ஏன் திணிக்க வேண்டும் …??? எதையும், யார் மீதும் …!!!

……………………………………….

…………………………………………..

எழுத்தாளர் அராத்து அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையும்,
அதற்கு வந்துள்ள சில பின்னூட்டங்களும் கீழே –
……….

மும்மொழி –

மத்தியில் எந்த அரசு வந்தாலும் இந்தி திணிப்பில் ஆர்வமாகத்தான் ஈடுபடுகிறது. இது ஒரு வடக்கத்திய மனநிலை. எல்லாரும் ஹிந்தி படிக்கிறது, ஹிந்தியில் பேசறது நல்லதுதானே? இதப்போய் ஏன் எதுக்குறாங்க என்று அவர்கள் குழம்புவார்கள் 🙂

ஒரு நாடு ஒரு மொழி, அது ஹிந்தி என்பதே வட இந்தியர்களின் நிலைப்பாடு.
ஜெர்மனியில் ஆங்கிலம் தெரிந்தாலும் வேண்டுமென்றே ஜெர்மனியில்தான் பேசி டார்ச்சர் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

என் தோழி ஒருவர் சீனியர் டாக்டர் ஒருவரிடம் கன்ஸல்டிங்காக சென்றிருக்கிறார். அவருக்கு இங்கிலீஷ் நன்கு தெரியும். இவர் இங்கிலீஷில் பேசப் பேச அவர் ஜெர்மன் மொழியில்தான் பதிலளித்தாராம். தன்னுடைய பேஷண்டுக்கு அது புரியுமா என்பதைப் பற்றி கவலையே படவில்லை
என்று சொல்லி வருத்தப்பட்டார்.

அது போன்ற ஒரு மனநிலை இப்போது வட இந்தியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது.நான் சில வருடங்கள் முன்பு வட இந்தியாவில் பயணம் செய்கையில் இந்த மனநிலையைச் சந்தித்தது இல்லை. அப்போதும் காங்கிரஸ் அரசு இந்தி திணிப்பில் ஆர்வமாகத்தான் இருந்தது. ஆனால் அதிகாரிகளிடம், மக்களிடம் இந்த இந்தி வெறி இல்லை. இப்போது அது ஆரம்பித்திருக்கிறது.

டெல்லி இமிக்ரேஷன் அதிகாரிகள் , டெல்லி போலிஸ் எல்லாம்
வேண்டுமென்றே ஹிந்தியில் பேசுகிறார்கள். ஒரு டெல்லி போலீஸ் என்னிடம், இந்தியாலதான இருக்க? இந்தி தெரியாதா? இந்தி தெரிஞ்சா என்கிட்ட பேசு, இல்லன்னா எடத்த காலி பண்ணு என்றார்.

உணவகங்கள், ஆட்டோ என வட இந்தியா முழுக்க வம்படியாக இந்தியில் மட்டுமே பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.
வங்கி , இன்ஷூரன்ஸ், ஆன்லைன் வர்த்தகம் போன்ற பெரு நிறுவனங்களும் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஐஐடி , நீட் கோச்ச்சிங் எல்லாம் ஹிங்கிலீஷ் மீடியம் என்றே வெளிப்படையாகப் போட்டு எடுக்கிறார்கள். FIIT JEE யில் சென்ற வருடம் விசாரித்தபோது ஆன்லைனில் இங்கிலீஷ் மீடியம் இல்லை. ஹிங்கிலீஷ் மட்டுமே என்றனர்.

முன்பு அரசிடம் மட்டும் இருந்த வெறி இப்போது அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் பரவ ஆரம்பித்திருக்கிறது.
முன்பு எதிர்த்ததை விட இப்போது ஹிந்தித் திணிப்பை அதிகம் எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழ்நாடு மட்டும் எதிர்த்தால் பத்தாது. தென்னிந்திய மாநிலங்கள்
அனைத்தும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைத்
தவிர மற்ற மாநிலங்கள் ஹிந்தி திணிப்பில் தீவிரமாக இல்லை. ஆந்திரா, தெலுங்கானா எல்லாம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு ஹிந்தி திணிப்பென்ற மேட்டரே தெரியாது.

