………………………………………………………………………

……………………………………………………………………….
……………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………

……………………………………………………………………….
……………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………….
பெரியாரை நிராகரித்த அந்த ‘தில்’லே தனி!
திமுகவை பொளந்துவிட்டார் விஜய்:
…………………………………..
பிஜேபியை பிளவுவாத அரசியல், பெயிண்ட் டப்பா என வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். பாஜக என அவர் நேரடியாகப் பெயரைச் சொல்லவில்லை.
ஆனால், திராவிட மாடல் அரசு, பெரியார் மற்றும் அண்ணாதுரை பெயரை
வைத்து ஊரை ஏமாற்றிக் கொண்டுள்ள கட்சி என்று சொல்லிவிட்டார்.
குடும்பம் அரசியல், வாரிசு அரசியல் என எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார். பெயரைச் சொல்லாத கட்சி பற்றி விளக்கம் கொடுத்தபோது பயந்து போய் பெயரைச் சொல்லாமல் இல்லை. போனால் போகிறது என விட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டார்.
எப்படிப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக விஜய் மானத்தை வாங்கிவிட்டார்.
ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவைச் சீமான் பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறார். விஜய் தன் கன்னிப் பேச்சிலேயே போட்டு பொளந்துவிட்டார்.
‘நல்ல தொடக்கம் பாதி வெற்றி’ என்று சொல்வார்கள். தமிழக வெற்றிக் கழகம்
பாதி வெற்றிபெற்றுவிட்டது. விஜய் புதியதாக எந்தக் கொள்கையையும் சொல்லிவிடவில்லை. ஆனால், அவர் நம்பிக்கையான பேச்சு தான் முக்கியம்.
அவர் ஊழலை ஒழிப்பாரா? நல்ல ஆட்சியைத் தருவாரா? என்பது எல்லாம்
அடுத்த விசயம். விஜய் தன் பேச்சில் பக்கா பிராக்டிக்கல் என்று சொல்லி
இருக்கிறார்.
” பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வோம்.
அப்படி இருந்தாலும் கடவுள் மறுப்பை ஏற்கமாட்டேன் ” – என்று சொல்வதற்கு
” தில் “வேண்டும். பெரியாரிஸம் என்றால் கடவுள் மறுப்பு, பிராமண வெறுப்பு கட்டாயம் இருக்கும். அதை வைத்து பெரிய அளவில் அறுவடை செய்து கொண்டது திமுக. அதிமுக அப்படி அல்ல. ஜெயலலிதாவே தலைவராக இருந்திருக்கிறார். ஆகவே பிராமண வெறுப்பு எப்படி இருக்க முடியும்?
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/actress-kasthuri-praised-vijays-courage-in-rejecting-periyar-ideology-650769.html
இப்போதே சொல்வதைச் சொல்லிவைப்போம். திமுகவின் கிறித்துவ வாக்குகளுக்கு மற்றும் ஆளும் கட்சி எதிர்ப்பு வாக்குகளுக்கு தவெக குறி வைத்திருக்கிறது. அதனால் திமுக மாத்திரமே பயப்பட வேண்டும். என்ன முட்டி மோதினாலும் 10 சத வாக்குகள் வந்தாலே மிக அதிகம் என்று நான் நினைக்கிறேன்.
சீமானின் வாக்கான 10 சதத்தில் எத்தனை விஜய்க்குப் போகும்னு தெரியலை.
எடப்பாடியின் ஸ்ட்ராட்டஜி, அதிமுகவை பலவீனமாக்குகிறது என்று நினைக்கிறேன். ஒன்றுபட்ட அதிமுக என்று அவர் உருவாக்கியிருக்கணும். வாய்ப்பைத் தவறவிடுகிறார்.
பாஜக இந்த வாக்குச் சிதறலில், 12 சதம் தொட்டாலே எனக்கு ஆச்சர்யம் வரும். ஒருவேளை, அண்ணாமலை உயரக்கூடாது என்பதற்காக விஜய் முன்னிறுத்தப்படுகிறாரா என்று தெரியவில்லை.
விஜய் திமுகபோல குடும்ப வாரிசாக இப்போது தெரியாவிட்டாலும், அவரும் அதைத்தான் தொடருவார். தன் திரைப்படத்திலேயே மகனைக் கொண்டுவந்தவர் அல்லவா? யாரேனும் முதல் போட்டுவிட்டு, லாபத்தைப் பிறர் எடுத்துக்கொள்ள விடுவார்களா? (கருணாநிதியின் இன்வஸ்ட்மெண்ட் பேச்சு மாத்திரம்தான்)
என் பார்வையில் அண்ணாமலை மாத்திரம்தான் அரசியல் தலைவராகத் தெரிகிறார் (எடப்பாடி ஸ்டாலின்லாம் முந்தைய தலைமுறை). விஜயை நடிகராகத்தான் பார்க்கிறேன்.
சென்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் . வரும் தேர்தலுக்கு விஜய். தி மு க எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க தி மு க செய்யும் ஏற்பாடு. அவ்வளவு தான். விஜய் இன்னும் அரசியல் வாதி ஆகவே இல்லை. விக்ரவாண்டியில் , முக்கால் மணி நேரம், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசியதில் நடிகர் விஜய் தான் தெரிந்தார். தேர்தலுக்கு பின், சன் டிவி அல்லது ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்க போய் விடுவார்.
நீங்க தெளிவுபடுத்த வேண்டியது, கமலஹாசனுக்கு ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்த ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைக்குமா கிடைக்காதா? நம் பூர்வ ஜென்ம புண்ணியம், கமலஹாசன், விஜய் போன்ற எம்.பிக்களைக் காணவேண்டியிருக்கும்.