…………………………………..

……………………………………
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது ராமாயண காலத்து
பழமொழி…. அதை நம்பியோ என்னவோ, எனக்கு ஒன்றும் தெரியாது;
எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என்று சொல்லி, முதல்கட்ட
விசாரணையில் தப்பித்திருக்கிறார் செ.பாலாஜி…..
அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து 5 நாட்கள் வரை
விசாரிக்கப்பட்ட செ.பா. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளை
எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்த விவரங்கள் ஓரளவு
விகடன் தளத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஓரளவாவது
உண்மையாக இருக்குமென்று நம்பி கீழே தருகிறேன்.
…………………….
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல, அமைச்சர் செந்தில்
பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிதானமாக அவரைக்
கேள்விகளால் குடைந்தெடுத்திருக்கிறது அமலாக்கத்துறை.
“பெரும்பாலான கேள்விகளுக்கு, ‘தெரியாது…’, `நினைவில்லை…’
என்றே பதிலளித்த பாலாஜி, ஒருகட்டத்தில் டென்ஷனாகி,
‘எல்லாம் தம்பிக்குத்தான் தெரியும்’ என்றிருக்கிறார் அழுத்தமாக.
இனி பாலாஜியின் தம்பி அசோக்தான் எங்களின் அடுத்த குறி.
அவர் சிக்கிவிட்டால், பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்” என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள். அமைச்சர் செந்தில்
பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என்ன நடந்தது… பாலாஜியின் ரியாக்ஷன் என்ன… அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட மூவ் எப்படி
இருக்கும்… என்பது குறித்தெல்லாம் விரிவாகவே விசாரித்தோம்…
“இந்தந்தக் கேள்வியெல்லாம் கேட்பாங்க…” போன் போட்ட வழக்கறிஞர்…
ஒரு மணி நேர டியூஷன்!
அமலாக்கத்துறை விசாரணைக்காக செந்தில் பாலாஜி செல்வதற்கு
முன்னரே, அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து சட்ட ஆலோசனை
தரப்பட்டதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.
நம்மிடம் பேசிய புழல் சிறை அதிகாரிகள் சிலர், “கடந்த ஆகஸ்ட் 7-ம்
தேதி மாலையில், ‘அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை
கஸ்டடி எடுக்கலாம்’ என முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்ட
உடனேயே, புழல் சிறையின் உயரதிகாரி ஒருவருடைய போனுக்கு
அழைப்பு வந்தது. தி.மு.க-வின் மூத்த வழக்கறிஞர் ஒருவர்தான் பேசினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே பதற்றத்துடன் போனை பாலாஜியிடம் கொண்டுபோனார் அந்த உயரதிகாரி. அதற்குள், கஸ்டடி அளிக்கப்பட்ட
விவகாரம் தொலைக்காட்சிச் செய்தி மூலமாக பாலாஜிக்கு எட்டியிருந்தது.
அமலாக்கத்துறையின் பிடிக்குள், அன்று இரவே தான் செல்ல
வேண்டியிருக்கும் என்பதால், சற்று பதற்றமாகவே இருந்தார் பாலாஜி.
செந்தில் பாலாஜியிடம் பேசிய அந்த வழக்கறிஞர், ‘பதற்றப்படாம இருங்க. விசாரணையில, இந்தந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பாங்க. முடிந்த
அளவு உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கப் பார்ப்பாங்க. உங்களுக்கு
பைபாஸ் சர்ஜரி பண்ணியிருக்குறதால, ஓரளவுக்கு மேல அவங்களால
நெருக்குதல் கொடுக்க முடியாது. அவர்களின் கேள்விகளுக்கு,
‘தெரியாது…’, `நினைவில்லை…’னு பதில் சொன்னாலே போதும்.
சீக்கிரமே உங்களை ஜாமீன்ல வெளியே எடுத்துடுவோம்’ என்கிற
ரீதியில் பாடமெடுத்திருக்கிறார்.
