………………………………………….

………………………………………………
ஒரு காலத்தில் கதாநாயகனாக, பின்னர் வில்லனாக, நகைச்சுவை
நடிகராக, குணசித்திர நடிகராக என்று பல்வேறு வடிவங்களிலும்
நீண்ட காலம் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் டி.எஸ்.பாலையா.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலையா, சர்க்கசில் சேர்ந்து பெரிய கலைஞனாக
வரவேண்டுமென்று ஆசைப்பட்டு, 14 வயதிலேயே, யாரிடமும் சொல்லாமல்
வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாராம்.
ஆனால், அவர் விதி அல்லது தமிழக மக்களின் அதிருஷ்டம்,
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் அவரை கொண்டு போய் சேர்த்தது…
படிப்படியாக வளர்ந்து, பல கம்பெனிகள் மாறி, இறுதியாக எம்.கே.ராதா அவர்களின் தந்தையான கந்தசாமி பிள்ளை என்கிற கதாசிரியர் /
நாடக குருவின் வசம் போய்ச்சேர்ந்தார் பாலையா.
கந்தசாமி பிள்ளை அவர்கள், தான் வசனம் எழுதிய
திரைப்படமான சதி லீலாவதியில், பாலையா-வுக்கும் ஒரு வாய்ப்பு
வாங்கிக் கொடுத்தார்….
அதில் துவங்கியது டி.எஸ்.பாலையாவின் திரைப்பயணம்…
எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் சதி லீலாவதி தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது……
பிறகு பல்வேறு திரைப்படங்கள், பலதரப்பட்ட கதா பாத்திரங்கள்.
தான் நடித்த அத்தனை பாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்தார்
பாலையா….. பல படங்கள் குறிப்பிடத்தக்கவை…
திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள்,
பாவ மன்னிப்பு என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்….
நான், என் சிறு வயதில், டி.எஸ்.பாலையா அவர்களை முதன்முதலில் பார்த்தது,
எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி நடித்த “மதுரை வீரன் “படத்தில்….
அப்போதே என் மனதில் தனி இடம் பிடித்து விட்டார் பாலையா….
இங்கே, மதுரை வீரனில், டி.எஸ்.பாலையா தொடர்புள்ள –
மறக்க முடியாத சில காட்சிகள் அடங்கிய காணொளியை
பதிப்பிக்கிறேன்….
நேரம் குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு மினி வீடியோ…..
விடுமுறை நாளை ரசித்து கொண்டாட விரும்புபவர்களுக்கு
ஒரு மெகா காணொளி….
அவரவர் வசதிக்கு தகுந்தபடி பார்த்துக் கொள்ளவும்.
( மெகா பார்ப்பவர்கள், மினி பார்க்க வேண்டிய அவசியமில்லை
என்று நினைக்கிறேன்…மெகா’வில், மினி அடங்கி
விடுகிறது…!!! ஆனால் மினி’யை பார்ப்பவர்களை, அது தானாகவே, மெகா’வை பார்க்கத் தூண்டும் …..!!!)
……………………………….
மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து –
மினி – ( 9 நிமிடங்கள் )
………………………
……………………….
மெகா – ( 30 நிமிடங்கள்…)
………………..
…………………………………………………………………………………………………..……………..



நிஜமான சாமியாரா இல்லை ….