இவர் – நல்லவரா …? கெட்டவரா …???

…………………………………………………..

……………………………………………………

இவர் – நல்லவரா …? கெட்டவரா …???
யாராவது கன்ஃபர்ம்டா சொல்லுங்களேன் ப்ளீஸ் …!!!

…………………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இவர் – நல்லவரா …? கெட்டவரா …???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எஸ்.வி.சேகர் நல்லவர். அடுத்தவர் காசை எடுத்தவரல்லர். ஊழல் செய்தவர் கிடையாது. அவ்ளோதான். சொந்த வாழ்க்கையில் ஓரளவு நேர்மையாக இருந்தவர். தொலைக்காட்சி நடிகர்சங்கப் பொறுப்பு வகித்தபோது, பாலியலில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம் நான் ஆதரவு தந்து தப்பவைக்கமுடியாது என்றெல்லாம் வெளிப்படையாகத் தெரிவித்து தனக்கான ஆதரவை இழந்தவர்.

    ஆனால் அரசியலில் அவர் கொஞ்சம்கூட  நம்பிக்கைக்குரியவர் அல்லர். ஒரு கட்சி, ஒரு பொறுப்பு என்றால் அதற்கு ஏற்றபடி இருந்தாகவேண்டும். அதற்கான அருகதை கொஞ்சம்கூட இல்லாதவர் எஸ்.வி.சேகர். சொந்த லாபத்திற்காகவும், அடுத்தவன் கழுத்தை அறுக்கணும் என்பதற்காகவும் தனக்குப் பதவி/ பொறுப்பு கொடுத்தவர்களுக்கும் தன்னுடைய கட்சிக்கும் எதிராகச் செயல்படத் தயங்காதவர் எஸ்.வி.சேகர். கட்சியின் சில நிர்வாகிகளுடன் ஒத்துப்போகாததால், தனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த ஜெயலிதாவுக்கே எதிராகச் செயல்பட்டவர் அவர். பொதுக்குழுக் கூட்ட த்திற்குப் போகாமல் கருணாநிதியைச் சந்தித்து தன்னைக் கட்சியில் சேர்த்துக்கொண்ட ஜெவுக்கு சங்கடம் தந்தவர் அவர்.  தன்னுடைய மகனின் படத்திற்கு பிரச்சனை வரக்கூடாதா, உடனே அதற்கான ஆட்களை அவர்களே கூச்சப்படும்படிப் பாராட்ட த் தயங்காதவர் அவர். உதாரணமா அதிமுகவில் இருந்துகொண்டே கருணாநிதியை சொந்த லாபத்திற்காகப் பாராட்டியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு, கைது நடவடிக்கையிலிருந்து தப்ப ஸ்டாலினையும் திமுகவையும் அவர்களே வெட்கப்படும்படி புகழ்ந்தவர் (சோப்பு போட்டவர்) அவர்.

    கட்சிக்காக துரும்பைக்கூட எடுத்துப்போடாமல், தன்னுடைய புகழினால் தமிழ்நாடே தனக்கு வாக்களிக்கக் காத்திருக்கிறது என்ற கற்பனை உலகில் இருந்துகொண்டு, என்னைப் பார்க்க மோடியே வந்தார், எல்லோரும் என்னைப் பார்த்து என்னிடம் விநயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர் அவர். இந்த மாதிரி ஒட்டுவாரொட்டியை அண்ணாமலை புரிந்துகொண்ட தால், எஸ்விசேகருக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. அண்ணாமலைக்கு உருவாகிற ஆதரவைத் தன் பொறாமையால் கூச்ச நாச்சமில்லாமல் விமர்சித்தவர் எஸ்விசேகர்.  அது மட்டுமல்ல, பிராமணர்கள் எல்லோருமே எஸ்.வி.சேகருக்கு வாக்களிக்க கியூவில் காத்திருப்பதுபோல கற்பனை செய்துகொண்டு, அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர், நான் பிராமணர்களுக்குத் தலைவனானால், எத்தனையோ நன்மைகளைச் செய்துவிட முடியும் என்றெல்லாம் உளறிக்கொண்டிருந்தவர் அவர்.

    அண்ணாமலையின் இமேஜை உடைக்கவேண்டும் என்று நினைத்த திமுக ஆதரவு (அனேகமாக எல்லோருமே) ஊடகங்கள் எஸ்.வி.சேகருக்கு வெளிச்சம் கொடுத்தன. அந்த சீசன் முடிந்த தும் அவரை விட்டு விலகின. (காயத்ரி ரகுராம் போன்ற சில பல மின்மினிப் பூச்சிகள் இந்த ரகம்தான்)

    இப்போ உங்கள் கேள்விக்கான பதில். அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லாத ‘வேலியில் போகிற ஓணான்’ இந்த எஸ்.வி.சேகர். இவரை எந்தக் கட்சி சேர்த்துக்கொண்டாலுமே அந்தக் கட்சிக்கு துரோகம் செய்யத் தயங்காதவர் எஸ்.வி.சேகர். தனிப்பட்ட நல்ல மனிதன் எப்படி ஒரு சிஸ்டத்திற்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாமல் இருக்கக் கூடும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். யாரையும் கேவலமாக விமர்சிக்கவோ, ஏறிய ஏணியை எட்டி உதைக்கவோ கொஞ்சம்கூடத் தயங்காதவர் இவர். அரசியலில் கேவலமானவர்கள் என்று நான் எண்ணும் சிலரில் இவரும் ஒருவர் என்று எழுதும்படியாக நேர்ந்தது எனக்கு வருத்தம்தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.