தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

……………………………………

……………………………………

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ??

அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும்
39 ஆண்டுகள் தான்.

அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது.
மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக
ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி
இருந்திருக்க முடியும் ?

ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட
சாதிக்க முடியாததை
அந்த மனிதர் சாதித்தார்.

வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் கொடுத்தார்.
150 ஆண்டுகள் தாண்டியும் இன்றும் உயிர்ப்புடன்
நினைக்கப்படுகிறார்.

இன்றைய தினம்  எழுதப் படிக்கத்
தெரிந்தவர்களில்  அவரைத் தெரியாதவர் யார் ?

நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.
எப்பேற்பட்ட ஆளுமை ! சாதனை !!

150 ஆண்டுகள் –
ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே –
டிவி, ரேடியோ, தொலைபேசி,விமானம்
போன்ற எதுவுமே இல்லாத காலத்திலேயே,

ரயில்-பஸ் பயணம் அரிதாக இருந்த காலத்தில் –
பத்திரிகைகள் மற்றும் நவீன விஞ்ஞான தொலை தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த நாட்களிலேயே –
மேற்கத்திய உலகம் முழுதும் அவர் தெரியப்பட்டிருந்தார் !

கையில் ஒரு ரூபாய் பணம் கூட இல்லாத சந்நியாசியாக –
ஜப்பானில் – நாகசாகி, கோபே, யாகொஹாமா, ஒசாகா,
க்யோடோ, டோக்கியோ –
சீனாவில் பல ஊர்கள்  –
கனடா,  பிரான்ஸ், பிரிட்டன் –
இஸ்தாம்புல்,  ஏதென்ஸ், எகிப்து, இலங்கை
அமெரிக்கா முழுவதும் பல நகரங்கள் –
அவர் சென்ற நாடுகள் தான் எத்தனை !

1893ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11ஆம் நாள் –
அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் –
“எனதருமை அமெரிக்க சகோதர சகோதரிகளே”
என்று தன் உரையைத் துவக்கி இந்த உலகையே
தன் ஆளுமையால் கவர்ந்திழுத்த
இந்தியத் துறவி  அவர் !

700 ஆண்டு காலம் அந்நிய மொகலாய அரசர்களிடமும்
200 ஆண்டு காலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமும்
அடிமைப்பட்டு சுயதன்மையை இழந்து,
தன் பண்பாட்டையும், பழம்பெருமையையும் –
மறந்து கிடந்த இந்திய சமுதாயத்திற்கு –
புத்துயிர்  ஊட்ட வந்தவர் அவர்.

ஆன்மிகம், தேசீயம் இரண்டிற்கும் அவர் ஆற்றிய
தொண்டு – அளப்பரியது.

” மனித சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டு தான்
தெய்வத்திற்கு செய்யும் தொண்டு”
-என்பதை செயலில் உறுதிப்படுத்தியவர்.

கல்வியறிவு இல்லாமையும், பொறாமையும்,
ஜாதி வேற்றுமைகளும் தான் பாரதம் அடிமைப்படக்
காரணம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியவர்.

“நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு”.

“உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள்.
நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும்
எஃகைப் போன்ற நரம்புகளும்தான்.”

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆவாய்!”

“சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்!”

– என்று துவண்டு கிடந்த இந்திய  சமுதாயத்திற்கு
புது ரத்தம் பாய்ச்சியது அவரது சிம்மக் குரல் .

இந்தியா சுதந்திரம் பெறத் தேவையான
அடிப்படை உணர்வுகளை
இந்திய மக்களிடம் தூண்டியவர் அவர்.

ஒரு துறவி ஆன்மிகப் பணி மட்டுமின்றி,
சமுதாய முன்னேற்றத்திற்காகவும்,
நாட்டின் அடிமை விலங்கை அகற்றவும்
எத்தகையை பெரும் பங்காற்ற முடியும் என்பதை
தனது வாழ்நாளின் கடைசி மூச்சுவரை
நிரூபித்துக் காட்டியவர் அவர்.

———-

இத்தகைய ஒரு  துறவி நம் நாட்டில் –
மீண்டும் ஒரு முறை –

இந்த முறை ஆன்மிகத்திற்காக அல்ல –

அரசியலுக்காக, இந்திய அரசியலுக்காக –
தோன்ற மாட்டாரா என்கிற
ஆவல் பிறக்கிறது !

