…………………………………………………

…………………

…………………

…………………
74 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு
அற்புதமான திருமண விழாவைப்பற்றி விவரிக்கிறார்
திரு.ஸ்ரீராம் அவர்கள்.
அண்மையில் நடைபெற்ற அம்பானி குடும்பத் திருமணத்திற்கும்,
74 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஜெமினி வாசன் குடும்பத்
திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மிக நன்றாகவே புரிந்து
கொள்ள முடிகிறது…..
குஜராத்திக்காரர், பலரின் வயிற்றெரிச்சல்களூடே குவித்துக் கொண்டே
போன பணத்தின் ஒரு பகுதியை, தன்னையொற்றிய பணக்கார
பட்டாளத்துடன் மட்டும் சேர்ந்து, ஆடம்பரமாக கொண்டாடினார்.
பார்க்கவே எரிச்சலூட்டும் அளவிற்கு படாடோபம்….
சாதாரண பொதுமக்களுக்கு அதில் எதுவுமே இல்லை….
ஆனால், தமிழ்நாட்டுக்காரர், மக்களை மகிழ்வித்து, திரைப்படங்களின்
மூலம் தான் சம்பாதித்த பணத்தை, அந்த மக்களுக்கே திருப்பி அளித்தவர்.
ஆசைப்பட்ட அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு,
தன் கம்பெனி ஊழியர்களையும் மகிழ்வித்து, ஊரே சேர்ந்து
வாழ்த்தும் அளவிற்கு மகளுக்கு திருமணம் நடத்தினார்…
ஸ்ரீராம் அவர்கள், 74 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக்கால மெட்ராஸில்
நடந்த அந்த திருவிழாவின் அனைத்து விவரங்களையும் சேகரித்து,
மிக அழகாக தொகுத்து அளிக்கிறார்…..
( ஒருவிதத்தில் தனிப்பட்ட முறையில், எனக்கு இதை பகிர்ந்து கொள்வதில் இதில் ஒரு மகிழ்ச்சி….
திரு.எஸ்.எஸ். வாசன் அவர்கள், மெட்ராஸில் சாதாரண மனிதராக
இருந்த காலத்தில், 1930-42 கால கட்டங்களில், என் அப்பாவும், அவரும்
நல்ல நண்பர்கள்…. ஆனால், அதன் பிறகு, என் அப்பா வேலை தேடி, வடக்கே சென்று விட்டார்… வாசன் அவர்கள் பத்திரிகைத்துறை, திரைப்படத்துறை ஆகியவற்றில் பல வெற்றிகளைக் குவித்து, மிகப்பெரிய மனிதராகி விட்டார்….
அவர் பெரிய செல்வந்தரான பிறகு என் அப்பா சில முறை
மெட்ராஸ் வந்தபோதும், வாசன் அவர்களை சந்திப்பதை தவிர்த்தார்.
காரணம் – எங்கள் குடும்பம் குசேலர் குடும்ப நிலையில் இருந்தது.
அந்த நிலையில், மிகப்பெரிய செல்வந்தராகி விட்ட நண்பரை
கண்டால் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்….
தர்மசங்கடமான அந்த சூழ்நிலையை என் அப்பா விரும்பவில்லை…. !!!
ஆனால், எவ்வளவு பணம் சம்பாதித்த போதும், வாசன் அவர்கள் தனிப்பட மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார்…. 4 முழம் வேட்டி, வெள்ளை கதர்சட்டை, செருப்பு – அவ்வளவு தான்….
இந்த விஷயங்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்னர், என் அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும் ……)
நல்ல ஒரு காணொளியை நீங்களும் ரசிக்க -கீழே பதித்திருக்கிறென்.
………………………………………………..
.
………………………………………………



ஐம்பது ஜோடிகளுக்கு இலவச திருமணம் நன்றாகவே இப்போது அம்பானி குடும்பம் நடத்தியதாகப் படித்தபோதும், அதீத ஆடம்பரம், அதையொட்டிய செய்திகள் வெறுப்பைத்தான் உண்டாக்கியது (ஜெ. நடத்திய திருமணம் போல, அதுவும் சம்பந்தமில்லாத கொள்ளைக்கூட்டத்திற்கு). இந்த மாதிரி ஆடம்பரத் திருமணத்தால் அம்பானிக்கு என்னமாதிரியான விளம்பரம் கிடைக்கும்? யார்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அம்பானி இதன் மூலம் என்ன சாதித்தார்? வெற்று நடிக நடிகையர், பிரபலங்களை காசு கொடுத்து வரவழைப்பதால் அவருக்கு என்ன லாபம்? இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். சரியான நேரத்தில் இந்தப் பதிவைப் போட்டிருக்கிறீர்கள்.
வாசன் மிக கறாரானவர் (பண விஷயத்தில்) ஆனால் மிக மிக எளிமையானவர் என்றே படித்திருக்கிறேன். எஸ் எஸ் வாசன் போன்ற கேரக்டர்களெல்லாம் மிக மிக அபூர்வமானவர்கள். இறக்கும்போதும் அதையொட்டி மிக மிக எளிமை. ஆச்சர்யம்தான். (சம்பந்தமேயில்லாமல், எனக்கு பேரரசராக இருந்த ஔரங்கசீப் தன் இறப்புக்குப் பிறகு என்ன செய்யவேண்டும் என்று எழுதிவைத்திருந்தது நினைவுக்கு வருகிறது. அவருமே ஒரு ஆச்சர்யமான மனிதர்தாம்). பெரிய மனிதர் எஸ் எஸ் வாசன் அவர்களை நினைவுகூர்ந்ததில் மகிழ்ச்சி. இதுபோன்றே ஏ வி எம் செட்டியாரும் தன் இல்லத் திருமணத்தை நன்றாக நடத்தினார், ஆனால் அதீத ஆடம்பரமாக மற்ற எளியவர்களின் வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்டு அல்ல.
அதே சமயம், தன் குடும்பத்தில் பிறந்த சிறிது ஊனமுற்ற (அப்படித்தான் எனக்குத் தோன்றியது) பையனை மகிழ்விக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதுபோல அம்பானி அவர்கள் நடந்துகொண்டது, பையனின் மகிழ்ச்சிக்குத்தான் என்பதாக இருந்திருந்தால், அதில் தவறு இருந்திருக்கமுடியுமா? நமக்குத் தோன்றுகிறது, இதைவிட எல்லோரும் மகிழும்படி இன்னும் சிறப்பாக நடத்தியிருந்திருக்கலாமே என்று.
ஒவ்வொருவரும் தன்னைவிட பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களின் வாழ்க்கை செயல்களை கண்டு வெறுப்பை கக்குவது இயல்புதான். நாம் அம்பானியின் திருமணத்தை கண்டு வயிறு எறிகிறோம்.
இதே போன்று ஒவ்வொரு MIDDLE CLASS கல்யாணத்திருக்கும் செலவழிக்கும் சாதாரண 5-10 லட்சங்களை கண்டு வயிறு எரிபவர்களையும் காண்கிறேன். ஆக நாம் ஏழைகள் என்றும் நாம் செலவழிப்பது ஆடம்பரம் இல்லை போன்றும், நம்மை விட பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் மட்டும் தான் ஆடம்பர பேர்வழிகள் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்…
மிகவும் சரி. அவரோட பணத்தை இப்படித்தான் செலவழிக்க வேண்டும் என கூற நாம் யார். மதுரையில் ஒர் அமைச்சர் 100கோடிக்கும் மேல் அவரநு மகளது திருமணத்திற்கு செலவழித்த போது இதே மக்கள் என்ன சொன்னார்கள்.