………………………………………………….

…………………………………………………..
மாரிதாஸ் தன் பாட்டுக்கு கேள்விகளை அள்ளி வீசுகிறார்…
கமலின் பிரச்சினை கமலுக்கு தானே தெரியும்…
இப்போது தமிழக அரசை குறை கூறி, கேள்விகளை எழுப்பி விட்டால் – அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் மாரிதாஸா கமலுக்கு கூட்டணியில் இடம் பிடித்துக் கொடுப்பார்….!!!
பிழைக்கும் வழி தெரியாமல் மாரிதாஸ் வழியில் போக முடியுமா ….!!!
கமலின் எம்.பி. சீட்டு வாங்கும் வழி – இதோ –

……………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………….



சரியான பாயிண்டைப் பிடிச்சிருக்கீங்க….. ஆனால் தலைப்புல, உலக நிலவரம் தெரியாததனால் கோட்டை விட்டுட்டீங்க.
விக்ரம் படத்திற்கு 300 கோடி ரூபாய் வருமானம் வந்தது, உதயநிதி தயவால். விஜய் படத்திற்கு வந்த தலைவலி மாதிரி எதுவும் கமல் படத்திற்கு வந்துவிடக்கூடாது. தனக்கு எப்படியும் எம்.பி சீட் கன்ஃபர்ம், இன்னொரு எம்.பி சீட்டும் வேண்டுமே… திமுகவின் தயவு இல்லைனா அவருடைய கஜானா நிரம்புமா?
அதனால் தலைப்புல, ‘பிழைப்பிற்காக ஆடுறா ராமா ஆடுறா என்ற பாட்டிற்கேற்றபடி ஆடும் கமலைப் பார்த்து பொறாமைப்படும் மாரிதாஸ்’ என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ?
ஆனானப்பட்ட சூராதி சூரர்களே தங்கள் பப்பு இனி வேகாது என்று, ‘மத்திய அரசு’, ‘மத்திய உள்துறை அமைச்சர்’ என்று புது ராகம் பாட ஆரம்பித்துவிட்டார்கள், கதவு முழுமையாக மூடி இருந்ததால் காலில் விழுந்தார்களா என்பது தெரியவில்லை. இதுல கமலாவது கத்திரிக்காயாவது..
இதெல்லாம் இருக்கட்டும்…அமைச்சர் கே.என்.நேருவும், ஸ்டாலினும் 4000 கோடி சென்னைக்கு செலவழிக்கப்பட்டு 96 சத வேலைகள் முடிந்துவிட்டது என்று முழங்கியிருந்தனர் (அது இரண்டு வாரங்களுக்கு முன்பு). நேற்று நேரு, அது 4000 இல்லை, 5200 கோடி, அதில் 2000 கோடிதான் செலவழித்திருக்கிறோம், பணிகள் பாக்கி என்று உண்மை நிலவரத்தைச் சொல்லியிருக்கிறாரே.. அண்ணாமலை வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்டதனால் பயந்துகொண்டு உண்மையைச் சொல்லியிருக்கிறாரா? (அண்ணாமலை வெள்ளை அறிக்கை அரசிடம் கேட்டால் அதற்கு அர்த்தம் எல்லா உண்மையும் ஆவணத்துடன் தன்னிடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்)