சரிந்த சன் டிவி பங்கு விலை …!!!

…………………………………

………………………………..

ஒரு விறுவிறுப்பான பத்திரிகைச் செய்தி கீழே –
……..

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சன் டிவி நிறுவனம் தென் இந்தியாவில் முன்னணி மீடியா நிறுவனமாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் இந்த நிறுவனம் டிவி சேனல்களை நடத்தி வருகிறது. இதுதவிர ஓ.டி.டி, சினிமா தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களையும் சன் டி.வி நிறுவனம் நடத்தி வருகிறது. ஐ.பி.எல் அணியான ’சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ சன் டிவி நிறுவனத்துடையதுதான்.

சன் டிவி நிறுவனம் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருவாய் 10.4 சதவிகிதம் குறைந்து
827.6 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டில் வருவாய்
923.2 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 20 சதவிகிதம் குறைந்து
363 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டில் நிகர லாபம்
453.9 கோடி ரூபாயாக இருந்தது.

சன் டிவி நிறுவனத்தின் வருவாயில் விளம்பர வருவாய்க்குப்
பெரும்பகுதி உள்ளது. டிசம்பர் காலாண்டில் விளம்பர வருவாய்
332.17 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் விளம்பர வருவாய் 355.43 கோடி ரூபாயாக இருந்தது.

எபிட்டா மார்ஜின் 63.8 சதவிகிதத்திலிருந்து
53.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

எபிட்டா 24.6 சதவிகிதம் குறைந்து 444.3 கோடி ரூபாயாக உள்ளது.
விளம்பர வருவாய் குறைந்திருப்பதால் எபிட்டா மார்ஜின் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சன் டிவி நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும்
2.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரிசல்ட் அதிருப்தி அளிப்பதால், பிப்ரவரி 10-ம் தேதி வர்த்தகத்தில்
சன் டிவி பங்கு விலை 7 சதவிகிதத்துக்கு மேல் இறங்கியது. வர்த்தகம்
முடிவில் சன் டிவி பங்கு விலை 4.12 சதவிகிதம் இறங்கி 605.60 ரூபாயாக உள்ளது. மேலும், சன் டிவி பங்கு அதன் 2024-ம் ஆண்டு உச்சத்திலிருந்து
சுமார் 35 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச பங்குத்தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ, சன் டிவி பங்குக்கான
இலக்கு விலையை 670 ரூபாயாகக் குறைத்துள்ளது. சந்தா வருவாய்
வெறும் 2 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும், சன் நிறுவனம்
புதிதாக சன் நியோ என்ற இந்தி சேனலைத் தொடங்கியுள்ளதால்
மார்ஜின் பாதிக்கப்பட்டுள்ளது என சி.எல்.எஸ்.ஏ நிறுவனம்
தெரிவித்துள்ளது.

நுவாமா நிறுவனம் சன் டிவி பங்குக்கான இலக்கு விலையை
955 ரூபாயாகக் குறைத்துள்ளது. சன் டிவி நிறுவனம் பிராந்திய
அடிப்படையில் தென் மாநிலங்களில் பலமாக உள்ளது.

ஆனால்,
Zee போன்ற நிறுவனங்கள் தென் இந்தியச் சந்தைக்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டன. எனவே, சன் டிவி நிறுவனம் வட இந்தியச் சந்தைக்குள் சரியான யுக்தியுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும் என நுவாமா
நிறுவனம் கூறுகிறது.

……………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.