எப்போதெல்லாம் வழக்கறிஞர், மருத்துவர் உதவியை நாடலாம்,
விசாரணைக் காவலில் இருக்கும் குற்றவாளிக்கு எந்த மாதிரியான
சலுகைகள் இருக்கின்றன, ஆவணங்களைக் காட்டி அமலாக்கத்துறை
கிடுக்கிப்பிடி போட்டால் எப்படி எதிர்கொள்வது எனக் கிட்டத்தட்ட
ஒரு மணி நேரத்துக்கு மேல் ‘டியூஷன்’ எடுத்திருக்கிறார் அந்த
வழக்கறிஞர். அதன் பிறகுதான் செந்தில் பாலாஜியின் படபடப்பு சற்று
தணிந்தது. அதற்குள் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள்
வந்துவிட்டனர். சிறைத்துறை உயரதிகாரியின் அறையில் அயர்ன்
செய்யப்பட்ட சட்டையை அணிந்துகொண்டு, மருந்து, மாத்திரைகளுடன் விசாரணைக்காகப் புறப்பட்டார் பாலாஜி.
மழைக்காலம் தொடங்கிவிட்டதால், சிறைக்குள் கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டது. விசாரணைக் காவல் முடிந்து அமைச்சர் சிறைக்குத் திரும்புவதற்குள், அவருடைய அறைக் கதவு, ஜன்னலில் கொசு வலை
அடிக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. அதற்கான பணிகளை ஆரம்பித்திருக்கிறோம்” என்றனர்.
இரவு 9:25 மணிக்கு, சென்னை சாஸ்திரி பவனிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார் செந்தில் பாலாஜி. விசாரணைக்
காவலில் இருக்கும் ஐந்து நாள்களும் அவர் அந்த அலுவலகத்தில்தான் தங்க வேண்டுமென்பதால், அவருக்கென ஏ.சி வசதியுடன் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறையில், பாலாஜியின் நடவடிக்கைகளைக்
கண்காணிக்க சிசிடிவி-யும் பொருத்தப்பட்டது. அருகிலேயே விசாரணை
அறை, பார்வையாளர் சந்திப்பு அறைகள் அமைக்கப்பட்டன. இரவு உணவை
அவர் சிறையிலேயே முடித்துக்கொண்டு வந்திருந்ததால், “சூடாக பால்,
டீ, காபி ஏதாவது வேண்டுமா…” எனக் கேட்டு பேச்சைத் தொடங்கி
யிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை
அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “அவர் கைதுசெய்யப்பட்டதிலிருந்து, அமலாக்கத்துறை எடுத்த ரெய்டு நடவடிக்கைகளை அவரிடம்
முன்னோட்டமாகச் சொன்னோம். ‘உங்களைத் துன்புறுத்த இங்கே
அழைச்சுட்டு வரலை. எங்களுக்குச் சில கேள்விகள் இருக்கின்றன.
அதற்கு பதில் சொன்னாலே போதும். நீங்களும் கோ-ஆபரேட் பண்ணுங்க… நாங்களும் உங்களுக்கு கோ-ஆபரேட் பண்றோம்’ என நாங்கள்
சொன்னதும், தன்னுடைய சட்டை பட்டனை அவிழ்த்து, தையல் போடப்பட்ட
நெஞ்சுப் பகுதியைக் காட்டிய பாலாஜி, ‘இதுக்கு மேல என்ன சார்
கோ-ஆபரேஷன் பண்ணணும்’ என்றார் கோபமாக.
அருகிலிருந்த அமலாக்கத்துறை உயரதிகாரி, ‘நாங்க கைதுசெய்ததால்
தானே, உங்களுக்கு இருக்கும் இதயப் பிரச்னை தெரியவந்தது. உங்க
உயிரைக் காப்பாற்றியிருக்கோம் சார். இதுக்கு நீங்க எங்களுக்கு நன்றி
சொல்லணும். அன்னைக்கே நீங்க விசாரணைக்கு ஒத்துழைச்சிருந்தா,
உங்களைக் கைதுசெய்ய வேண்டிய நிலைமையே வந்திருக்காது’ என்றார்.
அதற்கு மேல் பேச விரும்பாத பாலாஜி, ‘எனக்கு மயக்கமா வருது.
