……………………………………………………………………


……………………………………………………………………….
………………………………………………………………………..
……………………………………………………
கூடவே ஒரு கொசுறு கேள்வி-பதில் ….
…………………….
……………………………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………………………


……………………………………………………………………….
………………………………………………………………………..
……………………………………………………
கூடவே ஒரு கொசுறு கேள்வி-பதில் ….
…………………….
……………………………………………………………………………………………………………………………………………………….
என்னுடைய பணம், என் குழந்தைகள், என் மருத்துவமனை. நான் ஏன் மத்திய அரசு சொல்வதைக் கேட்டு நீட் தேர்வு வைக்கவேண்டும்? உண்மைதான். ஒரு அரசியல்வாதியாவது, தமிழக அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆயிருக்கிறாரா?
மத்திய அரசு பணம், மத்திய அரசின் கல்விக் கொள்கை. இதைச் செயல்படுத்த முடியாது என்றால் ஏன் மத்திய அரசிடம் பணம் எதிர்பார்க்கவேண்டும்? கல்வி என்பது மத்திய அரசிடம் கருணாநிதி தாரை வார்த்துவிட்டார் என்பதும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை.
அடுத்தது, மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழி ஆப்ஷனல். மூன்றாவது மொழி இருந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பது உண்மையானால், எதற்காக திராவிட அரசியல்வாதிகள் அனைவரும் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட, சி.பி.எஸ்.ஸி பள்ளிகள் நடத்தவேண்டும்? வள்ளலார் கழகம் நட த்திக்கொண்டே சாராய ஆலை அதிபர்களாக இருப்பதால், கொள்கைக்கும் வியாபாரத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்களா? ஒரு திமுக அரசியல்வாதியாவது தமிழ் வழிப் பள்ளி நட த்துகிறார்களா? தமிழக அரசுப் பள்ளிகளில், மூன்றாவது மொழியாக ஏன் ஃப்ரெஞ்ச் கற்றுக்கொடுக்கக்கூடாது? ஏன் சிங்களம் கற்றுக்கொடுக்கக்கூடாது? ஏன் ஹிந்தி என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்?
தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரு கொள்கை ஆனால் மக்களுக்கு வேறு கொள்கை என்பதே திமுகவின் கொள்கையாகிவிட்ட து. அதனால்தான் அவர்களது இந்தி எதிர்ப்பு பல்லிளிக்கிறது.
வாதத்திற்காக என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இவங்க எதை கடைபிடிக்கிறார்கள் என்பதைப் பார்த்தால்தான் அவர்கள் வாதத்தில் அர்த்தம் இருக்கும். சைவம் எவ்வளவு உயர்ந்தது, மனித குடல், உள்ளுறுப்புகள் சைவ உணவையே சார்ந்திருக்கின்றன என்றெல்லாம் அழகாக வாதம் பண்ணிவிட்டு, கறிக்கடை முதலாளியாகவும் கன்ஸ்யூமராகவும் இருப்பவரை யார் மதிப்பார்கள்? என்னதான் அழகாக விவாதம் செய்தாலும்?
Very good Interview and good Conversation. PTR explained greately with valid points about Bi Lingual policy follows by TN government.
Araathu –
கரண் தாப்பார் – பி டி ஆர் உரையாடல் பார்த்தேன். பி டி ஆர் அருமையாக வாதங்களை வைக்கிறார். கரண் எப்படி மடக்கி மடக்கிக் கேட்டாலும், ஊதி விடுகிறார். சஷி தாரூர் இதே மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் சம்மந்தமாக பி டி ஆரிடம் உரையாடியபோது, பி டி ஆர் அளித்த பதிலுக்கு சஷி தாரூர் ரசித்து தலையாட்டுகிறார்.
பி டி ஆர் அட்டகாசமாகப் பேசுகிறார்.
வாத திறமை இருக்கிறது என்பதற்காக, வைக்கும் வாதமெல்லாம் சரி என்று ஆகிவிடுமா என்ன?
கடவுள் இல்லை என வாதம் புரிவதும் எளிதுதான்.எப்பேர்ப்பட்ட ஆத்திக வாதிகளையும் , வாதத்தால் வெற்றி கொள்ள முடியும் தான்.அதற்காக நாத்திகம் தான் பெரிது என்று ஏற்று கொள்ளவா போகிறோம் .ரசித்து விட்டு கடந்து சென்று, நமது ஆத்திகத்தைத்தான் கைக்கொள்ள போகிறோம். அதே போன்றுதான், மும்மொழி கொள்கையை வாத திறமையால் வெற்றி கொள்வது என்பது இயல்புதான் .அதற்காக அவர்களுக்கு தலையாட்டுவது நமது ஏழை தலைமுறையை பின் தங்க வைத்துவிடும் .
முன்பு ஜாதியின் அடிப்படையில் அவர்களை பின் தங்க வைத்தார்கள். இப்பொழுது நவீன கொள்கையின் மூலம் அவர்களை பின் தங்க வைக்க போராடுகிறோம் .
போர்க்களங்கள் தான் மாறுபடுகின்றன .. போர் என்பது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது .அதன் வடிவம் தான் மாறுபடுகிறது .
புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் , நாம் இல்லை