…………………………………………………………………….

…………………………………………………………..…
10 நாட்கள் முன்பு வரை கூட திமுகவை மிகக்கடுமையாக சாடி வந்த
துக்ளக் ரமேஷ், திடீரென்று இப்போது கலைஞர் கருணாநிதி மற்றும்
முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசும்
காட்சியை கீழே காணொளியில் பார்க்கும் பலருக்கும் வியப்பாகவே
இருக்கும். திடீரென்று என்ன ஆயிற்று ரமேஷுக்கு என்று தோன்றும்..
எல்லாம் கால, நேர கோளாறு தான்..!!!
தேர்தல் முடிவுகள் வெளியாகி, சற்றும் எதிர்பாராமல்,
நம்பகத்தன்மையற்றவர்களுடன் சேர்ந்து மத்தியில் பலவீனமான ஒரு
கூட்டணி அரசை அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாஜகவை
தள்ளி விட்டது….
எதிர்பாராத தர்மசங்கடமான நிலைகளில் மத்திய அரசு திணறும்போது,
கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட, மறைமுகமாக திமுக தலைமையால்
உதவ முடியும்…. எனவே, இப்போதைக்கு திமுகவுடன் நல்லுறவை பேணுவது
நல்லது என்பது பாஜக தலைமையின் உத்தியாக இருக்கும்…
துக்ளக் ரமேஷின் பேச்சு அதன் துவக்கமாக இருக்கலாம்…’குரு’நாதர்
சொல்லாமலா ரமேஷ் பேசுவார் …??? இந்த நிகழ்ச்சியை தவிர்க்க விரும்பி
இருந்தால் ரமேஷ் சுலபமாக தவிர்த்திருக்கலாம். விரும்பியே கலந்துகொண்டிருக்கிறார்… குளிரக் குளிர பேசி இரூகிறார்….!!!
விரைவிலேயே, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழக அரசின்
சில கோப்புகள் விமோசனம் பெறலாம் … நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தால்,
ஆளுநர் மாளிகைக்கு கூட யாராவது புதுக்குடித்தனம் வரலாம்…..
அரசியலில் எதுவும் சாத்தியமே…..!!!
……………………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………….



இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…