………………………………….

…………………………………..
உத்திரப் பிரதேச, வாரணாசி, மாவட்ட நீதிமன்ற உத்திரவையொட்டி,
காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி கட்டிடத்தில்,
இந்திய தொல் பொருள் இலாகா, தாம் மேற்கொண்ட
ஆராய்ச்சியில் – கிடைத்த பொருட்களையும், சான்றுகளையும்
அடிப்படையாகக் கொண்டு,
மொகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் –
ஏற்கெனவே அங்கே இருந்த ஒரு பெரிய இந்து கோவிலை இடித்து விட்டு,
தற்போது இருக்கும் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்கிற முடிவுக்கு வந்து,
850 பக்கங்கள் அடங்கிய தனது இறுதி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இந்த விரிவான அறிக்கை, பொது தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், ஆவணங்களாக வெளியிடப்பட்டுள்ள சில
சான்றுகளின் புகைப்படங்கள், வாசகர்களின் பார்வைக்காக கீழே
பதிவிடப்பட்டிருக்கிறது.
……………………………………
எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, கோவில் மீது தான் மசூதி
கட்டப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகத் தெரிவதால்,
மேலும் மேலும் பிரச்சினையை தொடர்ந்து,
மோதல் சூழ்நிலையை வளர்க்காமல் –
இந்த விஷயத்தில் ஞானவாபி மசூதி சார்பாக செயல்படும் இஸ்லாமியர்
குழு, அந்த இடத்தின் மீதான தமது உரிமையை கைவிட்டு,
வழக்கிலிருந்து விலகிக்கொள்வதே சிறந்த வழி.
மேலும், அவர்கள் தாமாகவே முன்வந்து, அந்த இடத்தை அரசின் வசம்
ஒப்படைத்து விட்டு, பதிலுக்கு, தங்களுக்கு சௌகரியமான ஒரு
இடத்தை தேர்ந்தெடுத்து, அதனை, உத்திரப் பிரதேச அரசிடமிருந்து
உரிய முறையில் பெற்றுக் கொண்டு, அங்கே புதியதொரு மசூதியை
உருவாக்கிக் கொள்ளலாம்.
இது ஒன்றே இரு மதத்தினரிடையே, ஒற்றுமையையும், நீடித்த நிம்மதியையும்,
நட்புறவையும் வளர்க்க உதவும்…
மேலும் மேலும் வழக்குகளை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று எடுத்துச் செல்வதால் இந்த விஷயத்தில் தீர்வு காண்பது பல வருடங்களுக்கு நீண்டுகொண்டே போகும்…. அது யாருக்கும் நிம்மதியை கொடுக்காது.
அப்படிச் சென்றாலும், இறுதியில் வலுக்கட்டாயமாக சுமத்தப்படும் எந்தவொரு தீர்ப்பும் –
மேலும் மேலும் பகைமையையே வளர்க்கும் என்பதால்,
இங்கே மனப்பக்குவம் முக்கியமாகிறது.
அரசியல்வாதிகள் உள்ளே நுழையாத வரையில், இதில் வென்றவர் தோற்றவர் என்கிற பேச்சுக்கே இடமில்லை….
எப்போதோ நிகழ்ந்து விட்ட தவற்றை சரி செய்ய இந்த சந்தர்ப்பத்தை
இரு தரப்பினரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதே
சிறப்பு.
…………………………………………………………………………………………………………………………………………………..

………………………………………………….

………………………………………………..

……………………………………..

………………………………………

………………….

…………………………

………………………..

…………………………….

………..

……………………….

…………………………..

…………………………

……………………..

………………..

………………….

…………..

…………………….

..
…………………………………………………………………………………………………………………………………………………..



