“வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெல்ல முடியாது – ஆதவ் அர்ஜுனா “…பதில் சொல்ல ஏன் முடியவில்லை திமுகவால் ….???

…………………………………………

………………………………………………

விசிக தலைவர் திருமா, தான் சொல்ல நினைப்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்லும் சூழ்நிலை இல்லாததால், ஆதவ் அர்ஜுனா மூலம் அந்த கருத்துகளை வெளிப்படுத்துகிறார் …

( வீடியோவின் 2-வது பாதியில் மிகச்சிறப்பாக அடித்து
விளையாடுகிறார் ஆதவ் அர்ஜுனா.
நேரம் இல்லாதவர்கள் கடைசி 20 நிமிடங்களை மட்டும்
பார்த்தாலே போதும்…. )

திமுக – சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் விழிக்கிறது … தற்போதைக்கு…..!!!

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் ஆர்.எஸ்.பாரதி – இந்த சவாலுக்கு ஏன் பதிலோ, மறுப்போ தெரிவிக்கவில்லை …??? ஆதவ் அர்ஜுனா சொல்வது உண்மை தான் என்பதாலா …😊😊😊

………………………………………………

……………………………………………………………………..

ஞாயிறு அன்று தந்தி டிவியில் வெளியான மேற்படி காணொளிக்கு எதிர்வினையாற்றிய செல்வம், ஆ ராசா ஆகியோருக்கு பதிலடியாக –

“விசிகவை அதிகாரத்திற்குக் கொண்டு வர வேண்டும்” என்பது தான் எங்கள் நோக்கம், கொள்கை எல்லாமே ……அடித்து சொன்ன ஆதவ் அர்ஜுனா – புதிய தலைமுறையில் செவ்வாயன்று மீண்டும் பேட்டி ….

……………………………………………………………

……………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to “வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெல்ல முடியாது – ஆதவ் அர்ஜுனா “…பதில் சொல்ல ஏன் முடியவில்லை திமுகவால் ….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இவர் பேசுவதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் 2000 வாக்குகளும் மிக முக்கியம் என்பதினால் மாத்திரம் சுயேச்சைகளுக்கெல்லாம் மந்திரி பதவி வழங்கமுடியுமா? விசிக தனியாக நின்றால் டெபாசிட் கிடைக்காது. திமுக சின்னத்தில் நின்றுதானே வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை 2 எம்பி சீட்கள் வெற்றிபெற திமுகதானே காரணம்.. இல்லையென்றால் சின்னமே இருந்திருக்காதே. தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் வேலையை மேற்கொண்டால் (ஆதவ் அர்ஜுனன் மூலம் திருமாவளவன்) அடுத்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் நின்று டெபாசிட் பறிகொடுக்க வேண்டியதுதான்.

    2 சதம் வாக்குகளுக்கே மந்திரி பதவி வேண்டுமா? அதிலும் பெட்ரோமாக்ஸே (துணை முதல்வர்) வேண்டுமாமா? நல்லது. வேறு கடையைப் பார்த்துக்கொள்ளலாம் என்று திமுக சொன்னால் இவர் எங்க போவார்? விசிகவின் நம்பகத்தன்மையின்மையை அறியாததா அதிமுக? ஆட்சியின் கடைசி வருடம் என்று நினைத்து மிரட்டிப் பார்த்தால், சென்ற வாரம் அறிவாலயத்துக்குச் சென்று சரணடைந்ததைப் போல ஆகிவிடும். அப்புறம் வெளியே வந்து, எங்களுக்கிருக்கும் பலத்துக்கு அமெரிக்க செனட்டில் ஒரு இடம் தரவேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, தவறுதலா எங்கள் துணைப் பொதுச்செயலாளர், தமிழகம் என்று கூறிவிட்டார் என்று வழிய வேண்டியிருக்கும்.

    6 சதம் இருந்த (இருந்த) பாமகவுக்கே, அதிலும் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தபோதே வாரியத் தலைவர் பதவி கூட கொடுக்காத திமுக, 2 சதம் கட்சிக்கெல்லாம் மந்திரி பதவியை நினைத்துப் பார்க்குமா? இந்த 2 சதத்திலும் எத்தனை சதவிகிதம் விஜய் கட்சிக்குப் போகப்போகுதோ.

  2. Beruki's avatar Beruki சொல்கிறார்:

    திமுகவின் வெற்றிக்கு வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் முடியாது என்பது ஆதவ் அர்ஜுனாவின் கருத்து. திமுகவின் பலம் வட மாவட்டங்களில் இல்லை என்பதே இதற்கு காரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.