தேர்தலுக்குப் பிறகு, திமுகவும் பாஜகவும் சேர்ந்து கொள்ளும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் மணி…..???

………………………………

……………………………….

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வரின் வாரிசுமான திரு.உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிஜி அவர்களை டெல்லி சென்று சந்தித்தது ” கேலோ இந்தியா ” விளையாட்டிற்கு அழைப்பதற்காக மட்டுமல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்…

பின் வேறு எதற்கு …..??? ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காங்கிரஸை காவு கொடுப்பதற்கா …..??? 

மணி அவர்கள் சொல்வதை நீங்களே கேளுங்களேன்…!!!

இது குறித்து நம் கருத்து - ” இதுவும் சாத்தியமே “…!!!

………………………………

…………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தேர்தலுக்குப் பிறகு, திமுகவும் பாஜகவும் சேர்ந்து கொள்ளும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் மணி…..???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சரி,தப்பு என்ற ஆர்க்யூமெண்டுக்கு மணி போக விரும்பவில்லையாம். புலம்பல் மணிக்கு இத்தனை நாள் பாஜகவிற்கு எதிராக திமுகவிற்கு கொத்தடிமை வேலை செய்தோமே…இப்போ திமுக, பாஜகவின் காலில் விழுந்தால் தன் நிலை என்னாகிறது என்ற கவலை போலிருக்கிறது. ஒன்றும் தெரியாத மணிக்கு நான் சொல்கிறேன். பாஜக, திமுக ஆதரவை நேரடியாகப் பெறாது, அதனுடன் கூட்டணியிலும் இருக்காது. பாஜக வழி தனி வழியாகத்தான் இருக்கும். இன்றைக்கு பாஜகவின் ஆதரவு பெருகுவதற்கு ஒரே காரணம் திமுக எதிர்ப்புதான். அதை பாஜக கைவிட்டால், அது உடனே காங்கிரஸ் போல 4 சத கட்சியாக ஆகிவிடும். பாஜக இந்து ஆதரவு, இந்து கலாச்சாரத்தை முன்னெடுக்கும், பாரத கலாச்சாரத்தை முன்னெடுக்கும் கட்சி. திமுக இந்து எதிர்ப்பு, கடவுள் இல்லை என்று இந்து மதத்திற்கு எதிரான கட்சி. பாஜகவிற்கு ஆதரவாக திமுக commit செய்ய ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது. கடைசி நேரத்தில் காங்கிரஸை கழற்றிவிடுவது.

    இந்த மணிலாம் படித்தவரா இல்லை தற்குறியா? “மத்தியக் குழு’ இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இதுக்குத்தான் படித்தவர்கள் பத்திரிகைத் துறையில் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். வேறு வேலை கிடைக்காதவர்கள் பத்திரிகையாளராக மாறினால் இப்படித்தான். மத்திய அரசை கடுமையாக உதயநிதி லோ க்ளாஸ் லேங்குவேஜில் விமர்சித்தார். அப்பன் வீட்டுக் காசா என்று. மத்திய அரசு எதையும் தரவில்லை என்று சொன்னதற்குத்தான், தமிழகம் கொடுத்ததற்குமேல் (வரி மூலம்) மத்திய அரசு கொடுத்துவிட்டது என்று மோடி, அதற்கு முன் நிர்மலா சீதாராமன் சொன்னார். வெள்ளப் பாதிப்பு என்பது வேறு. அதை நிதானமாக எவ்வளவு சேதம் என்றெல்லாம் பார்த்துத்தான் சொல்வார்கள்.

    ஏன் திமுக அரசு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான 10 சதத்தை நடைமுறைப்படுத்தவில்லை? ஏன் மத்திய அரசு சொல்லும் நவோதயா பள்ளிகளை (மத்திய அரசு நிதி) தமிழகத்தில் கூடாது என்று எதிர்க்கிறது? அரசியலா இல்லையா? அப்புறம் மத்திய அரசு மாத்திரம் அரசியலை முன்னெடுக்காமல் இருக்குமா?

    தமிழக அரசு என்ன செய்கிறது? இருக்கும், கிடைக்கும் பணத்தில் கடுமையான ஊழல் செய்கிறது. மழைக்கு முன்னால் 98 சதவிகித வேலைகள் 4000 கோடி ரூபாயை வைத்துச் செய்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், மேயர் சொன்னார்கள். கணக்கு கேட்க ஆரம்பித்தவுடன் 42 சதவிகிதம்தான் பணி முடிந்தது, 5200 கோடி பெறுமானமுள்ளது என்கிறார்கள். எல்லாப் பணத்திலும் ஊழல் செய்ய எதற்கு மத்திய அரசு கொடுக்கவேண்டும்? 6000 ரூபாயில் மத்திய அரசின் 4500 ரூபாய் இருக்கிறது. அதை ஏன் அக்கவுண்டில் போடாமல் நேரடியாகக் கொடுப்போம் என்றார்கள்? எத்தனைபேருக்கு அது போய்ச் சேர்ந்தது? கணக்கு வழக்குகள் சரியில்லை என்றால் மத்திய அரசு எப்படி பணம் தரும்? மத்திய அரசு ஒரு திட்டத்துக்குத் தருவதை வேறு ஒரு திட்டத்திற்கு மடை மாற்றியதால் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

    நிர்மலா சீதாராமன் துரோகம் செய்கிறாராம் இவரு சொல்றாரு. தமிழகம் 40000 கோடி கேட்குமாம், உடனே மத்திய அரசு தரணுமாம், அதில் 2 கோடிக்கு மக்களுக்கு இலவசமாக அரசு வழங்கி, எல்லாப் பணமும் ஆகிவிட்டது என்று சொல்லுமாம். தமிழக அரசு 4000 கோடியை எங்கு பதுக்கியது என்று கேட்க மணிக்கு முதுகெலும்பில்லை.

    சாதி வாரி கணக்கெடுப்பிற்கு முன்பு, மத வாரியாக கணக்கெடுப்பு எடுத்து, எத்தனை சதவிகித கிறித்துவர்கள், முஸ்லீம்கள் ஒவ்வொரு துறையிலும் அரசுப்பணியில் இருக்கிறார்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். அடுத்தது தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எத்தனை சதம், அரசு வேலையில் இருக்கிறார்கள், பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சதம் என்ன என்பதையும் அரசு கணக்கு காண்பிக்கட்டும். பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை வைத்துக்கொள்ளலாம். சாதி என்பது அதிகரித்துக்கொண்டே செல்லும் ஒரு எலெமெண்ட். அதைக் கணக்கெடுத்து ஒன்றும் செய்ய இயலாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.