இந்த நேரத்தில் அரைகுறையாகப் புரிந்து கொண்டு , விருப்பப் பட்டா படிக்கலாம், இன்னொரு மொழி தெரிஞ்சிக்கிறது நல்லது , ஒன் வீட்டு பசங்க மட்டும் ஹிந்தி படிக்கிதே என்றெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசிக்கொண்டு இருக்கலாகாது.

விருப்பம் உள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் , எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஹிந்தியை திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். திணித்தல்
என்றால் என்ன? கண்டிப்பாக ஹிந்தியைப் படிக்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தியில் தான் பேச வேண்டும், ஹிந்தியில் தான் கடிதப் போக்குவரத்து நடத்த வேண்டும், பொது அறிவிப்புகளை ஹிந்தியில்தான் வைக்க வேண்டும் போன்றவைகள்தான்.

ஹிந்தியை பள்ளியில் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே,
மேற்சொன்ன திணிப்புகளை நோக்கித்தான்.

பொருளாதாரத்த மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி , வாழ்கைத்தரத்த மேம்படுத்துங்கய்யா , அதான் அரசாங்கத்தின்
வேலைன்னு சொன்னா , அத வுட்டுட்டு ஹிந்தி படி ஹிந்தி படி
புளிப்பு காமடி பண்ணிகிட்டு…….

……………………………………………………………

இந்த கட்டுரைக்கு, அவருக்கு வந்த சில பின்னூட்டங்களிலிருந்து
கொஞ்சம் கீழே தந்திருக்கிறேன் …..

அதற்கு முன்னால், எனக்கு இரண்டு கேள்விகள் –

1) மும்மொழித் திட்டத்தை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு விட்டதாக
அறிவிக்கப்பட்டு விட்ட –
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம்,
பீகார், ஹிமாசல பிரதேசம், உத்தராகண்ட், சட்டிஸ்கர்
போன்ற மாநிலங்களில் – 2-வது மற்றும் 3-வது மொழிகளாக
அவர்கள் எந்த மொழிகளை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்….??


அந்த மாநிலங்களில் எத்தனை மாணவர்கள் 3 மொழிகளை படிக்கிறார்கள்…?
2-வது மற்றும் 3-வது மொழிகளில் பாஸ் செய்ய வேண்டும்
என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறதா இல்லை பேருக்கு
படித்தால் போதுமா…??

2) மூன்று மொழிகளை சிறிய வயதிலேயே மாணவர்கள்
ஏன் கற்க வேண்டும்….? 3-வது மொழியை கற்கும் நேரத்தை
எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் அவசியமான –
கம்ப்யூட்டர் கற்பதில் செலவழிக்கலாமே….?

பள்ளி /கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அவர்கள் எந்த ஊரில் /நாட்டில்
வேலை செய்யப்போகிறார்கள் என்பதை வைத்து, அந்த நாட்டின்
மொழியை 3-வது மொழியாக படிப்பது பயனுள்ளதாக இருக்குமே….???

சென்னையில், நிறைய பேர் இப்படி 18 மாத ஜெர்மன், ஃப்ரென்ச்,
ஜப்பானிய மொழிகளை படிப்பதை நான் பார்க்கிறேன். ரஷ்ய மொழி
படிப்பவர்கள் கூட இருக்கிறார்கள்…. 20 வயதுகளில் அவர்களால்
சுலபமாக ஒரே வருடத்தில் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது…..

செக்குமாடு போல் ஒரே கல்வித்திட்டத்தை எல்லார் தலையிலும்
சுமத்துவது – மாணவர்களின் எதிர்காலத்திற்கு நிச்சயம் தடங்கலாகவே
இருக்கிறது….

…………….

இனி –

பின்னூட்டங்களிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் ….
……

இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்சூரன்ஸ் எடுப்பதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொண்ட போது அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே பேசின. ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஆங்கிலத்தில் என்னுடன் பேச தயாராக இருந்தது. ஹிந்தி தெரியாத காரணத்தினால் மற்ற அனைத்து இன்சூரன்ஸ் கம்பெனிகள் தொடர்பு அவர்களாகவே துடித்துக் கொண்டார்கள். தற்போது நிலைமை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. மும்பையிலும் டெல்லியில் இருந்து பேசுபவர்கள் தமிழகத்தில் பேசுபவர்களிடம் ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன மொழி தெரியும் என்ற கேள்வி கூட அவர்கள் கேட்பதில்லை.
……….

