…………………………………..

………………………………..
அவசரமாக கொண்டு வரப்படும் 3 புதிய சட்டங்கள் பற்றி,
தராசு ஷ்யாம் சில கேள்விகளை எழுப்பி, விளைவுகளை
குறித்தும் விவரமாகப் பேசுகிறார்…..
இந்த காணொலியை கண்ட பிறகு, வாசக நண்பர்கள்
யாராவது இவை குறித்து விளக்கம் கூறவோ, அல்லது
கருத்து தெரிவிக்கவோ விரும்பினால், பின்னூட்டங்களின் மூலம்
கூறலாம்…. நானும் பின்னூட்டத்தில் என் கருத்துகளோடு வருகிறேன்.
(வீடியோவின் மீது போடப்பட்டிருக்கும் தலைப்பு, இந்த கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாதது. வீடியோ தயாரிப்பாளர்களால், பரபரப்பிற்காக போடப்பட்டிருக்கிறது. எனவே, அதை மறந்து விடலாம்..!!!)
………………………………
.
……………………………………………………………………………………………………………………………………………….



சம்ப்ரதாயத்தை மாற்றுவது – மாற்றினால் என்ன தவறு? தராசுக்கு வேண்டுமானால் பிரிட்டிஷ் அடிமையாக இருப்பது பிடித்தமானது என்பதால் எல்லோருமே அப்படி இருக்கவேணும் என்று ஏன் நினைக்கணும்? நிலைக்குழுவில் நிச்சயம் long discussion நடக்கும். சட்டப்படி நிறைவேற்றுவார்கள் அல்லது கிடப்பில் போடுவார்கள்.
பாரதீய என்று மாற்றினால் இந்தியாவிற்கு முழுவதுமாக எப்படிப் பொருத்தமாக இருக்கும்? – இந்தக் கேள்விக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? India என்ற பெயரில் உங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று கேட்கும் தராசு, நிச்சயம் ‘சென்னை ராஜதானி’ என்ற பெயரில் திமுகவிற்கு என்ன குறை இருந்தது, ‘மெட்ராஸ்’ என்ற பெயரில் 250 வருடங்களுக்கும் மேலாக அழைக்கப்பட்ட இடத்தின் பெயரை மாற்ற உலகளாவிய விவாதங்கள் நடந்ததா? அந்தப் பெயரில் எதற்கு திமுகவிற்கு காழ்ப்புணர்வு என்றெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் என்றே நம்பலாம்.
சட்ட மாறுதல்கள் மிகப் பெரும் சுமை – இது அர்த்தமில்லாதது. வருமான வரி போன்ற பல சட்டங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சிஏ போன்ற தேர்வுகள் எழுதுபவர்களுக்கும், அக்கவுண்டண்ட் களுக்கும், பொதுமக்களுக்குமே சுமை என்பதால் 1950ல் இருந்த சட்டங்களே இப்போதும் இருக்கவேண்டும் என்று சொல்வாரா?
தராசுவின் வாதங்கள் முழுவதுமே, ஏன் ஹோம் மினிஸ்டர் இதனை பாராளுமன்றத்தில் வைத்தார், சட்ட அமைச்சர்தானே இதனைச் செய்யணும் என்ற கேள்வியிலேயே இருக்கிறார். யார் இதனை அறிமுகப்படுத்தினால் என்ன? நெடிய விவாதங்களுக்குப் பிறகு பாராளுமன்றம் மற்றும் ராஜ்ஜிய சபை அங்கத்தினர்கள் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடந்துதான் இது நிறைவேறும் அல்லது நிறைவேற்றப்படாது. அதற்காக இப்போதே ஏன் தராசு குதிக்கவேண்டும்?
இந்த மாற்றங்களைக் குறை சொல்லும் ‘கட்சி சார்ந்த’ ஊடகவியலாளர்களுக்கு உள் நோக்கம் இருக்கிறது. என்னைப் பொறுத்த மட்டில், இந்தப் பெயர் மாற்றங்களினால் சாதிக்கப்போவது ஒன்றும் கிடையாது. பாஜக விரும்புகிறதோ இல்லையோ, ஆங்கிலம் மாத்திரமே இந்தியாவிற்கு அல்லது பாரதத்திற்கு பொது மொழியாக இருக்கும் தகுதி படைத்தது. இதற்குக் காரணம், ‘செறிந்த’ மொழிகள் பத்துக்கும் மேற்பட்டு இருக்கும் நாடு இது. அவர்கள் எல்லோரையும் ஒரே மொழியின் கீழ் கொண்டுவருவது நடக்காது. ஒவ்வொரு மொழிக்கும் கலாச்சாரம், வரலாறு, செறிவு வேறு வேறு. அவர்களை, உங்கள் மொழி நல்லதுதான், ஆனால் பாரதத்திற்கான மொழி ‘ஹிந்தி’ என்று சொன்னால், ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பாஜக என்ன முயன்றாலும் ‘நாட்டின்’ கலாச்சாரத்தை மாற்ற இயலாது. அதனால் இவற்றில் கவனம் செலுத்துவதை விட, contentsகளில் கவனத்தைச் செலுத்துவது, அதுவும் நியாயமான காரணங்களை முன்னிட்டுச் செலுத்துவது அவர்களுக்கு நல்லது.
