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் அளவில் பெரியவை.
இந்த வியாபாரத்துக்கு இவ்ளோ பெரிய கடை வேண்டாம். இதை மறு சீரமைத்து , 15 கடைகளாக மாற்றி சிலதை வாடகைக்கு விடலாம் என முடிவாகிறது.
இப்போது ஆளுக்கு 5 கடைதானே கிடைக்க வேண்டும்?
பெரிய அண்ணன், எனக்கு 4 பசங்க ஆயிட்டாங்க, அதனால எனக்கு 8 கடை வேணும் என்றால் மற்ற சகோதரர்கள் ஒத்துக்கொள்வார்களா ?
பங்குச் சந்தையில் பங்குகளின் முகமதிப்புகளைக் குறைப்பார்கள். ஒரு பங்கை 5 ஆக பிரித்தால், 1 பங்கு வைத்திருப்பவர்களுக்கு 5 என்றும், 10 பங்கு வைத்திருப்பவர்களுக்கு 50 என்றும் கிடைக்கும்.
அதுபோல நிர்வாக வசதிக்காக 848 அல்லது 1000 சீட் ஆகக் கூட அதிகரித்துக்கொள்ளுங்கள்.
- ஆனால் மேலே காட்டிய விகிதாச்சார அடிப்படையில் மாநில பிரதிநிதித்துவத்தைக் குறைக்காத அளவில் எம் பி தொகுதிகளை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்க வேண்டும்.
இல்லையெனில் , ஒட்டு மொத்த தேர்தல் சிஸ்டத்தையும் அடிப்படையில் இருந்து மாற்றி, மாநில பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறையாத அளவுக்கு வழி வகுத்து செயல்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து மாநில பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் , அறிஞர்கள் என பலதுறை சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் இப்போதைக்கு இதெல்லாம் தேவையே இல்லை.
தலை போகிற பிரச்சனையில் நாடு தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. கல்வி , வேலை வாய்ப்பு , பொருளாதாரம், பொருளாதார ஏற்றத் தாழ்வு , அரசியலில் கிரிமினல்கள் , லஞ்சம் , பெரும் ஊழல் , சட்ட ஒழுங்கு என பெரும் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன.
தாங்கள் சொகுசாக இருப்பதை கொஞ்சம் தவிர்த்து விட்டு வெளியே வந்து பார்த்தால் முதல்வர் , பிரதமர் என அனைவருக்கும் விளங்கும்.
இத எல்லாம் மொதல்ல பாருங்க சார்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………….



What is good for India, is also good for state. Apply same logic in terms of people representation (MLAs, MPs, various govt jobs, etc). Also let arath suggest DMK govt to spend money in each district in proportion to the income generated by the district, also in Municipalities in the same proportion. Then he will understand how absurd his suggestion is. Govt should stop ration, freebies to poor as they don’t generate income is what Arathi is suggesting.
if BJP is criticized with an absurd logic it is great but if same argument is put forth for TN or for a state it would become விதண்டாவாதம்.
அராத்து kindly of people can never understand demonetization and it’s outcome
எல்லோருக்கும் அரசியலில் கிரிமினல்கள், லஞ்சம் சட்ட ஒழுங்கு போன்றவை பெரும் பிரச்சனைகள் என எழுதுவது fashion ஆகிவிட்டது. தனி மனிதர்கள் சேர்ந்துதான் வாக்களிக்கிறார்கள். அவர்கள் தான் தங்களை ஆளுகிறவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்போ தவறு யாருடையது? எம்எல்ஏக்கள் எம்பிக்கள் வார்டு கவுன்சிலர்கள் மீதா இல்லை வாக்காளர்கள் மீதா?
அடுத்து லஞ்சம். வாக்களிக்க காசு வாங்கும்போது இனிக்கிறதா? ஓசியில் தேர்தலின்போது தருவதை வெட்கம்கெட்டு வாங்கிக்கொள்ளும்போது அது லஞ்சம் எனத் தெரியவில்லையா? நம் காரியம் ஆகவேண்டும் என அரசு அலுவலகம் போலீஸ் சாலை பாதுகாப்பு போன்று பலருக்கு சிறிய அளவில் இருந்தாலும் சுயநலமாக லஞ்சம் கொடுக்கும்போது தெரியவில்லையா தானும் இதற்கு உடந்தை என்று? ஓட்டுநர் உரிமம் என்று பலவற்றிர்க்கும் தன் நலனுக்கு சட்டத்தை மீறி லஞ்சம் கொடுப்பது, பொதுவெளியில் மற்றவர்களைக் குறை கூறுவது என்பது அராத்துகளின் வேலை
சாலைப் பாதுகாப்பு விதிகளை வெளிநாடுகளைப் போல இங்கும் மதிப்பது, வாக்களிக்கும் கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவது, லஞ்சம் வாங்காமை கொடுக்காமை நேர்மையைக் கடைபிடிப்பது என்றிருப்பவர்களே மற்றவர்களைக் குறைகூறும் தகுதி படைத்தவர்கள். ஆம்புலன்சின் பின்னாலேயே சிக்னலை மீறிச் செல்வது என தன்னளவில் ஒழுங்காக இருக்காதவர்களுக்கூ அரசியல்வாதிகளையோ மற்றவர்களையோ குறைகூற என்ன தகுதி உண்டு?
ஒரே ஒரு காரணம்தான் உண்டு. ஐயோ நம்மால அவனைப்போல இருக்கமுடியவில்லையே என்ற வயித்தெரிச்சவ்தான். அதுதான் அராத்தின் எழுத்துக்கு அடிப்படை