…………………………………………….

…………………………………………………
தொலைக்காட்சி விவாதம் எனகிற பெயரில் 4 பேர் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக இத்தகைய கேள்வி-பதில் நிகழ்வுகள் வித்தியாசமாக, வரவேற்கத்தக்கனவாக இருக்கின்றன…. அல்லவா…?
……………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………



ஒவ்வொருவரின் கருத்துக்களிலும் பெரிய ஓட்டை இருக்கும். காரணம் அவங்களோட விருப்பு வெறுப்பு சேருவதுதான்.
1. செக்யூலாரிசம் என்றால் என்ன? அரசுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது. அரசின் எந்த முடிவும் மதத்தை முன்னிறுத்தி இருக்கக்கூடாது. அப்படி எந்த அரசியல் கட்சி நடந்திருக்கிறது? காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக, முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பலப் பல சலுகைகளைக் கொடுத்தது, அதனால் பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள் என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அதனால் பாதிக்கப்படுபவர்களான இந்துக்கள் பக்கம் பாஜக இருக்க ஆரம்பித்தது. இதுவும் வாக்கு வங்கிக்கான வியூகமாக இருந்தாலும், இதில் ஒரு justice இருக்கிறது என்று நான் கருதுகிறேன். திமுக என்ன செய்கிறது? முஸ்லீம் நிகழ்ச்சிகளில் போய், இந்து மதத்தைக் குறை சொல்வது கேலி செய்வது, கிறித்துவ நிகழ்ச்சிகளில் போய், நாங்கள் கிறித்துவர் என்று சொல்வது என இந்துக்களுக்கு எதிராக நடந்துகொண்டு, கோவில், அரசுப் பள்ளிகள் என்று வரும்போது மதச்சார்பின்மை என்ற கொள்கையைக் கடைபிடிக்கிறது. இதன் அடிப்படைக் காரணம் இந்து மத எதிர்ப்புதான்.
2. எதற்காக நாட்டிற்கு செக்யூலாரிசம் தேவை? செக்யூலாரிசம் என்பதை அய்யநாதன் புரிந்துகொண்டிருந்தால் OBC பற்றி ஏன் பேசுகிறார்? அவருக்கு சாதி என்பது முக்கியக் காரணியாக இருக்கும்போது பலருக்கு மதம் என்பது முக்கியக் காரணியாக இருப்பதில் என்ன தவறு? முதலியார், பிராமணன் இவர்கள் மொத்தமே 3 சதம்தான், ஆனால் வன்னியர் 12 சதம், அதற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்வது நியாயம் என்றால், இந்துக்கள் 70 சதம், அதனால் எல்லா வேலைவாய்ப்பிலும் 70 சதத்திற்குக் குறையாமல் அவர்கள் இருக்கவேண்டும், மதமாற்றம் தேச விரோதம், வெளிநாட்டுப் பணத்தில் மதமாற்றம் செய்வது கொலைத்தண்டனைக்கு உரிய குற்றம் என்று சொல்வதில் என்ன தவறைக் காண முடியும்?
3. வெளிநாட்டு நிதியை வைத்து இந்திய மக்களை மத மாற்றம் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்று சொல்வதானால், சீனாவின் உதவியைப் பெற்று தமிழகம் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடுவதும் சட்டத்திற்கு உட்பட்டது என்ற லாஜிக் வந்துவிடுமா இல்லையா?
