………………………………………….

…………………………………………..
ஜெயலலிதா அவர்கள், கடைசி வரை கருணாநிதி அவர்களை
ஜென்ம விரோதியாகவே பாவித்தது ஏன் என்பது துக்ளக் ரமேஷ்
அவர்கள் சொல்லும் இந்த விவரங்களைப் பார்த்தால் புரியும்….
1989 – 34 வருடங்களுக்கு முன்னர் – சட்டமன்றத்திற்கு உள்ளே நடந்ததை
நிரூபிக்க எந்த வகையிலும் வழியில்லை என்பதை
காரணமாக வைத்து –
- திமுக-வினர் பிற்காலத்தில் இஷ்டம்போல்
கதை கட்டி விட்டதையெல்லாம், வெட்ட வெளிச்சமாக்குகிறார் ரமேஷ்.
34 வருடங்களுக்கு முன் நடந்த, சம்பவங்கள் இப்போது மீண்டும்
வெளிச்சத்திற்கு வருகின்றன…..
துக்ளக் ரமேஷ் அவர்களின் பேட்டி கீழே காணொலியில் –
…………………………………………….
.
…………………………………………………………………………………………………………………………………………….



அடடா…. துக்ளக் ரமேஷ், அரசியலில் இல்லாததால் திருநாவுக்கரசர் போல பச்சோந்தியாக மாற முடியவில்லையே… இப்போது திமுக கூட்டணியில் துக்ளக் ரமேஷும் இருந்திருந்தால், ஜெயலலிதாதான் கருணாநிதியை ஆயுதங்களுடன் தாக்கினார், ஆனால் திமுகவினர் ஜெயலலிதாவை பாதுகாப்பாக சட்டசபைக்கு வெளியே கொண்டுவந்து விட்டனர். ஆனால் ஜெயலலிதாதான், இதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் செய்ததுபோல (சட்டை பட்டனைக் கிழித்துக்கொண்டு நடத்திய நாடகம் போல) தலைமுடியைக் கலைத்துக்கொண்டு நாடகமாடினார் என்று ‘வாழும் சாட்சி’யாக மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லியிருப்பார். நடுநிலை பத்திரிகையாளராகவே இருக்கவேண்டும் என்று அவர் மனசாட்சி சொல்லிவிட்டதால் மனதுக்குப் படுவதை, பார்த்ததை உண்மையாக அப்படியே சொல்கிறார், பேசுகிறார், பேட்டிகளிலெல்லாம்.
இன்னொரு பத்திரிகையாளரும் (சட்டசபை மாடத்தில் அன்று இருந்தவர்) நடந்த நிகழ்வை உண்மையாகச் சொல்லியிருக்கிறார்.