…………………………………………..

……………………………………………
பொதுவாக கல்வி என்பதை மாநிலங்களின் பொறுப்பில் விடுவது தான் சரி.
மாநில பட்டியலில் இருந்த கல்வியை எமெர்ஜென்சி காலத்தில் எதிர்த்துகேட்க ஆளில்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பொதுப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி…. அந்த நிலையை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசும்/கட்சியும் - தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை; இருந்தாலும், கல்வி மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது தான் நியாயம்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்று அண்ணாமலை அவர்கள் விரும்பினால், மொழிப்பிரச்சினையை அவர் தொடாமல் இருப்பதே நல்லது.
பிடிஆருடன் தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் பிரச்சினையை கிளப்பி, தனது பாப்புலாரிடியை குறைத்துக் கொள்கிறார் திரு. அண்ணாமலை என்று தோன்றுகிறது.
பேசுவது தராசு ஷ்யாம் என்பதை மறந்துவிட்டு, இந்த வாதத்தை கேட்டால், யாருக்கும் அப்படித்தான் தோன்றும்.
……………………………………………
.
………………………………………………………………………………………………………………………………………………



தராசு ஷியாம் மற்றும் அவரைப் போன்ற இன்ன பிற திராவிட மாடல் கருத்தாளர்கள் மொழிக் கொள்கையில் மட்டுமின்றி மற்ற எந்த ஒரு தேசியம் சார்ந்த கொள்கையிலும் அவர்களது பார்வை என்ன என்பது அனைவருக்கும் புரிந்ததே. புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் என்பது மத்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துவது போல் ஹிந்தி மட்டும் அல்ல அவரவர் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் அட்டவணை மொழிகளில் உள்ள ஏதேனும் ஒரு மொழி என்பதே அது. ஆயினும் தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் கருத்தாளர்களும் பற்றாளர்களும் முன்மொழிக் கொள்கையை பற்றி பேசும் பொழுது ஹிந்தியை மட்டுமே முன்னுறுத்தி பேசுகின்றனர் இதற்கு நடுநிலை சார்ந்து இயங்கும் பத்திரிகையாளர்களும் விதிவிலக்கல்ல. மொழி என்பது தொடர்புக்கான ஒரு கருவி என்ற அளவில் தாய்மொழியில் பேசுவது மட்டுமின்றி தேவைப்படும் பட்சத்தில் யாருடன் தொடர்பு கொள்ள இருக்கின்றோமோ அவர்களது மொழி சார்ந்து பேசுகையில் அந்தத் தொடர்பானது எளிதாக இருக்கும் என்ற அளவிலேயே மொழியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தாராசு ஷியாம் அவர்கள் கூறுவது போல் திராவிட மாடல் ஆட்சியில் அது திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி ஏறக்குறைய 60 ஆண்டுகள் அவர்களுடைய ஆட்சியில் தமிழகத்தில் தமிழ் எத்தகைய இடம் பிடித்துள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால் அந்த அறிக்கையின் உண்மைத்தன்மை நிச்சயம் திராவிட மாடல் ஆட்சியின் போலி மொழிக் கொள்கையின் உண்மைத் தன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வதாக தான் இருக்கும். வாஜ்பாய் உடனான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஆகட்டும் அல்லது அதற்குப் பின்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலாக இருக்கட்டும் திமுகவின் பங்கு எத்தகையதொரு வலிமையான பங்காக இருந்தது கூட்டணி ஆட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய விதத்தில் இருந்தது என்பதை அரசியலில் பாலபாடம் அறிந்த அனைவரும் அறிந்தது ஒன்று. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அவர்களால் மத்திய பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கல்விக் கொள்கையினை மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றுவதற்கு அன்று இருந்த திமுக ஆட்சியாளர்கள் ஆற்றிய பங்கு என்ன செய்த போராட்டங்கள் எத்தனை என்பதை ஏன் இவர்கள் வெளியில் சொல்வதில்லை. தனது மகனுக்கும் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வலுவான துறைகளை வேண்டிப் பெற முதுகு வலியையும் மறந்து டெல்லி சென்ற கருணாநிதி அவர்கள் கல்விக் கொள்கையை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற சொல்லி எத்தனை அழுத்தம் கொடுத்திருப்பார் ஏன் இது அன்று கருணாநிதிக்கு தெரியவில்லையா அல்லது முக்கியமாக படவில்லையா. இதற்குப் பின் மறைந்திருக்கும் அரசியல் என்ன. தராசு ஷியாம் போன்று அனைத்தையும் அறிந்த தெரிந்த மூத்த பத்திரிகையாளர்கள் இது பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன். இது அந்தக் காலத்து கதை என்றால் தற்போது ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் நிதிஷ்குமார் அவர்கள் முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் எதற்கு தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கோபித்துக் கொண்ட பொழுது திமுகவினர் ஆற்றிய எதிர் வினை என்ன? நாளை இவர்கள் நம்புவது போல் மத்தியில் ஐ.என்.டி.ஐ.ஏ
கூட்டணி ஆட்சி அமைந்தால் இவர்களது கல்விக் கொள்கை என்னவாக இருக்கும் இது குறித்து வெளிப்படையாக அரசியல் அரங்கில் விவாதிப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தயாராக உள்ளனரா? அண்ணாமலை மட்டுமல்ல எந்த ஒரு அரசியல் தலைவரும் பொது வெளியில் வைக்கும் எந்த ஒரு கருத்தும் அதன் நன்மை தீமை சாதக பாதக அம்சங்களை குறித்து பொது வழியில் வெளிப்படையாக திறந்த மனத்துடன் ஆய்ந்து அறிந்து விவாதித்து கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளுவது என்பதுதான் முதிர்ந்த ஜனநாயகத்தின் பொருள். ஆனால் தமிழகத்தில் பொதுவெளியில் அது போன்ற எந்த ஒரு ஆரோக்கியமான கருத்துக்களும் எந்த ஒரு பத்திரிக்கையாளராலும் ஊடகவியலாளர்களாளும் முன் வைக்கப்படுவதில்லை. இன்று திராவிட மாடன் ஆட்சியாளர்களின் கருத்து என்னவோ அதை பிரதிபலிப்பது மட்டுமே இவர்களது தலையாய கடமையாக கொண்டு செயல்படுவது தான் போலிகளின் உச்சகட்டம். அதன் ஒரு பகுதி தான் இந்த தராசு ஷியாம் அவர்களின் கருத்துக்களும்…
.
vgchandrasekaran,
நண்பர் சந்திரசேகருக்கு ஒரு வேண்டுகோள் –
உங்கள் மறுமொழியை 2-3 பாராக்களாக பத்திபிரித்து
எழுதினீர்களென்றால் படிப்பதற்கு இன்னும் சுலபமாக
இருக்கும்.
(WORDPRESS SOFTWARE also creates problems in clearing
lengthy messages… If it is distributed in paras, there is
no problem …)
……………..
உங்கள் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டுள்ள
கருத்துகளைப்பற்றி நான் இப்போது எதுவும்
சொல்லப்போவதில்லை..
நான் இந்த இடுகையின் மூலம் தெரிவிக்க விரும்பியது
ஒன்றே ஒன்று தான் –
……………………..
மும்மொழி திட்டம் தமிழகத்துக்கு ஒத்து வராது.
எனவே தொடர்ந்து அதை வலியுறுத்தி பேசுவது
அண்ணாமலையின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும்
என்பதை மட்டும் தான்….
……………….
இன்னொரு விஷயம்…
எத்தனை ஹிந்தி பேசும் மாநிலங்கள் இந்த மும்மொழி திட்டத்தை
சீரியசாக அமல்படுத்துகின்றன என்பதை எனக்காக நீங்கள்
கொஞ்சம் கண்டுபிடித்து சொல்லுங்களேன்….