தோன்றினால் நன்றாக இருக்குமே என்கிற
ஏக்கம் பிறக்கிறது !

நிச்சயம் தோன்றுவார் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

ஆனால் ……எப்போது ?

இங்கு நான் துறவி என்று எதிர்பார்ப்பது –
காவியுடையும், தலையில் முண்டாசும் தரித்த
இன்னொரு சந்நியாசியை அல்ல.

– தன் நலம் துறந்த ஒரு  தலைவனை !
இந்த நாட்டிற்கு தலைமை தாங்கி
முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒருவரை !!

(துறவி  என்றால் – துறந்தவர் என்று தானே பொருள் ?)

இந்த தேசத்தில் பிறந்து –
இந்த தேசத்தின் மக்களையும்,
அவர்களது நல் வாழ்வையும் விரும்பும் –

இந்த நாட்டு மக்களுக்காக
எதையும் செய்யத் தயாராக இருக்கும் –

தன்னலம் கருதாது
பொது நலம் கருதி செயல்படக்கூடிய –

நேர்மையான, கர்வம் அற்ற, எளிமையான, வெளிப்படையான –
அதி வல்லமை படைத்த – ஒரு  உண்மையான தலைவரை …!!!)

———————————————-

சுவாமி விவேகானந்தா தொடர்புடைய
சில புகைப்படங்களை இந்த தளத்தில் ஒருங்கிணைத்து
பதிக்க விரும்பி கீழே பதிகிறேன்.
(இதனைச் செய்ய எனக்கு உதவிய
அத்தனை பேருக்கும் என் நன்றிகள் )

…………………………………………………..

குரு ராமகிருஷ்ண பரமஹம்சர்

2 guru ramakrishnar

ஒரு கம்பீரத் தோற்றம்

swami-1

இன்னுமொரு கம்பீரத் தோற்றம்
விவேகானந்தரின் கையெழுத்துடன்

swami-2

சான்பிரான்ஸிஸ்கோவில் ஸ்டூடியோ ஒன்றில்
1900-ல் எடுக்கப்பட்ட புகைப்படம்

sv-4

1897ல் சென்னையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

sv-5

கல்கத்தாவில் சக சீடர்களுடன்

sv-6

அமெரிக்காவில் -சிகாகோவில்
உலக சமய மாநாட்டின்போது

sv-7

அமெரிக்காவில் அன்று  உலக சமய மாநாடு
நிகழ்ந்த இடத்தில் ஒரு மேடையும், மைதானமும்
மட்டுமே இருந்தன. அந்த இடத்தின் இன்றைய தோற்றம்

sv-8

விவேகானந்தர் உரையாற்றிய மேடையின்
இன்றைய மாற்றப்பட்ட தோற்றம்

sv-9

சிகாகோவில் விவேகானந்தர் உரை ஆற்றிய
மண்டபம் இருக்கும் தெருவிற்கு அவரது நினைவாகப்
பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

sv-10

விவேகானந்தர் ஒரு சந்நியாசியாக
பங்களூருக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம்

sv-11

ஒரு கம்பீரத் தோற்றம்

sv-12

நிவேதிதா அம்மையாருக்கு விவேகானந்தரின்
சொந்தக் கையெழுத்தில் ஒரு கடிதம்

sv12

பேலூர் மடத்தில் விவேகானந்தரின்
உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்காக
எழுப்பப்பட்ட நினைவிடம்

sv-15

.

…………………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

  1. ஆதிரையன் சொல்கிறார்:

    ஏற்கெனவே சனாதன தர்மத்தை வேரறுக்க போராடிக்கொண்டிருக்கிறோம்.இந்தநிலையில், மேலும் சனாதன தர்மத்தை காக்க இன்னொருவரா ..போதும் …
    மதச்சார்பின்மைக்கு இழுக்கு ..
    சிறுபான்மையினரின் நலம் பாதிக்கப்படும்.

  2. Jksmraja சொல்கிறார்:

    துறவி , சந்நியாசியையும் தாண்டிய ஒரு தெய்வப்பிறவியே அதிபராகக்கொண்ட ஒரு நாட்டில் இப்படி புலம்புவது அந்த தெய்வ பிறவியை அவமான படுத்துவதாகும்.

  3. Peace சொல்கிறார்:

    Americas first guru is the documentary released this year on Swami Vivekananda on Public Television

பின்னூட்டமொன்றை இடுக