தமிழ்நாட்டில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்கிற தகவல் இருந்தால் கூறுங்கள். ஒரு பள்ளியிலும் தமிழாசிரியர் கிடையாது. ஹிந்தியை விட்டுவிடுங்கள், ஆனால் சமஸ்கிருதம் எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் கற்க வேண்டும். கற்பிக்க ஆசிரியரும் உண்டு. இப்படித்தான் மொழி திணிப்பு மூலமாக தாயமொழி அழிப்பு நடந்தேறும். அரசியல்வாதிகள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் சேவை மன்ப்பான்மையோடு நடத்தப்படுவதில்லை. இலாப நோக்கோடு மட்டுமே நடத்தப்படுகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகாரம் வேண்டுமானால் தாய்மொழி ஒரு பாடமாக இருக்க வேண்டியது அவசியமோ இல்லையோ ஹிந்தி மொழி ஒரு பாடமாக இருக்க வேண்டியது அவசியம். ஆகவேதான் அரசியல்வாதிகளின் இலாபநோக்கோடு கூடிய பள்ளிகளில் ஹிந்தியும் ஒரு மொழிப்பாடமாக உள்ளது.

……………….

பொதுவாகவே வடக்க பர்சனாலிட்டி’களுக்கு ஹிந்தி தவிர ஒரு எழவும் மண்டையில ஏறுவது கிடையாது !
மஞ்ச மாக்காய்னுங்க விகிதாச்சாரம் அங்க ரொம்ப அதிகம் ( அரசாங்க உத்தியோகம் பார்க்கும் ஜென்மங்களிடையேயும் இது உண்டு!)
இவனுங்களுக்கு பெரும்பாலும் இங்கிலீஷ் தெரியலன்ற காம்ப்ளக்ஸை மறைக்கவே ஹிந்தியை தூக்கி பிடிக்க try பண்றானுங்க!
இது அரசியல் தவிர்த்த பொது புத்தியாகவே வடக்கே பரவி வருவது தெரிகிறது!
மத்தபடி அதுங்களுக்கு மொழிப்பற்று, மண் பற்று எல்லாம் ஒரு புடலங்காயும் இல்லை…!

……………..

மத்திய மந்திரிமார்களில் எத்தனை பேருக்கு 3 மொழிகள் தெரியும் ?

……………..

உலகம் Artificial Intelligence, Machine Learning, Data Science -ன்னு போய்ட்டு இருக்கு. இவனுக கிந்தி முக்கியம்னு
உருண்டுட்டு கெடக்கானுக

…………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ஏன் திணிக்க வேண்டும் …??? எதையும், யார் மீதும் …!!!

  1. R Karthik's avatar R Karthik சொல்கிறார்:

    I recollect the Janaganamana movie court scene of Prithviraj dialogue. Looks something big is swiped under the carpet.

    The issue is there eternity but the focus is not towards solution but to just kindle the emotions and periodically bring it to foreground and deprioritize later.

    God save people who get their BP raised.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Now, who started the issue …???

    …………

    Indian Express states –

    With his statement indicating that the Centre would not release the Samagra Shiksha funds to Tamil Nadu

    until the state government accepts the three language policy under the National Education Policy (NEP), Union Minister for Education Dharmendra Pradhan has revived the language debate in the country.

    In the process, he has reduced the national language debate to a choice between funds and rights, and also cast the NEP as an end in itself without having any meaningful deliberation and debate on the issue.

  3. நவீனன்'s avatar நவீனன் சொல்கிறார்:

    முன்பு எனது நண்பனின் தாத்தா, அடிமை வர்க்கத்திற்கு படிப்பு எதற்கு என்று கூற கேட்டிருக்கிறேன் . எல்லோரும் படிக்க ஆரம்பித்துவிட்டால் , பிறகு அடிமை வேலைக்கு ஆள் கிடைக்காமல் போய் விடும் என்பார்.

    இப்பொழுது ஏழைகளும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.குறைந்த பட்சம், அவர்கள் படிக்கும் govt பள்ளிக்கூடங்களையாவது , முன்னேற விடாமல் தடுப்போம்.