4. BJP is an Election Missionary – என்று இவர் கூறுவது எப்படி ஏற்புடையது? திமுக இடைத்தேர்தலில் செய்தவற்றை இவர் பார்த்ததில்லையா? தங்களுக்கு வாக்களிக்காத பகுதிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கருணாநிதி காலத்திலிருந்தே நடக்கும் ஸ்ட்ராடஜி இல்லையா? வாக்காளர்களை ஒருங்கிணைப்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் செய்கிறது. பாஜகவும் செய்கிறது. மோடி என்ற தலைவர் வந்த பிறகு அதன் ஆதரவுத்தளம் அதிகரித்திருக்கிறது (ரொம்பவே என்பது என் எண்ணம்)
5. இதற்கு முன்பு எவற்றையெல்லாம் மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது? மத்திய அரசு தமிழக பேரிடருக்குரிய நிவாரணத் தொகை கொடுத்துள்ளதா இல்லையா? இப்போ ஒரு அரசு, மத்திய அரசிடம், 5000 கோடி கொடுங்க, நாங்க 4800 கோடி சுருட்டிக்கறோம் என்று சொன்னால், மத்திய அரசு கொடுக்குமா? 98 சதம் வேலைகள் 4000 கோடிகளில் முடிந்தது என்ற அரசு, கணக்கைக் காட்டுங்கள் என்றதும் 1200 கோடிகள்தான் செலவிடப்பட்டுள்ளது என்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இயற்கைப் பேரழிவு அல்லது நீரைத் தேக்கி வைக்க அரசு செய்தது என்ன? கனிமவளக் கொள்ளையைத் தவிர? மணற் கொள்ளை, நீர்த்தடத்தில் பட்டா போடுவது என்பது பேரிடர்களுக்குக் காரணிகள் இல்லையா?
6. அய்யநாதன் சொல்கிறார்…நிர்மலா சீதாராமனுக்கு மக்களின் வாக்கு அவசியமில்லை, அவர்களுக்கு வேறு வழி இருக்கிறது என்று. இதைவிட தேசத்துரோகமான சிந்தனை அய்யநாதனைத் தவிர வேறு யாருக்கும் உதிக்குமா என்று தெரியவில்லை. அதே மக்களுக்கான அரசு திமுக என்பதாக இருந்தால் ஏன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ எடுக்கவில்லை? 98 சதம் வேலை முடிந்தது என்று 40 சதம்கூட முடியாதபோது சொன்னது? ஏன் நிவாரண நிதி அக்கவுண்டிற்குச் செல்லவில்லை? இதையெல்லாம் அய்யநாதன் கேட்கமாட்டார். பின்புலத்தில் திமுக கொடியோடு நடக்கும் இந்தப் பேட்டி எவ்வாறு உண்மையைப் பேசும்?
தலைப்பில் உள்ளதை அய்யநாதனும் பேசவில்லை. ஆனால் நாம் பேசாமல் இருக்க முடியுமா?
காங்கிரஸ் நிச்சயம் 200 இடங்களிலாவது பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும். அதன் ஆசை 250க்கு மேல் பாஜகவை நேரிடையாக எதிர்த்துப் போட்டியிடவேண்டும் என்பதுதான் (மற்றவர்கள் துணையோடு). அப்போதுதான் நிறைய அளவு எம்பிக்கள் அவர்களுக்குக் கிடைக்கும். இந்த மாதிரி, மற்றவர்கள் அவல் கொண்டுவாருங்கள் என்னிடம் இருக்கும் தவிட்டு அவலோடு சேர்ந்து ஊதி ஊதித் தின்போம் என்ற ஸ்ட்ராடஜி அவ்வளவாக வேலைக்காகாது. இதன் பெரிய காரணம், பல மாநிலங்களில் காங்கிரஸ், இந்தி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒரு பொருட்டல்ல. அதாவது பீகார், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா போன்ற பல மாநிலங்கள் (ஏன் மஹாராஷ்டிரம், பஞ்சாப் உட்பட). இதுதான் காங்கிரஸுக்கு உள்ள பெரிய சேலஞ்ச்.
காங்கிரஸின், சோனியா குடும்ப நாட்டாமைதான் பல கட்சிகள் காங்கிரஸை வெறுக்கக் காரணம் என்று நான் நினைக்கிறேன். அதாவது திறமையில்லாத ராகுல், தங்களை நாட்டாமை செய்வதை யாருமே விரும்பவில்லை.
இருந்தபோதும் பாஜகவிற்கு மூன்றாவது தேர்தல் சுலபமானதாக இருக்காது. கஷ்டப்பட்டே பாஜக 280 இடங்களுக்கு மேல் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக நிறையவே எதிர்ப்புகளைச் சந்திக்கும். பாராளுமன்றத் தேர்தல், காங்கிரஸ் பிரியங்காவின் கைக்குச் செல்லும் வாய்ப்பை அளிக்கலாம்.