கூடவே, அத்தகைய மாநிலங்களில் – எந்தெந்த 3 மொழிகளை
பொதுவாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும்….
(ஹிந்தி + ? + ? )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மொழிக் கொள்கை தொடர்பான தராசு ஷ்யாம் அவர்களின் பதிவிற்கும் அதைத் தொடர்ந்து அதனை உங்களது பத்தியில் உள்ளீடு செய்து நீங்கள் தெரிவித்திருந்த சில கருத்துக்களுக்கான எனது எதிர்வினை என்பது அண்ணாமலை அல்லது மத்திய அரசாங்கம் வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை ஆதரித்து அன்று.
காவிரி மைந்தன் அல்லது தராசு ஷ்யாம் போன்றோருடன் ஒப்பிடும்பொழுது நான் 70களின் தலைமுறையைச் (70s kid) சேர்ந்தவன். எனது அரசியல் விழிப்புணர்வு என்பது ஆரம்பக் கல்வியை கடந்த என்னுடைய எண்பதுகளின் பிற்பகுதியில் தான் தொடங்குகின்றது.
என்னுடைய தலைமுறையை சார்ந்தோருக்கு இலங்கை தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை போன்றவற்றையே முக்கிய அரசியல் நிகழ்வுகளாக சந்தித்து இருக்கின்றோம் அதில் பங்கு பெற்றும் இருக்கின்றோம்.
எங்களுக்கும் சரி எங்களுக்கு பிந்தைய தலைமுறைகளுக்கும் சரி மொழி பிரச்சனை என்பது அரசியல் ரீதியாக அத்தனை உணர்வு பூர்வமானது அல்ல.
1960 களின் காலகட்டத்தில் மொழி பிரச்சனையில் மிகத் தீவிரமாக இயங்கி தமிழகத்தில் ஒரு உணர்வுபூர்வமான அரசியல் நிலைப்பாட்டினை உருவாக்கி அதன் மூலம் ஆட்சி கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் செய்தது என்ன செய்யத் தவறியது என்ன?
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்று இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை நடத்தும் கேலி கூத்துக்கள் தாய் மொழி உரிமைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தோரின் தியாகத்தை மதிக்கும் வகையில் போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உள்ளதா என்பதையும் தற்போது தமிழகத்தில் தமிழர்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் தமிழ் அவர்களுக்கு உவப்பானதாக இருக்குமா என்பதுமே எனது கேள்வி?
இது போன்ற வரலாற்று ரீதியான கருத்துக்களை பதிவிடும் பொழுது தராசு ஷ்யாம் அவர்கள் குறிப்பிடுவது போல் அதில் நேரடியாக பங்கு கொண்டோர் வரும் தலைமுறைக்கும் நிகழ்கால தலைமுறைக்கும் என்ன உண்மையோ அதை கொண்டு சேர்ப்பதை விடுத்து அது தொடர்பான அவர்களது அரசியல் கருத்துக்களை புகுத்துவதை தான் நான் கேள்விக்கு உள்ளாக்குகின்றேன்.
மொழி உரிமை தொடர்பான போராட்டத்தில் பங்கு கொண்டோர் இத்தளம் வாயிலாக தாங்கள் கண்டதையும் கேட்டதையும் உள்ளது உள்ளபடி கூறுவார்கள் என்றால் அதன் மூலம் எனது அறிவினை விருத்தி செய்யும் வகையில் எனது கருத்துக்களுக்கு எதிர்வினைகள் இருக்குமானால் மகிழ்ச்சி.
நன்றி …
வணக்கம் காவிரி மைந்தன் சார். ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்புடையது. ஆனால் தமிழகத்தில், குறிப்பாக, தி மு க செய்வது, கட்டமைப்பது ஹிந்தி வெறுப்பு.