வாசக நண்பர்களுக்கு,
என்னுடைய எழுத்தின் முக்கிய குறிக்கோள் –
பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே –
மத நல்லிணக்கத்தையும்,
ஒற்றுமையையும்,
நல்லுறவையும் – வளர்ப்பது தான்.
எனவே, இதற்கு நேர் மாறாக, எதிர்மறை கருத்துகளோடு
பிரிவினையையும், மதமோதல்களையும்
மேலும் ஊக்குவிக்கக்கூடிய விதத்தில் வரும் பின்னூட்டங்களை
நான் இங்கே அனுமதிப்பதற்கில்லை என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அந்த மசூதியை கொடுத்துட்டு வேற இடம் பார்த்து இஸ்லாமியர்கள் போகணுமா இல்ல இந்துக்கள் இதை பெரிது படுத்தாம அவங்கள அங்கேயே தொடர்ந்து செயல்பட விடணுமா ? தங்களுடைய கருத்து என்ன சார் ?
ஜீரணித்துக் கொள்ள முடியாமல், புதிய பெயரில் வந்திருக்கும்
பழைய நண்பர் என்பது – அவசர அவசரமாக யோசிக்காமல்
செய்திருக்கும் ரீ-ஆக்ஷனிலிருந்து புரிகிறது.
நிதானமாக, கொதிப்படையாமல்,
மேலே நான் இடுகையில் எழுதி இருக்கும்
கீழேயுள்ள இந்த கருத்துகளை மீண்டும் ஒருமுறை
படித்துப் பார்த்து விட்டு,
உங்கள் பின்னூட்டத்தில் எதாவது அர்த்தம் உள்ளதா என்பதை
நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள்…..
…………
// மேலும் மேலும் பிரச்சினையை தொடர்ந்து,
மோதல் சூழ்நிலையை வளர்க்காமல் –
இந்த விஷயத்தில் ஞானவாபி மசூதி சார்பாக செயல்படும்
இஸ்லாமியர் குழு, அந்த இடத்தின் மீதான தமது உரிமையை
கைவிட்டு, வழக்கிலிருந்து விலகிக்கொள்வதே சிறந்த வழி.
மேலும், அவர்கள் தாமாகவே முன்வந்து, அந்த இடத்தை
அரசின் வசம் ஒப்படைத்து விட்டு, பதிலுக்கு, தங்களுக்கு
சௌகரியமான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அதனை,
உத்திரப் பிரதேச அரசிடமிருந்து உரிய முறையில்
பெற்றுக் கொண்டு, அங்கே புதியதொரு மசூதியை
உருவாக்கிக் கொள்ளலாம்.
இது ஒன்றே இரு மதத்தினரிடையே, ஒற்றுமையையும்,
நீடித்த நிம்மதியையும்,
நட்புறவையும் வளர்க்க உதவும்… //
………………….
.
-காவிரிமைந்தன்
………………………
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் தான் கோவில்களுக்கு என்று ஒரு வரலாறு, தெய்வீக தன்மை போன்ற நம்பிக்கைகள் உண்டு. அதனால தான் , வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, தெய்வீக தன்மை கொண்ட இடங்களில் கோவில்கள் முக்கியத்துவம் பேண படுகிறது.
ஆனால் மற்ற மதங்களில் கடவுளை கும்பிடுவதற்கு , நமது கோவில்கள் போன்ற பூஜை,புனஸ்கார நம்பிக்கைகள் கொண்ட இடங்கள் தேவை படுவதில்லை. அவர்களுக்கு வேண்டியது , எல்லோரும் இணைந்துகடவுளை தொழுவதற்கு என்று ஒரு இடம்(BUILDING ) மட்டுமே. இதில் அவர்கள் நம்மை போன்று தெய்வதனமை வாய்ந்த இடம் போன்ற நம்பிக்கைகளை இது போன்ற இடங்களில் பின்பற்றுவதில்லை.
அவர்கள் தெருவில், வாகனத்தில், வீட்டில் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் , தொழுதாலே அவர்களுக்கு போதுமானது.எனவே அவர்கள் அயோத்தியை விட்டு கொடுத்தால் , அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நமது அரசியல் வாதிகள் தான் ஓட்டுகளுக்காக அவர்களை குழப்புகிறார்கள்.
பழைய நண்பர் தான் சார். அந்த idதெரியாதால இந்த புது id.ஆனா இப்படியே போச்சுனா எல்லா மசூதிகளின் அடியிலும் ஏதாவது ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படும். எல்லா மசூதிகளையும் அவர்கள் இந்துக்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று ஒரு நாள் அறிவிக்கப்படும். அத்தகைய தாலிபான் தனமான நாட்கள் விரைவில் வரும் சார்.
இப்படிக்கு,
ராமர் கோவிலை எதிர்க்கும் ஒரு இந்து.
ராமர் கோவிலை எதிரக்கும் உடன்பிறப்புன்னு சொல்லுங்க 😆
சார், பாபர் மசூதி இடிப்பு பத்திய சிறிதளவு புரிதலும், அதற்கு பின்னாடி இருக்கிற அரசியல் பத்தின புரிதலும் கொஞ்சமே இருந்தாலும் அதை கோவிலை எதிர்க்கணும். இதனால நான் உபி னு சொன்னீங்கன்னா அதுக்கு எதுவும் சொல்ல முடியாது. நான் மனுசனா இருக்கணும்னு முயற்சிக்கிறேன். ஆனா நீங்க இந்துவா மட்டுமே இருப்பேன்னு சொல்லுறீங்க. அது உங்க விருப்பம்.
ஆமாம். முதலில் வரலாற்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். வட இந்தியர்கள் மொகலாய மன்னர்களால் அனுபவித்த கொடுமைகள் தெரியுமா…
இந்தப் பிறவியில் நான் இந்து. என்னையும் என் நம்பிக்கைகளை மதிப்பவர்களை நான் மதிப்பேன். அவர்களது நம்பிக்கையையும் மதிப்பேன்.
முடிந்தால் உங்கள் முகமூடியை கழட்டிவிட்டு வரவும்
This is not good as per my perspective. RAM TEMPLE ISSUE WAS CLOSED> DONT WANT to get in to it though it is wrong our Hindu people did. We should not move to next though it was demolished by anyone. Lots of Hindu temple was demolished by Hindu Rajas and brougt their own idols though it is Hindu god, then everyone will start … this is not good. We are secular country.. we should not entertain this.. Also Brithish ruled and looted lot of money from India and why don’t we go for a war against British and get it back? Also lots of Suppressed people who treated as inequal in the name of GOD, who all are one of the majority people of India contributed lot to build the temple those days can as a Chief Preist ?
சகோதரரே தங்களது கருத்தை வழிமொழிகிறேன் 🙏🏾