எனக்குத் தெரியும், ஆனால் …!!! – நம்ம ஊர் பசு ஒன்றின் கதை …!!!

………………………………………

………………………………………

காட்டிலிருந்து அலறியடித்து, ஓடிக்கொண்டிருந்தது ஒரு பசு.

அந்த பசுவைத் தடுத்த யானை,
“ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்…? ” – என்று கேட்டது.

“காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்கச்சொல்லி
அரசாங்கம் உத்திரவு போட்டிருக்கிறது ” என்றது பசு.

“முட்டாளே… நீ பசு தானே…அப்புறம் ஏன் ஓடுகிறாய்…?”
என்று யானை கேட்க,

“நான் பசு’ங்கறது எனக்குத் தெரியும். ஆனால், என்னை
பிடிக்க வருகின்ற அரசாங்க அதிகாரிக்கு தெரியும்’னு என்ன நிச்சயம்…?
அரசாங்கம் என்னை பிடிச்சுதுன்னா, நான் எருமையில்லை;
பசு தான்’னு நிரூபிக்கவே 20 வருஷமாயிடுமே” என்றது பசு.

இப்போது – பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது….😊😊😊

………………………………………………….

.

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.