மாத்திரையைப் போட்டுட்டு நான் தூங்கணும்’ என்றார். பைபாஸ்
சர்ஜரி செய்தவர் என்பதால், முதல் நாளே அவரிடம் கடுமையாக
நடந்துகொள்ள நாங்களும் விரும்பவில்லை. அவரைத் தூங்கச் செல்ல அனுமதித்தோம். இதற்கிடையே, பாலாஜிக்குத் தேவையான உடைகள்,
பேஸ்ட், பிரஷ் உள்ளிட்ட பொருள்களை அவருடைய வழக்கறிஞர் வந்து
கொடுத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை தன்னுடைய வழக்கறிஞர்,
ஒரு உறவினரைச் சந்தித்துப் பேசவும் பாலாஜிக்கு அனுமதியளித்தது அமலாக்கத்துறை.
அடுத்த நாள் காலையில், யோகாசனம், சிறிய அளவில் உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு விசாரணைக்குத் தயாரானார் பாலாஜி. காலை எட்டு மணிக்கெல்லாம் சூடாக இட்லியும் இடியாப்பமும் அவருக்கு வழங்கப்பட்டன.
சிற்றுண்டியை முடித்துவிட்டு வந்தவரிடம், வீடியோ பதிவுடன்
விசாரணையைத் தொடங்கினோம். 2011-2015 காலகட்டத்தில், அ.தி.மு.க அமைச்சரவையில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக
இருந்தபோது, ‘வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்துவிட்டார்.
இதன் மூலமாகச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்திருக்கிறார்’
என்பதுதான் நாங்கள் பதிந்திருக்கும் வழக்கு. இது தொடர்பாகத்தான்
கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு,
‘எனக்குத் தெரியாது…’, `எனக்கு ஞாபகம் இல்லை’ என்றே
பதிலளித்தார் பாலாஜி.
‘உங்களுடைய உதவியாளர்கள் கார்த்திகேயன், சண்முகம்
இருவரிடமும்தான் பணத்தைக் கொடுத்து ஏமாந்ததாகப் புகாரளித்திருக்கிறார்களே?’ என அதிகாரிகள் கேட்டனர். ‘அ.தி.மு.க
ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது, நிறைய வேலைவாய்ப்பு
முகாம்களை நடத்தியிருக்கிறேன். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பயனடைந்திருக்கிறார்கள். என் பெயரைச் சொல்லி யாராவது வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்திருந்தால், அதற்கு நான் எப்படிப்
பொறுப்பாக முடியும்?’ என்றார் பாலாஜி.
அவருடைய வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாயும், அவர் மனைவி
மேகலாவின் வங்கிக் கணக்கில் 29.5 லட்சம் ரூபாயும் வருமானத்துக்கு
அதிகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பப்பட்டது.
‘முறைகேடாகச் சம்பாதித்த பணமென்றால், இப்படித்தான் நான்
வங்கியில் போட்டு வைப்பேனா… இது எனக்கெதிராக எடப்பாடி
பழனிசாமியும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஜோடித்த வழக்கு. என்னை அரசியல்ரீதியாகப் பழிவாங்கப் பார்க்கிறார்கள். அவர்களுடன்
பா.ஜ.க-வும் சேர்ந்துகொண்டு என்னைப் பழிவாங்குகிறது’ என்றார்.
கடைசி வரையில், அந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அவர்
சொல்லவே இல்லை.
“எல்லாம் தம்பிக்குத்தான் தெரியும்…” நழுவும் பாலாஜி
சமீபத்திய அமலாக்கத்துறை ரெய்டுகள் குறித்து பாலாஜியிடம் விவரித்த அதிகாரிகள், ‘வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்
சாமிநாதனைத் தெரியுமா?’ எனக் கேட்டனர். ஓரிரு முறை பார்த்திருப்பதாக
பதில் சொன்னார் பாலாஜி.
‘ஓரிரு முறை மட்டும் பார்த்திருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால்,
உங்களுக்கும் அவருக்கும் இடையேயான பரிவர்த்தனைகள் நெருக்கத்தைக் காட்டுகின்றனவே…’ எனச் சில ஆவணங்களை எடுத்து அவர் முன்னால்
வைத்தனர். அதைப் படித்துப் பார்த்தவரின் முகம் கறுத்துவிட்டது.