இலங்கை (முன்பிருந்த), சிங்கப்பூர் போன்ற நாடுகளின் செயல்முறையை நம் நாடும் பின்பற்றவேண்டும். எந்தத் திட்டத்தின் பெயரும், அந்த அந்த மாநிலங்களில், மாநில மொழியிலேயே அழைக்கப்பட வேண்டும். நம் நாட்டில், 30+ மொழிகள் இருப்பதை அரசு ஏற்றுக்கொண்டு, மாநிலத்தின் மொழியில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஒரு மொழிக்கொள்கை என்பதை முழுவதுமாகக் கைவிட்டுவிட்டு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இந்தியாவிற்கானது. அதே நேரத்தில் அந்த அந்த மாநிலத்தில், இவை தவிர மாநில மொழியும் சரி சமமான அந்தஸ்து பெறும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாஜக இதனைச் செய்வதாக நான் நம்பவில்லை.
.
புதியவன்,
” சம்ப்ரதாயத்தை மாற்றுவது –
மாற்றினால் என்ன தவறு…? ”
……
அவசியம் இருந்தால் நிச்சயம் மாற்றலாம்…
ஆனால், எப்படி…? எந்த வகையில்….?
அது தான் இங்கே கேள்வி….
இந்திய அரசியல் சட்டம் இதுவரை 105 முறை
மாற்றப்பட்டிருக்கிறது. அப்படியென்றால்,
104 தடவை பழைய அரசியல் சட்டத்தை
தூக்கி எறிந்து விட்டு, புதிய சட்டத்தை
இயற்றினார்களா….?
எப்போதெல்லாம் மாற்றம் தேவை என்று
உணரப்படுகிறதோ, அப்போதெல்லாம்,
அந்த மாற்றத்திற்குரிய பகுதி மட்டும்
புதிய சட்ட திருத்தம் மூலம் திருத்தப்படுகிறது.
முழு புத்தகத்தையும் தூக்கி எறிந்து விட்டு அல்ல….
இதே முறையில் தான் – தேவையற்றவை என்று
கருதப்படுபவை நீக்கப்படுகின்றன… புதிதாக
சேர்க்கப்பட வேண்டும் என்று கருதப்படுபவை
சேர்க்கப்படுகின்றன. இது இன்று புதிதாக
நடப்பது அல்ல….கடந்த 75 ஆண்டுகளாக நிகழ்வது….!!!
Indian Penal Code,
Criminal Procedure Code,
Indian Evidence Act
ஆகியவற்றின் பல விதிகள் இதற்கு முன்பும்
மாற்றப்பட்டிருக்கின்றன. திருத்தப்பட்டிருக்கின்றன.
நீக்கப்பட்டிருக்கின்றன.
அதே போல் இப்போதைய அரசுக்கும் –
தான் விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்,
புதிய பகுதிகளை சேர்க்கவும்
நிச்சயம் உரிமை உண்டு.
அதை தாராளமாக
இதுவரை செய்யப்பட்டு வந்த வழிகளிலேயே
செய்யலாம்.
அதற்கு பதிலாக, முழு புத்தகங்களையும்
தூக்கி எறிந்து விட்டு, நாங்கள் புதிதாக உருவாக்கும்
சட்ட புத்தகங்களைத் தான் இனி நீங்கள்
பயன்படுத்தவேண்டும் என்று சொல்வதை,
நீங்கள் பலத்த ” ஜால்ரா ” சப்தத்துடன்
கொண்டாடும் முன்னர் நான் சொல்லும் இந்த
சில விஷயங்களைப்பற்றியும் யோசித்துப்
பாருங்கள்….
இந்தியாவில் – இன்றைய தினம் சுமார் 15 லட்சம்
வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்…
(பல்வேறு வயதில்…..)
வருடந்தோரும் 1,721 சட்டக்கல்லூரிகள் மூலம்,
சுமார் 60,000 முதல் 70,000 புதிய
வக்கீல்கள் உருவாகி வெளிவருகிறார்கள்.
இந்தியா முழுவதுமாக, நீதித்துறையில் சுமார்
23,800 நீதிபதிகள் (பல்வேறு நிலைகளில்)
பணியாற்றி வருகிறார்கள்.
சட்டம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்
என்கிற பொறுப்பில் சுமார் 10,000 அதிகாரிகள்
காவல் துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் அத்தனை பேருக்கும் மேலே கூறியுள்ள
Indian Penal Code,
Criminal Procedure Code,
Indian Evidence Act –
ஆகியவை பற்றியும், அவற்றின் ஒவ்வொரு
பிரிவுகள், விதிகள் பற்றியும், அவர்கள் செய்துவரும்
பணிகள் காரணமாக, ஆழமான அறிவு அவசியம் தேவை.
