இவரா… அவரா…??? யார் சொல்வது பொய்…???

……………………………………………..

………………………………………………

………………………………………………

-தந்தி டிவி இன்னும் சில விஷயங்களை
சொல்லத் தவறி விட்டது என்று நினைக்கிறேன்….

யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் …. !!!

காணொளி கீழே –

………………………………………………

……………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to இவரா… அவரா…??? யார் சொல்வது பொய்…???

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தற்போது – மொத்தம் 543 சீட்களில்,
    தென் மாநிலங்களின் பங்கு 129 – அதாவது
    தோராயமாக 24 % ….

    எதிர்காலத்தில் -இதே மாதிரி, மக்கள் தொகையின் அடிப்படையில் சீட்டுகளை மறு சீரமைப்பு செய்தால் –

    தென் மாநிலங்களின் பங்கு 24 % -லிருந்து
    19-% -ஆக குறைந்து விடும்….

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என்று ஏன் பார்க்கணும்? மக்கள் தொகை ஒன்றுதானே அடிப்படை.  தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்ற வார்த்தை அந்த அந்த சமூகத்தின் சதவிகித அளவில்தானே நடைபெறுகிறது? முன்னேறிய வகுப்பில் 20 சதம் பேர் வெளிநாட்டில் செட்டில் ஆயிட்டாங்க, இங்க இருக்கறவங்க ஒரு குழந்தைதான் பெத்துக்கறாங்க, அந்தச் சமூகம் பத்து இருபது குழந்தைகளைப் பெத்துக்கறாங்க என்றெல்லாம் வாதிட முடியுமா? ஒவ்வொரு சமூகத்திற்கும் 10 எம்.எல்.ஏக்கள் இருக்கணும் என்றெல்லாம் சொல்ல முடியுமா?

    பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி நலன், மற்றும் இந்திய நலனை மாத்திரமே கவனிக்கவேண்டும். அது மக்கள் தொகை அடிப்படையில் இருப்பதில் என்ன தவறு?

    தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர்கள் சொந்தமாக அடைந்த நன்மைகள் தவிர (உதாரணம் டி.ஆர். பாலு எத்தனை சலுகைகளை அவரது கம்பெனிகளுக்குப் பெற்றிருக்கிறார், கருணாநிதி குடும்பம் எவ்வளவு தொலைக்காட்சி சானல் உரிமைகளைப் பெற்றது, மாறன் குடும்பமும் அப்படியே) தமிழகத்திற்கு என்று எதைப் பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் ஆட்சியில் பங்கு பெற்றபோதுதான் ஊழலின் அளவு பல மடங்கு அதிகரித்து உலகத்திலேயே 2ஜி ஊழலைப் போல லட்சம் கோடிகளை அடித்தவர்கள் யாருமில்லை என்ற பேச்சு கிளம்பியது.

    ஜனநாயகமே மக்கள் தொகையைப் பொறுத்தது. அதனால்தான் பிராமணர்களுக்கு தமிழகத்தில் 80 எம்.எல்.ஏக்கள் இல்லை, ஒன்று இருந்தாலே அதிகம், தெலுங்கை தாய்மொழியாக க் கொண்டு, தமிழகத்தில் வாழ்பவர்களுக்கு 5-7 மந்திரிகள், 8-10 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இருக்கிறது (இந்தக் கணக்கு தோராயமானதுதான்)

    அதனால் இதனைப் பெரிய விஷயமாக நான் எண்ணவில்லை. என்னுடைய ஆலோசனையைக் கேட்டால், சிபிஎஸ்ஸி போன்ற பள்ளி நடத்தும் உரிமை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக் கூடாது.  உத்திரப் பிரதேசத்தில் 100 தனியார் சி.பி.எஸ்.ஸி பள்ளிகள் இருந்தால், தமிழகத்தில் 10 பள்ளிகள் தாம் தனியாருக்கு உரிமையாக இருக்கவேண்டும் (மத்திய அரசு அதற்குமேல் உரிமம் கொடுக்க்கூடாது. இருக்கும் உரிமத்தை ரத்து செய்யணும்). இதுதான் ஜனநாயகம்.

