…………………

……………………….
ஜம்மு-காஷ்மீருக்கான – ஆர்டிகிள் 370 எந்த சூழ்நிலையில்,
எதற்காக, எப்படி உருவானது என்பது பற்றியும்,
அதை நீக்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது
என்பது பற்றியும் பாஜக மேடையில் மாலன் விரிவாக,
மிகத்தெளிவாக விளக்குகிறார் மாலன் அவர்கள்….
இந்த விவரமான பின்னணியை நான் ஏற்கெனவே
படித்திருக்கிறேன்…
தற்காலிகமானது என்று சொல்லி உருவாக்கப்பட்ட பிரிவு 370
மிக நீண்ட காலங்களுக்கு தொடர்ந்து –
தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாக
நம்மை வதைத்து வந்தது உண்மை.
அதை நீக்குவதாக பாஜக சென்ற தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு
வாக்குறுதி கொடுத்திருந்தது…. உரிய நேரத்தில் அதனை
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நீக்கியும் விட்டது.
சில அரசியல் கட்சிகள், முக்கியமாக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவை –
இதை எதிர்த்தாலும் கூட –
நாட்டின் இதர பகுதிகளுடன் ஜம்மு-காஷ்மீர் ஒன்றிணைவதை
தடுத்து வந்த இந்த பிரிவு 370 நீக்கப்பட்டது மிக மிக அவசியமானது….
தேவையானது.
மற்ற சில கட்சிகளும் இதை உள்ளாற விரும்பினாலும் கூட,
இதை சட்டபூர்வமாக நிறைவேற்றும் WILL POWER அவர்களிடம் இல்லாதிருந்தது…. !!!
பாஜக இதனை தனது சாதனையாக கொண்டாடினால்,
அதில் எந்தவித தவறும் இல்லை.
நிச்சயமாக இது பாஜக-வின் சாதனை தான்.
Article 370 பற்றி,
மாலன் அவர்கள் விவரமாகப் பேசும் காணொளி கீழே –
………………………………………………………………..
.
…………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….