………………………………….

………………………………….
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய ஒரு கேள்விக்கு,
மத்திய நிதித்துறை இணைமந்திரி பகவத்கிஷன்ராவ் காரத் அவர்கள்
எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் விவரங்கள் –
எஸ்.சி.பி. எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடி
விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.
அதன்படி –
- 2014-2015 -ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும்
சேவை நிறுவனங்களின் கடன் ரூ.18 ஆயிரத்து 178 கோடி உள்பட
ரூ.58 ஆயிரத்து 786 கோடியும், - 2015-2016-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.70 ஆயிரத்து 413 கோடியும்,
- 2016-2017-ம் நிதியாண்டில் ரூ.1,08,373 கோடியும்,
- 2017-2018 ம் நிதியாண்டில் ரூ.1,61,328 கோடியும்,
- 2018-2019 ம் நிதியாண்டில் ரூ.2,36,265 கோடியும்,
- 2019-2020 ம் நிதியாண்டில் ரூ.2,34,170 கோடியும்,
- 2020-2021 ம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியும்,
- 2021-2022 ம் நிதியாண்டில் ரூ.1,74,966 கோடியும்
- 2022-2023 ம் நிதியாண்டில் ரூ.2,09,144 கோடியும்
-தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
மொத்தமாக மேற்படி 9 ஆண்டுகளில் –
ரூ.14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி
தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதில் பெருநிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான
தள்ளுபடி தொகை ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ஆகும்.
……………………….
மேற்படி பத்திரிகைச் செய்தியின் மீது, இந்த கட்டத்தில், நான் விமரிசன
கருத்துகள் எதையும் கூற விரும்பவில்லை; மேலே இருக்கும் கிராப்’பே சில விஷயங்களை தெளிவாக சொல்கிறது. வாசகர்கள் தங்கள் கோணத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பும் வாசக நண்பர்கள்
தாராளமாக தங்கள் கருத்துகளை பின்னூட்டங்கள் மூலம்
தெரிவிக்கலாம்.
தேவைப்பட்டால், நானும் பின்னூட்டத்தில் என் கருத்துகளை
தெரிவிக்கிறேன்.
.
…………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….