………………………………………………..

………………………………………………..

……………………………………………………

…………………………………………………

…………………………..
இன்றைய தலைமுறையினர் பலருக்கும், தெரிந்திருக்க
வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எழுதுகிறேன் இதை ….
காந்திஜி என்றால் இன்றைய தலைமுறையினருக்கு நினைவுக்கு வருவது
அவரது பொக்கை வாய்ச்சிரிப்பும் கண்ணாடி அணிந்த முகமும்தான்.
அவர் ஏன் மேலாடை அணிவதில்லை என்று பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த ஆடைகளை துறந்து
நான்கு முழம் மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்ட அந்த வரலாற்று சம்பவம்
நிகழ்ந்தது தமிழ்நாட்டில் , மதுரையில்தான்.
செப்டம்பர் 20, 1921 -ல் மகாத்மா காந்தி மதுரையில் இருந்தார்….
மதுரைக்கு வரும் வரை காந்தியின் ஆடை என்றால் –
ஒரு பத்து முழ வேட்டி, அழகான கதர்சட்டை, அங்கவஸ்திரம்
தலையில் ஒரு தொப்பி என்று முழுக்க முழுக்க குஜராத்தி பனியா
ஸ்டைல்….
கதராடை அணியுங்கள் என்று காந்திஜி சொல்லிக்கொண்டே இருந்தாலும்,
பலரால் காந்தி சொன்னதை கேட்டு கடைபிடிக்க முடியவில்லை …
காரணம் கதராடையின் விலைதான்.
மேலமாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர்கள் ராம்ஜி, கல்யாண்ஜி வீட்டில்
தங்கியிருந்த போது காந்திஜியை பார்க்க பலரும் வந்திருந்தார்கள்.
அங்கே தங்கியிருந்த போது தான் காந்திஜி,
ஆடை கூட சரியாக அணிய முடியாத நிலையில் ஏழைகள் பலரும்
இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து உணர்ந்தார். அவர்களில் பலர்
சட்டை கூட போட்டிருக்கவில்லை. இடுப்பை சுற்றி நான்கு முழ வேஷ்டி
மட்டுமே கட்டியிருந்தார்கள். இதுவே பலரது அடையாளமாக இருந்தது.
அதைப்பார்த்த அந்த நொடியில் காந்தியின் மனதில் ஒரு மிகப்பெரிய
மாற்றம் நிகழ்ந்தது.
இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை
அடைகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்’ என்று காந்திஜி
தீர்மானித்து அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.
காந்தி தனது மேல் சட்டையை கழற்றினார்.
தலைப்பாகை அங்கவஸ்திரம் அனைத்தையும் துறந்தார்.
பத்து முழ வேஷ்டியை நான்கு முழமாக கிழித்து இடுப்பில்
கட்டிக்கொண்டார். அதே தோற்றத்தோடுதான் அன்று மாலை,
மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். இனி இதுதான் என் உடை
என்று காந்தி சொன்ன தினம் செப்டம்பர் 20, 1921.
மதுரை தான் அவரை ஒரு எளிமையான மனிதராகவும்,
மென்மையான பேச்சுக்காரராகவும் சராசரி மனிதராகவும் மாற்றியது…..
மதுரையில் மாறிய உடை அவர் 1930-ல் லண்டன் போன போதும்
மாறவில்லை. லண்டன் வட்டமேஜை மாநாடுக்கு சென்ற போதும்
அரைஆடை அணிந்தே பங்கேற்றார் காந்தி. அங்கே அவரை
பத்திரிகைகள் அரைஆடை பக்கிரி – half naked fakir…
என்று வர்ணித்தன. அதைப்பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை.
ஒரு சமயம் , ஆயுதபலம் மிக்க நம்மால் ஏன் காந்தியை ஏன்
அடக்கமுடியவில்லை என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி
எழுப்பப்பட, அதற்கு வின்ஸ்டன் சர்ச்சில் அளித்த பதில் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தது.
- “அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன்.
துப்பாக்கியை தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன்.
பீரங்கியை எடுத்து போராடினால் நான் குண்டு மழை பொழிந்து
அழித்திருப்பேன்.
ஆனால், அவரோ அகிம்சை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு
போராடுகிறார். அகிம்சையை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நண்பர்களுக்கு சொல்லி வைக்க
விரும்புகிறேன் என்றார்.
தனது இறுதி நாள் வரை, பேச்சிலும் செயலிலும் ஒரே மாதிரியாக
இருந்தார் காந்திஜி…. அதனால் தான் அவர் மகாத்மா… !!!
.
………………………………………………………………………..
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் …..
National Anthem Of India – Ricky Kej – 100 Member British Orchestra – Royal Philharmonic
…………………
.
…………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….