    லாஜிக் நல்லா இருக்கா?

    உங்கள் தளத்தில் தட்டச்சு செய்வது சிரம மாக இருக்கிறது. காரணம் (சமீப வாரங்களில்) அதனால் வேறு வழியில் கருத்தை எழுதுகிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஒரு கட்சியின் அதி தீவிர ஆதரவாளர் என்று
      தெரிந்த பிறகு, அவரிடமிருந்து பட்சபாதம் இல்லாத,
      நியாயமான கருத்துகளை எதிர்பார்த்து
      ஏமாறுவதில் அர்த்தம் இல்லை என்பது எனக்கு
      புரிகிறது…

      ஏனென்றால் அத்தகையோரால், எதையும்
      நியாயப்படுத்த முடியும்….

      கட்சி, தலைமை என்றெல்லாம் வந்து விட்ட பிறகு மனசாட்சிக்கு அங்கே இடம் எப்படி இருக்கும் … ?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        நீங்களாகவே நான் பாஜக உறுப்பினர் என்றெல்லாம் எழுதறீங்க. பாவம் பாஜக. நான் எழுதியதில் என்ன தவறு? நீங்க என்ன சொல்ல வர்றீங்க? ஒவ்வொரு மாநிலத்துக்கும் சரி சமமா எம்பிக்கள் இருக்கணும் என்றா? எம்பிக்கள் எண்ணிக்கை இதற்கு முன்னால் மாறியதே, மாற்றிய காங்கிரசைப் பற்றி உங்கள் விமர்சனம் என்ன? அதற்குத் துணைபோன கருணாநிதியைப் பற்றி என்ன சொல்றீங்க? அந்த எண்ணிக்கையை தற்போதைய மத்திய அரசு மாற்றக்கூடாது என்பது உங்கள் நிலை என்றால் கூடுதல் இட ஒதுக்கீடு எதுவும் கூடாது 1947ல் இருந்த நிலையே தொடரணும் என்பதுவும் உங்கள் நிலைப்பாடா?

        தென்னிந்தியாவிற்கு பிரதமர்னா ஜனாதிபதி வட இந்தியர் என்ற முறையை உடைத்தது யார்? பிராமண எதிர்ப்பு என்ற கொள்கை உடையவர்கள் பிராமண முகர்ஜிக்கு வாக்களித்துவிட்டு தாழ்த்தப்பட்டவர் ஜனாதிபதியாவதைத் தடுத்ததை நீங்க நியாயப்படுத்தறீங்களா?

        மாற்றம் என்பது மானிட த் தத்துவம். தற்போதைய மத்திய அரசு நினைக்கும் மாற்றம் சரிதான் என்பது என் எண்ணம்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்…

          ” ஒரு கட்சியின் அதி தீவிர ஆதரவாளர் என்று
          தெரிந்த பிறகு, அவரிடமிருந்து பட்சபாதம் இல்லாத,
          நியாயமான கருத்துகளை எதிர்பார்த்து
          ஏமாறுவதில் அர்த்தம் இல்லை என்பது எனக்கு
          புரிகிறது… “

          ………………..

          அது சரி –

          ” தற்போதைய மத்திய அரசு நினைக்கும் மாற்றம்
          சரிதான் என்பது என் எண்ணம்…”

          • மத்திய அரசு தற்போது எப்படி மாற்ற
            நினைக்கிறது …?