தனியார் C B S E பள்ளிகள் இங்கே நடத்தலாம். தி மு க காரர்களேபல பள்ளிகள் நடத்துகின்றனர். ஹிந்தி கற்பிக்கப் படுகிறது. பணம் படைத்தவர்கள் இங்கே ஹிந்தி கற்கலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. அதுவும் புரிந்து கொள்ள கூடியதுதான். மத்திய அரசு ஊழியர்களுக்காக.
ஆனால் நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு ஏன். ?
ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப் படுகிறது?
ஹிந்தி தெரியும் என்பதால் தயாநிதி மாறன் மந்திரி ஆக்கப் பட்டார் என்று கலைஞர் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது.?
திமுக செய்வது வெறுப்பு அரசியல். பிராமண வெறுப்பு, இந்தியா மீது வெறுப்பு, வடக்கு தெற்கு வேறுபாடு ‘ ஹிந்து மத துவேஷம் …. இதன் நீட்சிதான் அவர்களின் ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி மீது வெறுப்பை கட்டமைப்பது.
இந்த போலித்தனத்தை ,பிரிவினைவாதத்தை அம்பலப் படுத்தத்தான் வேண்டும். எதிர்க்கத்தான் வேண்டும்.
கணபதி சுப்பிரமணியன்/ சென்னை.
Ganapathi Subramanian,
எத்தனை ஹிந்தி பேசும் மாநிலங்கள் இந்த
மும்மொழி திட்டத்தை
சீரியசாக அமல்படுத்துகின்றன என்பதை
எனக்காக நீங்கள்கொஞ்சம் கண்டுபிடித்து
சொல்லுங்களேன்….
கூடவே, அத்தகைய மாநிலங்களில் –
எந்தெந்த 3 மொழிகளை
பொதுவாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும்….
(ஹிந்தி + ? + ? )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இரண்டு பயணங்கள், தென் தமிழகத்துக்கு, சென்னைக்கு என் பார்வையில், தமிழகத்தில் பத்துக்கு ஐந்து பேர் ஹிந்தி பேசுவதை/புரிந்துகொள்வதை, அதில் கம்யூனிகேட் செய்தால் சுலபமாக இருப்பதைக் காண நேரிட்டது. இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர், சென்னை மற்றும் தென்னகத்தில் செட்டிலானவர்கள். வட மாநிலங்களிலிருந்து வேலைக்கு மாத்திரம் அல்ல, குடும்பத்துடன் பலர் செட்டிலாகின்றனர். நான் பார்த்த வரையில், முஸ்லீம் கடைகள் என்றால் (என் சந்தேகப்படி) பங்களாதேஷ் போன்ற இடங்களிலிருந்து வந்த முஸ்லீம்களைக் காண முடிந்தது. ஆனால் அவர்களும் உடைந்த தமிழில் பேசுகிறார்கள் என்பதும் ஆச்சர்யமாக இருந்தது. புறநகர் இரயில்களில் 50 சதத்திற்கு மேல் ஹிந்தி பேசுபவர்களைக் காண்பது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது (குடும்பம் குடும்பமாக…. ஏன் இரக்கும் தொழில் செய்பவர்கள் பலரிடம் ஹிந்தியில் பேசி இரப்பதைக் கண்டபோதுதான் இதனை அவதானிக்க ஆரம்பித்தேன்)
மும்மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கைச் சண்டை என்பது காலாவதியானது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மொழி என்பது மிக முக்கியப் பங்காற்றவேண்டும். அதனால் 33+33+33 சதம் அல்ல. மாநில மொழி 50+ஆங்கிலம் 25+ஹிந்தி 25 என்று இருப்பதுதான் சரியானது. இதை நோக்கித்தான் நிலைமைகள் செல்லும். மாநில அரசுகள் எதில் கவனமாக இருக்கவேண்டும் என்றால், ஆங்கிலம் 25 சதம் என்பது குறைந்துவிடக்கூடாது. அது தமிழிடம் உள்ள 50 சதத்தை ஆக்கிரமிக்ககூடாது.