………………………………………………….

( பிஸினஸ் -பட்டியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் போதுமா…? )
……………………………………………………
முதலில், நியோமேக்ஸ் ஊழல் சம்பந்தப்பட்ட
லேடஸ்ட் தகவல்கள் –
அடுத்து செந்தில் பாலாஜி வழக்கு குறித்து அப்டேட்ஸ் –
………………….
`நிலத்தை விற்று பணம் கொடுக்கத் தயார்’- நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் ; சரமாரியாகக் கேள்வியெழுப்பிய நீதிபதி …
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்
‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி,
சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருவாரூர், திருச்சி,
கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் கிளை
நிறுவனங்களைத் தொடங்கி செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.
இவர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு
12 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை கூடுதல் வட்டி தருவதாகவும்,
முதலீடு செய்யும் பணம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்
இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் எனவும், அல்லது இரட்டிப்பாகக்
கொடுக்கப்படும் பணத்துக்கு பதிலாக வீட்டுமனைகளை எழுதிக்
கொடுப்பதாகவும் ஆசைவார்த்தைகளைக் கூறி பணத்தை
வசூலித்திருக்கின்றனர். இதை நம்பி தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு கோடிக்கு மேல்
முதலீடு செய்திருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் கூறியபடி வட்டித் தொகையையும் கொடுக்காமல்,
முதலீட்டு பணத்தையும் வழங்காமல் ஏமாற்றி சுமார் 5,000 கோடி ரூபாய்
வரை மோசடி செய்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான புகார்களின்பேரில் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில்
நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான –
கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்ட
17 பேர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, கடந்த
ஒரு மாத காலமாக தலைமறைவாக இருக்கும் அவர்களை தனிப்படை
அமைத்து தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி, நியோமேக்ஸின் அதன் கிளை நிறுவன இயக்குநர்களான பழனிச்சாமி, அசோக் மேத்தா பன்சால், நாராயணசாமி,
சார்லஸ், தியாகராஜன், மணிவண்ணன், செல்லம்மாள், மற்றொரு
பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து, ஆட்சேபனை
தெரிவிக்கப்பட்டதால், முன்ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், நியோமேக்ஸ் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், “தென் தமிழகத்தில் எங்கள்
நிறுவனத்துக்குச் சொந்தமான 9,78,89,000 சதுரடிக்கான அரசு ஒப்புதல்
பெற்ற நிலங்கள் இருக்கின்றன. நாங்கள் பதிவுசெய்து கொடுக்கப்பட்ட
விற்பனை பத்திரத்தை ஓரளவுக்குச் செயல்படுத்தி இருக்கிறோம்.
கிட்டத்தட்ட 15,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எங்களிடம் 4,12,65,276 சதுர அடி நிலங்கள்
தற்போது பத்திரப்பதிவுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. எனவே,
எங்களுடைய இந்த நிலங்களை விற்று அந்தப் பணத்தை புகார்தாரர்களிடம் ஒப்படைக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்”
எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நிறுவனத்தின் இயக்குநர்கள்
சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், சிலர் தலைமறைவாக
இருக்கின்றனர். அவர்களின் முன்ஜாமீன் வழக்கு இந்த நீதிமன்றத்திலேயே நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் ஏதோ உள்நோக்கத்துடன்
இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 106 நிறுவனங்கள்
பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களிடமிருந்து
பெறப்பட்டிருக்கிறது” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, “நியோமேக்ஸ் நிறுவனம் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனுத்தாக்கல் செய்திருக்கிறீர்கள்.
ஆனால், விசாரணைக்கு ஏன் போலீஸாரிடம் சரணடையவில்லை…. ?
விசாரணை அதிகாரிகளிடம் ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்து,
கேள்வி எழுப்பியிருந்தால் நன்றாக இருக்கும்” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நிறுவனத்தாரின் மனு குறித்து மாவட்டக் குற்றவியல்
போலீஸார் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற
24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
……………………..
இந்த இரண்டு தலைப்புகளுக்குமான லேடஸ்ட் தகவல்களுடன்
க்ரைம் செல்வராஜ் பேட்டி கீழே –
……………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….