…………………………………..

………………………………….

……………………………………
மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் சரித்திரத்திலிருந்து
ஒரு பகுதி ….
பீஜாப்பூர் அரசவையின் பெரிய தளபதியான அஃப்சல் கானுடன்
சிவாஜியின் பல கசப்பான நினைவுகள் தொடர்பு கொண்டுள்ளன.
அவர் 1648-ல் சிவாஜியின் தந்தை ஷாஹாஜியை சங்கிலியால் கட்டி
பீஜாப்பூருக்கு அழைத்துச் சென்றார். மேலும் 1654-ல் அவரது
மூத்த சகோதரர் சாம்பாஜியின் மரணத்திலும் அஃப்சல்கான்
சம்மந்தப்பட்டிருந்தான்.
அஃப்சல் கான் பீஜாப்பூர் அரசவையில் மார்தட்டிப் பெருமை பேசினான்.
சிவாஜி யார்? நான் அவரை சங்கிலியில் கட்டி இங்கே கொண்டு வருவேன்.
இதற்காக நான் என் குதிரையிலிருந்து கீழே இறங்கக்கூட வேண்டியதில்லை,”
என்று சொல்லி இருக்கிறான்.
இருந்தாலும், சமாதான பேச்சுவார்த்தை நடத்த –
இருவருக்கும் இடையே பல செய்திகள் பரிமாறப்பட்டன. இருவரும்
1659 நவம்பர் 10-ம் தேதி சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. அஃப்சல்கான்
தனது இரண்டு அல்லது மூன்று வீரர்களுடன் பல்லக்கில் வருவார்.
அவர் தனது ஆயுதங்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார். அதே எண்ணிக்கையிலான வீரர்களைத் தன்னுடன் அழைத்து வர சிவாஜியும் அனுமதிக்கப்பட்டார்.
அன்று சிவாஜி வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். அவரது
கிரீடத்தின் கீழ் ஒரு இரும்பு தொப்பி மறைத்து வைக்கப்பட்டது.
அவருடைய வலது கைமடிப்பில் கூர்மையான சிறிய குத்துவாளான
‘பிச்வா’ இருந்தது. அவரது இடது கையில் ‘வாக்- நக்'(புலி நகம்)
மறைந்திருந்தது. அவரது நம்பிக்கைக்குரிய இரு வீரர்கள்
ஜீவமஹாலா மற்றும் சாம்பாஜி காவ்ஜித் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
அஃப்சல் கான் . ஆயுதம் ஏந்திய பத்து வீரர்களைத் தன்னுடன் அழைத்துக்
கொண்டு சிவாஜியை சந்திக்கச் சென்றான்.
இந்தச் சந்திப்பு பற்றிய விவரங்களை அளித்து ஜதுநாத் சர்க்கார்
இவ்வாறு எழுதுகிறார். “அஃப்சல் கான் சிவாஜியை பார்த்தவுடன்,
அவரைத் தழுவுவதற்காக கைகளை நீட்டினான். இருவரும்
கட்டிப்பிடித்தபோது அஃப்சல் கான் திடீரென சிவாஜியின் கழுத்தை
கைகளால் நெருக்கி கத்தியால் தாக்கினான்.
இவை அனைத்தும் திடீரென்று நடந்தாலும், எதற்கும் தயாராக இருந்த
சிவாஜி மிக விரைவாக பதிலடி கொடுத்தார். அஃப்சல் கானின்
இடுப்பைப் பிடித்து அவரது வயிற்றைத் தனது ‘புலி-நகத்தால்’ துளைத்து
கிழித்தார்….. தன் வலது கையால் அஃப்சலை குத்து வாளால் தாக்கினார்.”
– இந்த காயங்களின் விளைவாக அஃப்சல்கான் மரணம் அடைந்தான்.
……….
சிவாஜியின் பிரத்யேக ஆயுதமான அந்த ’வாக் நாக்’ தற்போது
லண்டனில் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
எஃகு கொண்டு உருவான, புலி நகங்களை ஒத்த இந்த ’வாக் நாக்’
ஆயுதம் – கை விரல்களில் அணிந்து கொண்டு தாக்குவதற்கு
லகுவானது.
ஆங்கிலேயர் ஆட்சியில், இங்கிலாந்திற்கு கடத்திக்கொண்டு
போகப்பட்ட, அந்த வாக்-நாக் தற்போது இங்கிலாந்தின் விக்டோரியா
மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியத்தில் இருக்கிறது.
அந்த சரித்திரப் புகழ்பெற்ற “வாக் நாக்” விரைவில்
மகாராஷ்டிரா திரும்ப இருக்கிறது. மஹாராஷ்டிர அரசு பெருமுயற்சி எடுத்துக்கொண்டு இங்கிலாந்து அருங்காட்சியகத்துடன்,
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
அப்சல் கானை வீர சிவாஜி கொன்ற நவம்பர் 10 -ஆம் தேதியன்று, அந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக –
“வாக் நாக் ” பொக்கிஷத்தை மகாராஷ்டிராவுக்கு திரும்பக் கொண்டு வர.
மஹாராஷ்டிர அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம், முக்கியமான ஒரு மகாராஷ்டிர
வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது என்பதால், அந்த மாநிலத்தவர்
தங்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு பழம்பொருளாகக் கருதுகின்றனர்.
அந்த ஆயுதத்தின் வருகையை, ஒட்டுமொத்த மாநிலமும் எதிர்பார்த்து
இருக்கிறது.
அது வரும் நாளை, பெரும் விழாவாக கொண்டாட மராட்டியர்கள்
தயாராகி வருகின்றனர்.
.
………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…