…………………………………………….

…………………………………………….

………………………………………………………..
185 ஏக்கர் பரப்பளவில், கலைச்சிறப்பு மிக்கதொரு படைப்பு …
………………………………………………….
…………………
………………………………………………….
2009-ல் சிந்தனையில் உருவான கருத்து …
2015 ல் தொடங்கிய கட்டுமானப் பணி …
2023, அக்டோபர் 8-ந்தேதி, நிறைவு பெற்று …குடமுழுக்கு,
மற்றும் பொதுமக்களுக்கான திறப்பு விழா ….
இந்து வேதங்களின் வழிகாட்டுதல்கள்,
வைதீக நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி,
சகலத்திலும் பண்டைய இந்திய கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் நோக்கில் பழமை மாறாமல் கட்டமைக்கப்பட்டுள்ள –
சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் …..
ஒரு பிரதான கோயில், 12 உப கோயில்கள், ஒன்பது கோபுர கட்டமைப்புகள் …
சுமார் 12,500 பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் மனமுவந்த
உழைப்பு … மற்றும் இந்தியாவிலிருந்து சில தலைசிறந்த
சிற்பிகளின் சிறப்பான பங்களிப்பு ….
தேர்ந்தெடுக்கப்பட்ட பளிங்கு, கிரானைட் மட்டுமன்றி,
கடுமையான வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் வகையிலான
சுண்ணாம்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல் உள்ளிட்டவையும்
கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
- பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல்,
- கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்கு கல்,
- இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட் ஆகியவை
கொண்டு செல்லப்பட்டு கட்டுமானப்பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது..
அமெரிக்காவின் -நியூஜெர்சி எங்கே – இந்த நாடுகள் எங்கே …?
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தெல்லாம் இத்தகைய
கட்டுமானப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குடமுழுக்கு விழாவிற்காக இந்தியாவின் புனித நதிகள் மற்றும்
அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து
300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து புனித நீர் கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களை பெரும்பான்மையானவர்களாக கொண்டுள்ள
ஒரு நாடு – இவ்வளவு பெரிய இந்து கோவில் ஒன்று உருவாக
முழுமனதோடு அனுமதியளித்ததும், சிறப்பாக ஒத்துழைப்பு தந்ததும் –
மிகவும் பாராட்டத்தக்கது.
உலகிலேயே பெரிய கோவிலை, இவ்வளவு அற்புதமாக உருவாக்கி,
மகத்தான சாதனையை புரிந்த பிறகும் – இதற்காக இந்த அமைப்பைச்
சேர்ந்த யாருமே பெருமையடித்துக் கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
இவர்களது எளிமையும், அடக்கமும் பாராட்டத்தக்கது.
- நம் மக்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவும்,
நமது மனம், எண்ணங்கள் – இன்னும் விரிவு பெறவும் –
இந்த நிகழ்வு பெரிதும் உதவும் என்று நம்புவோம் ……!!!
…………………………………………..
.
…………………………………………………..
பிற்சேர்க்கை –
பனி போர்த்திய அக்ஷர்தாம் கோவிலின் இன்றைய காட்சி –
இத்தகைய மிக கடுமையான தட்பவெப்ப சூழ்நிலைக்கிடையே
தான் இத்தகைய மாபெரும் பணியை செய்திருக்கிறார்கள்
என்பதை பார்க்கும்போது இவர்கள் மீது வியப்பும், மரியாதையும்
இன்னமும் கூடுகிறது…..
Wonderful scene –
Frozen Beauty:
Drone’s Eye View of Snowfall at Akshardham, NJ –
…………….
……………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….