          கொஞ்சம் எனக்கும், மற்ற வாசகர்களுக்கும்
          சேர்த்தே – சொல்லுங்களேன்…

          • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

            தொகுதி சீரமைப்பு செய்து மக்கள் தொகைக்கு ஏற்றபடி பாராளுமன்ற உறுப்பினர்கள். தமிழகத்துல 8 கோடி, உபில 80 கோடி மக்கள்னா, தமிழகத்துக்கு 10 எம்பின்னா உபிக்கு 100 எம்பி. இதுல என்ன தவறு இருக்கு? அந்தமாதிரி கணக்குலதானே இட ஒதுக்கீடு கொள்கை திமுக சொல்லுது. ஜாதி சதவிகிதத்துக்கு ஏற்றபடி இட ஒதுக்கீடு. ஆனால் மத்திய அரசு ஒரு காம்ப்ரமைசுக்காக தமிழகத்துக்கு இடங்களை அதிகரித்து 45 எம்பிக்கள் ஆக்கி உபிக்கும் 80ல இருந்து 120ஆ ஆக்கிவிடும்னு நினைக்கிறேன்

            என்னிடம் யாரேனும் ஆலோசனை கேட்டால் proportionateஆ இடங்களைக் குறைக்கலாம். அரசுக்கு செலவு மிச்சம். எத்தனை பங்களாக்கள், பெட்ரோல் பங்க் மிச்சமாகும்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    முதலில் நீங்கள் எழுதி இருந்தது –

    “தற்போதைய மத்திய அரசு நினைக்கும் மாற்றம்
    சரிதான் என்பது என் எண்ணம்.”

    • -ஆனால், மத்திய அரசு எந்த தீர்மானத்திற்கும்
      இது வரையில் வரவில்லை என்பதே உண்மை…

    ஆக மத்திய அரசு எந்தவித முடிவையும்
    எடுக்கும் முன்னரே நீங்கள் மத்திய அரசின்
    முடிவை ஆதரித்து விட்டீர்கள்…!!!

    நீங்கள் என்னிடம் கேட்டது –
    ” நீங்க என்ன சொல்ல வர்றீங்க? ஒவ்வொரு
    மாநிலத்துக்கும் சரி சமமா எம்பிக்கள் இருக்கணும்
    என்றா? “

    இதில் என் கருத்து –

    புதிதாக உருவாக்கும் 300 + சீட்டுகளை –
    தற்போது இருக்கும் அதே விகிதத்தில் அனைத்து
    மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பது
    இருப்பதற்குள் ஓரளவு பெட்டர் தீர்வாக
    இருக்கும் என்பதே…

    ” என்னிடம் யாரேனும் ஆலோசனை கேட்டால் – “

    நல்ல வேளையாக சம்பந்தப்பட்ட யாரும்

    = உங்களிடம் கேட்கவில்லை …😊

    .

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இல்லை கா.மை சார்… புது பாராளுமன்றம் கட்டும்போதே இந்த விஷயங்கள் வெளியாயின. பாஜக இப்போது ஆழம் பார்க்கிறது. பிறகு வெளிப்படையாகச் சொல்லும். அப்போதே பத்திரிகைகளில் இந்த எம்பிக்கள் எண்ணிக்கை எப்படி உயரும் என்று வந்துவிட்ட து. Proportionateஆ எதற்கு எம்பிக்கள் எண்ணிக்கை உயரவேண்டும்? பாஜக இதனைக் கொண்டுவந்து கூட்டுக்குழுவிற்கு அனுப்பி நிறைவேற்றும். பார்த்துக்கொண்டே இருங்கள்

      பத்து தொகுதில சர்வே பண்ணிப் பாருங்க. தமிழகத்தில் எம்பிக்களால் அந்த அந்தத் தொகுதிகளுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று தெரியும். மதுரை சு.வெங்கடேசன் எம்பி நடிகர் சூர்யாவுக்கு கீழடியைச் சுற்றிக்காட்டியது தவிர வேறு என்ன செய்தார்? இப்படி ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்தால் நமக்குத் தெரியும், எம்பிக்கள் எண்ணிக்கையால் தமிழகத்துக்குப் பயன் இல்லை.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அசட்டுத்தனமான வாதங்களை இனியும் ஊக்குவிக்க
    எனக்கு விருப்பமில்லை…இனி என்னிடமிருந்து
    எந்த விளக்கமும் வராது…….நீங்கள் எதை
    வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்.

    .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.