புராணக்கதை ஒன்றில் யாரோ ஒரு முனிவர்,
” நீ கற்றது அனைத்தும் இன்று முதல்,
உனக்கு மறந்து போகட்டும்”
என்று சாபமிட்டது போல் –
நீ படித்தது எதுவும் இனி உனக்கு பயன்படாது ….
இப்போது நாங்கள் தருவதைப் படித்து விட்டு தான்
இனி நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால்,
இந்த மக்களின் கதி என்ன ஆகும் என்று
சற்று யோசித்துப் பாருங்கள்.
IPC -யின் சில பிரிவுகள் தூக்கத்தில் கூட
இவர்களுக்கு மறக்காது…
உதாரணம் – IPC செக்ஷன்-
Rape- 375
unlawful assembly of 5 or more people -141
punishment for murder-302
causing death by negligence -304-A
theft-379
fraud -420
இந்த புத்தகங்களை படித்து, புரிந்துகொண்டு,
முக்கியமான பிரிவுகளை மண்டையில் நிரந்தரமாக
ஏற்றிக்கொள்ள நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது
இன்னமும் என் நினைவில் உள்ளது.
50-60 வயதுகளில் இருப்பவர்களால், இனி புதிய
சட்ட புத்தகங்களை படித்து, மண்டையில் ஏற்றிக்கொண்டு,
சமயோசிதமாக பயன்படுத்துவது என்பது
இயலக்கூடிய காரியமா….?
உங்களை இவர்கள் நிலையில் நிறுத்தி கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்.
இரண்டு அரசியல் குழுக்களின் ‘ஈகோ’ போரில்
சிக்கிக்கொண்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி
மக்கள் ஏன் தவிக்க வேண்டும்…..?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
முழுமையாக மாற்ற முனையமாட்டார்கள். கபில் சிபல் போன்ற டாப் 50 வழக்கறிஞர்கள் இன்னும் கோடிக்கணக்கான “ஊழல் பணத்தை” சம்பாதிக்க வேண்டாமா?
எண்களையும் பெரும்பாலும் மாற்ற மாட்டார்கள். அதில் உள்ள ஷரத்தை மாத்திரம், தேவையிருப்பின் நீக்குவார்கள்/சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன். துக்ளக் ஆட்சி போல, எண்களை கன்னா பின்னாவென்று மாற்றிவிட மாட்டார்கள்.
முழுவதும் வெளியான பிறகு பார்ப்போம்.
இருந்தாலும், 50-60 வயதினர்களால்……….. என்று நீங்கள் மிகச் சிறுபான்மையினரைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். நேர்மையாக தொழில் செய்யும் எவரும் மாற்றங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். இவர்கள் என்ன பரீட்சையா எழுதப் போகிறார்கள்? ஒரு Excel ஷீட்டில் முன்னிருந்த நம்பர், இப்போது இருக்கும் நம்பர் என்று போட்டுக்கொள்ள வேண்டியதுதான். தொழில்னு வந்துவிட்டால் படிச்சுத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். (“ஊழல் பணத்தை” சம்பாதித்து, எப்படியும் தனக்கு 6 அடி நிலம் கூடக் கிடையாது என்று உணர்ந்த ‘பெத்தப் பெரிய’ வக்கீல்களைப் பற்றிய கசப்பு உணர்வுதான் இப்படி எழுத வைக்கிறது)
காவல் துறை போன்றவர்கள் என்ன, உடனுக்குடன் FIR போடறாங்களா? ஆற அமரத்தானே எதையும் செய்கிறார்கள். அப்புறம் என்ன?
.
அடிமைகளால் மாற முடியாது என்பதை
நான் அறிவேன்…
நான் கொடுத்த விளக்கம் அடிமைகள்
அல்லாதவர்களுக்காக.
.
நீங்க சொல்றதை ஒத்துக்கலைனா அடிமைகள்னு சொல்றீங்க. அதற்கும் பாஜக வை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தேச விரோதிகள்னு அவங்க சொல்றதுக்கும் என்ன வித்தியாசம்?
பழைய சட்டங்களில் திருத்தங்களும் புதிய சட்டங்களும் உள்ளடக்கிய பாரதத்துக்கு என்று புதிய முன்னெடுப்பை மத்திய அரசு செய்யுது. அதில் தவறு என்ன இருக்க முடியும்? முழுவதும் வெளியாகி அதில் தவறு இருந்தால் விவாதிக்கலாம். அதற்கு முன்பே, எதையும் மாற்றக்கூடாது, நாங்கள் படித்தது மாத்திரம் இருக்கவேண்டும் என்றால் என்ன செய்வது?