    இவர்களெல்லாம் பல மொழிகளை படிக்க ஆர்மபித்து விட்டால், நமக்கு வீட்டு வேலை செய்ய ஆட்கள் கிடைக்காது .எனவே இதற்க்கு அனைவரும் சேர்ந்து முட்டுக்கட்டை போடுவதே நமக்கு நன்மை. இதை நேரடியாக கூறினால் அடிக்க வந்து விடுவார்கள் .எனவே ஹிந்தி திணிக்கிறார்கள் என்று கூறி முட்டு கட்டை போட்டால் தான், நாளைக்கும் அடிமைகள் வேலை செய்ய கிடைப்பார்கள்.

    எனவே என் நண்பனின் தாத்தாவை போன்ற முதலாளிகள் , சிந்தித்து செயல்படுங்கள் .

    ஆங்கிலேயர்கள் இதேபோல் தான், தங்களுக்கு வேலை செய்ய அடிமைகளை தயார்படுத்த மெக்காலே கல்வியை கொண்டுவந்தான். எனவே அனைவரும் விழித்து கொள்ளுங்கள்.

  4. dravida_tamilan's avatar dravida_tamilan சொல்கிறார்:

    FRom Internet:

    டேய் லகுடு பாண்டிகளா நானும் 5 வரை கான்வென்ட்ல படிச்சேன் .அதுல ஹிந்தி இருந்தது .ஆனா 35 மார்க் பாஸ் ஆகறது தான் குறிகோளா இருந்தது .ஆ னா ஆவ ன்னா மாதிரி தான் .10 வரை ஹிந்தில சொல்ல தெரியும் .அப்பறம் பூ , பழம் பேரு ஹிந்தில படிச்சோம் . இங்க தமிழ் எழுத்துகள் மாதிரி இலக்கியங்கள் ஹிந்தில படிக்க முடியாது .

    இப்ப எனக்கு ஆங்கிலம் தெரியும் யார்கிட்டயாவது ஆங்கிலம் பேசிட்டே இருந்தா ப்ளுயன்சி வரும் . அது மாதிரி தான் பேச் பேச தான் எந்த ஒரு மொழியும் கற்று கொள்ள முடியும் . கர்நாடாகா போனேன் கன்னடம் நல்லாவே புரியும் , கொஞ்சம் கொஞ்சம் பேசி கற்றுகிட்டேன் . தெலுங்கு படம் , மலையாள படம் எல்லாம் பார்ப்பேன்

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அரசியல்வாதிகள் லாப நோக்கத்துக்காக சிபிஎஸ்ஸி பள்ளிகளை நடத்துகிறார்கள் – இப்படி சொறிந்துவிட வேண்டிய அவசியம் கட்டுரையாளருக்கு உண்டு. ஆனால் நமக்கில்லை.

    தமிழ் படிப்பைச் சொல்லிக்கொடுத்தால் பணமுள்ளவர்கள் வரமாட்டார்கள் என்ற அர்த்தம் வரும் வார்த்தை இது.

    தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களின் சதவிகிதம் குறைவு. அதிலும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இளைஞர்களில் மிகக் குறைவான சதம்தான். உதயநிதிக்கே தமிழ் தெரியாது. தமிழ் பள்ளிக்கூடங்களில் மும்மொழிக் கொள்கை இருந்தால் என்ன தவறு? ஏற்கனவே உருது சொல்லித்தரும் தமிழக அரசுப் பள்ளிகள் இருப்பது யாருக்காக?

    உண்மையிலேயே தமிழ் மீது அரசியல் கட்சிக்கு, குறிப்பாக திமுகவிற்கு ஆர்வம் இருந்தால், திமுகவைச் சேர்ந்தவர்கள் வைத்துள்ள பள்ளிகளை அரசுடமையாக்கி அதில் தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும்படி ஆக்கலாமே? எதற்கு ஊருக்கு உபதேசம்?

    இரண்டாவது மத்திய அரசு அலுவலகங்கள் பற்றிய விமர்சனம். முதலில் தமிழ் மீது துளிக்கூட பற்றில்லாதவர்கள் தமிழர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் (பெரும்பாலான). மலையாளியிடம் பேசிப் பாருங்கள். மலையாளம் பேசுவதையே விரும்புவார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்களால் ஆங்கிலம் கலக்காமல் பேசத் தெரியாது, பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வார்கள்.

    நான் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். மூன்றாவது மொழி ஹிந்தியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறுவதால்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.