‘இதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்றார்.
சாமிநாதனின் உறவினர் இடத்திலிருந்து, 60 சொத்து ஆவணங்கள் சிக்கின.
அது தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன. ‘இதெல்லாம் எனக்குத்
தெரியாது. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றார் பாலாஜி.
சாமிநாதனுக்கும் சில ஃபைனான்ஸியர் களுக்கும் இருக்கும் தொடர்புகள்
குறித்தும் விசாரிக்கப்பட்டது. ‘எனக்கு எந்த ஃபைனான்ஸி யருடனும்
தொடர்பு இல்லை. அவருக்கு இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது.
நான் அமைச்சர் சார்… நான் ஏன் வட்டிக்கு விடுறவங்களோட தொடர்பு ஏற்படுத்திக்கப் போறேன்… வழக்குக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளை
ஏன் கேட்கிறீர்கள்?’ என டென்ஷனானார் பாலாஜி.
அதுவரை அமைதியாக இருந்த சீனியர் அமலாக்கத்துறை அதிகாரி
ஒருவர், ‘உங்களுக்குத் தொடர்பு இருக்கிற மாதிரி ஒரு கேள்வியைக்
கேட்கிறேன். உங்கள் தம்பி அசோக் புதிதாகக் கட்டிவரும் வீட்டின்
நிலத்தை எப்படி வாங்கினார்… 30 கோடி ரூபாய் பெறுமானமுள்ள
அந்த 2.49 ஏக்கர் நிலத்தை, வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு அசோக்கின்
மாமியார் வாங்கியது எப்படி… நிச்சயமாக, அமைச்சரான உங்களின்
ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது’ என்று கிடுக்கிப்பிடியாகக்
கேட்டார்.
பதற்றமான பாலாஜி, ‘எல்லாம் தம்பிக்குத்தான் தெரியும்… நீங்க
அவர்கிட்டதான் இதையெல்லாம் கேட்கணும்’ என்றார். விடாத
அதிகாரிகள், ‘அந்த வீட்டுக்காக உயர்ரக கிரானைட் கற்கள், பெல்ஜியம் கண்ணாடிகளெல்லாம் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவே…
அது பற்றித் தெரியுமா?’ என்று கேட்டனர். அதற்கும், ‘எதுவா
இருந்தாலும் தம்பிகிட்ட கேளுங்க. அவருக்குத்தான் எல்லாம் தெரியும்’
என நழுவலாகச் சொன்னார் பாலாஜி. அதற்குள் அவருக்கு வியர்த்துக்
கொட்டிவிட, கீழ்த்தளத்திலிருந்த மருத்துவரை உடனடியாக விசாரணை
அறைக்கு வரவழைத்தோம்.
பாலாஜியின் பல்ஸைப் பரிசோதித்த மருத்துவர், ‘டென்ஷனானதால
பல்ஸ் ஏறிடுச்சு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்’ என்றார்.
அதற்கு மேல் விசாரணையைத் தொடர முடியாது என்பதால், அன்றைய விசாரணையை முடித்துக்கொண்டு பாலாஜிக்கு ரெஸ்ட் கொடுத்தோம்.
தன்னுடைய அறைக்குச் சென்றவர், நீண்ட நேரமாகத் தூங்காமல் நடந்துகொண்டேயிருந்தார். இரண்டு முறை அவரிடம், ‘ஏதாவது
வேண்டுமா… மருத்துவரை அழைக்கலாமா…’ என அதிகாரிகள்
கேட்டபோது, மறுத்துவிட்டார். ஆகஸ்ட் 9, 10-ம் தேதிகளில், டாஸ்மாக்
விவகாரம், கரூர் கேங் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
‘கடந்த இரண்டு வருடங்களில், நீங்கள் மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்தபோது, டாஸ்மாக் கடைகளில்
மது பாட்டிலுக்குக் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
சட்டவிரோதமாக பார்களை நடத்தி, அதன் மூலமாகவும் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் செய்வதற்கு, ‘கரூர் கேங்’
என்ற பெயரில் சில நூறு பேரை வைத்து வேலை வாங்கியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் உங்கள் தம்பி அசோக்குக்கும் தொடர்பிருப்பதாக
அறிகிறோம். வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த
ஆவணங்களும், இந்த ‘கரூர் கேங்’ பற்றிய தகவல்களை
உறுதிசெய்கின்றன. இதற்கென்ன சொல்லப்போகிறீர்கள்?’
