அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

……………………………….

……………………………….

……………………………………….

வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர் யார் …?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசான பிரச்சினை….

தொடர்ந்து துன்பங்களைக் கண்டு
சரிந்து போயிருக்கும் சமயங்களில்
சரியான விளக்கங்கள் கொடுத்து நம்மை
யார் கைதூக்கி விடுகின்றனரோ,
நல்வழியில் நடக்க யார் உதவுகின்றனரோ
அவர்களே நல்ல வழிகாட்டிகள்.

அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டிகள் தான்
ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் விவேகானந்தரும்.
இத்தகைய ஒரு குருவையும், சீடரையும் உலக
சரித்திரம் இதுவரை கண்டதில்லை….!


வாழ்க்கையில் துன்பங்களைக் களைய அவர்கள் காட்டும் வழியை
எனக்கும், உங்களுக்குமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.

நமது பற்பல சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையிலான
அவர்கள் இருவருக்குமிடையேயான ஒரு உரைச்சுருக்கம் கீழே –

இந்த உரையாடல் நமக்காகவே நிகழ்த்தப்பட்டது.
நமது பல சந்தேகங்களுக்கும் –
இதில் தீர்வு ஒளிந்திருக்கிறது.
படியுங்கள். … மீண்டும் மீண்டும் படியுங்கள். பல வரிகள்
மிக மிக ஆழமான பரந்த பொருள் கொண்டவை.

————————————

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் – சுவாமி விவேகானந்தருக்கும்
இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் –

சுவாமி விவேகானந்தர் – நாம் ஏன் எப்போதும்
மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் ?

ராமகிருஷ்ண பரமஹம்சர் – துன்பத்தையே நினைத்து
கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகி விட்டது.
அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

வி – நல்லவர்களுக்கு மட்டும் துன்பம் எப்போதும் ஏன் ?

ரா – உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது.
நெருப்பில் இடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது.
நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள். ஆனால் –
அவர்கள் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். அந்த
சோதனைகளின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களேயன்றி
கீழே செல்ல மாட்டார்கள்.( by experience, their life becomes
better, not bitter …)

வி – அப்போது, சோதனைகள் நன்மைக்கு
என்று சொல்கிறீர்களா ?

ரா – ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர்
வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை
கொடுத்து விட்டு, பிறகு தான்
பாடத்தை போதிக்கும்.

வி – கணக்கற்ற பிரச்சினைகளில் மூழ்கித் தவிப்பதால்,
நாங்கள் எங்கே போகிறோம் என்பதே தெரியவில்லை……

ரா – வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று
உனக்கு புரியாது. உனக்குள்ளே பார்… புரியும்.
கண்களால் பார்க்கத்தான் முடியும். ஆனால் –
உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும்…
(Eyes provide sight… Heart provides the way )

வி – சரியான பாதையில் போகும்போதும் தோல்வி
அடிக்கடி ஏற்படுகிறதே…?

ரா – செல்லும் பாதையில் வெற்றி என்பது
மற்றவர்களால் அளக்கப்படுவது. ஆனால் –
அதில் கிடைக்கும் திருப்தி
என்பது உன்னால் மட்டுமே உணரப்படுவது.

வி – கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி
உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்…?

ரா – எப்போதும் – இனி எப்படி போகப்போகிறோம் என்று
அச்சப்படுவதை விட, இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய்,
எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.

உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக் கொள்.
இழந்தவைகளை அல்ல.

வி – இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும்
விஷயம் எது ?

ரா – துன்பப்படும்போது –
“எனக்கு ஏன் ?”,
“என்னை மட்டும் ஏன் ?”
என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

வி – வாழ்க்கையில் மிகச்சிறந்தவைகளை
நான் அடைவது எப்படி ?

ரா – உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள்.
நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு.
இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை
பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.

வி – கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்
பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று
தோன்றுகிறது.

ரா – கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை..!
(There are no unanswered prayers …!)


அச்சத்தை விடு. நம்பிக்கை கொள்.
வாழ்க்கை என்பது தீர்வு காணப்பட வேண்டிய
ஒரு புதிர் தானே தவிர, பிரச்சினை அல்ல.
எப்படி வாழ வேண்டும் என்று மட்டும்
நாம் அறிந்துகொண்டால்,
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறி விடும்.

.

………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மிக நல்ல பகிர்வு.

    //ரா – துன்பப்படும்போது – “எனக்கு ஏன் ?”, “என்னை மட்டும் ஏன் ?”
    என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
    கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.// – நான் ஒருபோதும் இவ்வாறு எண்ணியதில்லை. அளவில்லாத-In my standards, நல்லது கிடைக்கும்போது (பணம்) அச்சப்பட்டிருக்கிறேன், பூர்வ ஜென்ம புண்ணியங்கள் விரைவாகக் கரைகிறதே என்று அதேபோல எனக்குரிய பணம் வராதபோது, என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்திருக்கிறேன். “எனக்கு மட்டும் ஏன்’ என்ற கேள்வி என்னுள் எழுந்ததில்லை.

    //ரா – கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை..!
    (There are no unanswered prayers …!)// – ஆங்கிலத்தின் அர்த்தம், இறைவன் பதில் சொல்லாத ப்ரார்த்தனைகள் இல்லை என்பது. ‘கேட்கப்படாத பிரார்த்தனைகள்’ என்பது un-listened prayers. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. ‘எனக்கு இது வேணும்’ என்று கேட்பதை, ‘நீ சொல்வதை நான் கேட்டுக்கொண்டேன்’ என்று பதில் சொல்வதற்கும், ‘உனக்கு அதைத் தருவேன்/தரமாட்டேன்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு.

  2. Arul's avatar Arul சொல்கிறார்:

    Excellent one. Thank you remember me these again. Thank you KM sir

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .

    Thank you Arul.

    with Best Wishes,
    Kavirimainthan

  4. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    எனக்கு மட்டும் ஏன் என்று கடந்த மூன்று வருடங்களாக கேட்காத நாள் இல்லை, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக. ஞானசம்பந்தன் அவர்களின் உரை ஒன்றில் ஸ்ரீ வில்லிபுத்தூரார் பாரதத்தில் இருந்து விளக்கிய ஒரு செய்யுள் இதற்க்கு அருமருந்தாக இருந்தது.

    மாமன் உலகை காப்பவன். தாத்தா தேவர்களுக்கெல்லாம் அரசன். அப்பா மிகச்சிறந்த வில்லாளி. பெரியப்பா ஆயிரம் யானை பலம் கொண்டவன். இவ்வளவு பேர் இருந்தும் அபிமன்யுவை யாரும் காப்பாற்ற முடியவில்லை என்றால் விதி என்று ஒன்று இருப்பதை நம்பித்தானே ஆக வேண்டியிருக்கிறது!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      bandhu,

      ” எனக்கு மட்டும் ஏன் இப்படி …? ”

      இதில் விசேஷம் என்னவென்றால் – அனேகமாக
      எல்லாருமே வாழ்க்கையில் எதாவது ஒரு கட்டத்தில்
      இந்த கேள்வியை சந்திக்க வேண்டி இருக்கிறது…

      எனவே இது உங்களுக்கு மட்டும் அல்ல –
      எல்லாருக்குமேயான பிரச்சினை தான்.
      அதனால் தானே இந்த உபதேசம் …!!!

      நீங்கள் சொன்னது போல இந்த கேள்வியிலிருந்து
      சீக்கிரமாக வெளிவருவது
      தான் இதற்கான ஒரே தீர்வு.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.