……………………………………………….

………………………………………………..
பொது வாழ்வில் மிகச்சிறந்த மனிதர்….
திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சரி,
பொதுவாக ஏழை மக்களுக்கும் சரி – நிறைய உதவிகள் செய்தவர்.
விளம்பரத்திற்காக அல்லாமல், தன் மனத்திருப்திக்காக
அவற்றைச் செய்தவர்….
அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அதற்காக தீவிரமாக தமிழகமெங்கும் பயணம் செய்தார்…
மக்களைச் சந்தித்தார். உடல்நலம் சரியாக இருந்திருந்தால்,
தமிழகத்தின் முக்கிய இரண்டு ஆளுமைகளும் மறைந்தபோது,
மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்….
ஆனால், காலம் வேறு மாதிரி தீர்மானித்திருக்கிறது.
சினிமாவைத் தவிர வேறு எங்கும் நடிக்காத –
ஒரு நல்ல நிஜ மனிதரின் மறைவிற்காக வருந்துகிறோம்….
இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர்
அனுபவித்து வந்த உடல் வேதனைகளிலிருந்து இது அவருக்கு விடுதலை
அளிக்கும் என்பதை நினைக்க ஆறுதலாக இருக்கிறது.
சென்று வாருங்கள் விஜய்காந்த் …. தமிழ்மக்கள் உங்களை
உங்களது நல்ல செயல்களுக்காக என்றும் நினைவில்
வைத்திருப்பார்கள்.
…………………


…………………………………………………………………………………………………………………………………………………



விஜயகாந்த் என்பவருக்கு செய்யும் மரியாதை எது என்றால் அது “திராவிட கட்சிகளிடம் காசு வாங்கிக் கொண்டு மீடியா என்ற போர்வையில் திரியும் கும்பலை தோலுரிப்பது ”….அவருக்கு கோபம் எளிதில் வரும் என்பதை அறிந்து அவரை கோவப்படுத்தி அதை கிண்டலாக செய்தி வெளியிட்டு அவரின் அரசியல் முயற்சியை வீழ்த்திய கும்பல் இந்த மீடியா என்று சொல்லிக் கொள்ளும் விடியல் திராவிட கைக்கூலி கூலிப்படை. இவர் நல்லவர் என்று சொல்பவன் இந்த விடியல் திருட்டு மீடியாவை அடையாளம் கண்டு ஒதுக்கட்டும் ….பிறகு இந்த நாடு உருப்படும் ..
விஜயகாந்த் மிக மிக நல்ல மனிதர். நல்ல தலைவரும்கூட, லீடர்ஷிப் க்வாலிட்டி இருந்ததால். நடிகர் சங்கம் மற்றும் அரசியலிலும் மிக நன்றாகச் செயல்பட்டவர். ஆரம்ப காலம் தொட்டே, வந்தவர்க்கெல்லாம் உணவளித்த மனிதன் (எம்.ஜி.ஆருக்குப் பிறகு). இதனை அவர் விளம்பரத்திற்காகச் செய்ததில்லை. மனதில் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், அறச்சீற்றம் மிகுந்த மனிதர். இத்தகைய, உணவளித்த வள்ளல், கடைசி 4-5 வருடங்கள் கஷ்டப்பட்டது என்னை மிகவும் வருந்த வைத்தது. நல்ல மனிதருக்கும் இப்படிப்பட்ட கஷ்டங்களா (உடனேயே போயிருந்தால் வருத்தமாக இருந்திருக்கும், ஆனால் அவருக்கு சௌகரியமாக இருந்திருக்கும்) என்று நினைத்தேன். கடவுள் ஏன் இப்படி அவரைச் சோதிக்கிறார் என்று நினைத்தேன்.
அவரை வைத்துச் சம்பாதித்த குடும்பம், மச்சினன் சதீஷ் போன்றோரைப் பற்றி இந்தச் சமயத்தில் எழுதத் தோன்றவில்லை. சொந்த நலனுக்காக அவர் உடல்நிலை சரியில்லாதபோதும் உபயோகித்தவர்கள் அவர்கள். சமீபத்தில் பிரேமலதா, தன்னை பொதுச் செயலாளராக நோயுற்ற விஜயகாந்தை வைத்து அறிவித்துக்கொண்டது, உடல் நிலை சரியில்லாத படுக்கையில் படுத்திருந்த ஜெயகாந்தன், தன்னைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதித்தந்தார் என்று நாடகம் போட்ட அற்பர் வைரமுத்துவை நினைவுபடுத்தியது. போகட்டும்.
இரண்டு தலைவர்களும், அதிலும் கருணாநிதி, விஜயகாந்தின் வாக்குகளுக்காக ‘பழம் நழுவிப் பாலில் விழும்’ என்று காத்திருந்தவர்தாம். விஜயகாந்திற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, தான் தேர்ந்தெடுத்த பாதை, தன் கட்சியை அழித்துவிடும் என்று. இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் அவர். உடல்நிலை நன்றாக இருந்து, தனிப்பாதையில் அவர் பயணித்திருந்தால், அண்ணாமலையின் தேவை தமிழகத்திற்கு இருந்திருக்காது.
இன்றைக்கு, ‘மாபெரும் மனிதர் மறைந்தார்’ என்றெல்லாம் பல்வேறு தலைப்பிட்டு எழுதுகின்ற, பேசுகின்ற ஊடகங்களுக்கு வெட்கம் மானம் எதுவுமே கிடையாது. விஜயகாந்தை அழிப்பதற்காகவே ஆரம்பத்திலிருந்து அவர் அரசியல் வாழ்க்கையை ஒழிக்க ஒரு கட்சியால் அனுப்பப்பட்ட கூலிப்படைகள் அவர்கள். இத்தகைய ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு அறம் என்பதும் நேர்மை என்பதும் கொஞ்சம் கூட இல்லை. இன்றைக்கு பிழைப்புக்காக விஜயகாந்தைப் பற்றிப் பாராட்டி எழுதும் அத்தகைய ஊடகங்கள் தமிழகத்தில் இருக்கிறதே என்று நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த நச்சுக் கிருமிகள்தாம், அதே ஆயுதத்தை அண்ணாமலைக்கு எதிராக எடுத்து அவமானப்படுகிறார்கள்.
விஜயகாந்த் அவர்களே…. நீங்கள் மறைந்ததும், போலியாக அல்லாமல், உண்மையாகவே மனது வருத்தப்படும் பல்வேறு மக்களை, அதிலும் உங்கள் கட்சியைச் சாராத, உங்களுக்கு எப்போதும் வாக்களிக்க வாய்ப்பில்லாத மக்களை நீங்கள் பெற்றிருப்பதே உங்கள் வெற்றிக்குச் சாட்சி.