எனக் கேட்டனர் அதிகாரிகள்.
சமீபத்தில், கோவை டாஸ்மாக் மேலாளர் முத்துபாலன் வீட்டில்
நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாகவும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
சற்று நேரம் அமைதியாக இருந்த பாலாஜி, ‘இதையெல்லாம் நீங்க
தம்பிகிட்டதான் கேட்கணும். தம்பிக்குத்தான் தெரியும். ‘கரூர் கேங்’னு
ஒரு பேரை நான் இப்போதுதான் கேள்விப்படுறேன். அவங்களுக்கும்
எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சில அதிகாரிகள் செய்கிற
தப்புக்கெல்லாம் நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..?’ என ஒரே
போடாகப் போட்டார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி,
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதால்,
மற்ற குற்றவாளிகளை விசாரிப்பதுபோல பாலாஜியை விசாரிக்க
முடியவில்லை. ஓர் எல்லைக்குள் இருந்தபடிதான் கேள்விகளைக்
கேட்டிருக்கிறோம். விசாரணையில், தனக்கு இருக்கும் சிக்கல்கள்
அனைத்தையும், அவரின் பதில்களால் தன் தம்பி அசோக் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறார் பாலாஜி. இனி அசோக் சிக்கினால்தான்,
விசாரணை வேகமெடுக்கும்” என்றனர் விரிவாக.
.
பின் குறிப்பு – தம்பி சிக்கி விட்டார். திருவனந்தபுரத்தில் வைத்து பிடித்து விட்டார்கள் என்று லேடஸ்ட் தகவல் ஒன்று சொல்கிறது.
………………………………………………………………………………………………………………………………………



இப்படியெல்லாம் நிகழ்வுகளைப் படித்த பிறகுமா சட்டங்கள் மாற்றப்படக்கூடாதுன்னு சொல்றீங்க? தில்லியில் ஒரு பெண்ணை கடுமையாக காயப்படுத்தி வன்புணர்வு செய்தவங்க, சட்டப்படி வயதை விட ஒரு வயது குறைவுன்னு வெளில விட்டுடறாங்க. ‘கசாப்’ போன்றவர்களை வரி செலுத்துவோர் பணத்தில் கோடிக்கணக்காக செலவு செய்து, ஏசி அறை ஒன்றுதான் இல்லை, அப்படி காப்பாத்தறாங்க. இதே செந்தில் பாலாஜிக்கு கொசுவலை, ஏசி அறை என்று பலவும் தயார் செய்யறாங்க. நம்ம சட்டங்களை முழுவதுமாக மாற்றவேண்டும். இல்லையென்றால், 5 ரூபாய் திருடங்க மாத்திரம்தான் தண்டிக்கப்படுவாங்க. கொள்ளையர்களுக்கு கபில் சிபல் போன்றவர்கள் போராடுவாங்க.
வழக்கறிஞர்கள், டாக்டர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரும் bill கொடுக்கவேண்டும், அனைவரையும் கண்காணிக்க ஒரு அமைப்பு இருக்கவேண்டும் என்றெல்லாம் இருந்தால்தான் ‘ஊழல்’ என்ற நோய் குறையும்.
.
கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில்
இருப்பது யார் ? இவை ஏன் செய்யப்படவில்லை …?
.
அருமையான கேள்வி புதியவனிடம் பதில் உள்ளதா
பதில் இல்லை. இதைச் செய்தால் பாதிக்கப்படுவது பாஜகவில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளும்தான் என்பதால் பாஜக இதனை முன்னெடுக்கவில்லையோ?