…………………………………………………

…………………………………………………………………..
நடந்த ஊழலைப் பற்றி புகார் கொடுத்தால்,
அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலோ, விளக்கமோ கொடுக்க
வக்கில்லாமல்,
புகார் கொடுக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி
இருக்கிறது என்று கேட்கிறார் மணி…. டி.ஆர்.பாலுவின் சம்பந்தி
அந்தக் காலத்திலேயே வருமான வரி கட்டியவர் தெரியுமா….?
என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் மணி….. வருமான வரி கட்டுவதற்கும் ஊழல் செய்வதற்கும் என்ன சம்பந்தம் ….? நமக்குத் தெரிந்து மாட்டிக்கொண்டவர்கள் எல்லாருமே வருமான வரி கட்டுபவர்கள் தான்..!!!
வெட்ட வெளிச்சமாகத் தெரியும் திமுகவின் ஊழல்களுக்கு
ஒரு மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் மணி
எப்படி சற்றும் கூச்சப்படாமல் வக்காலத்து வாங்குகிறார்….???
வர வர – இங்கே யாருக்கும், எதற்கும் வெட்கமில்லை…!!!
…………………………………………………………………..



காசு வாங்கிக்கொண்டு, ஆதாயத்திற்காக ‘பத்திரிகையாளர்’ என்ற போர்வையில் வாந்தியெடுக்கும் கம்யூனிஸ்ட் மணிக்கு என்ன உரிமை இந்த நாட்டில் இருக்கிறதோ அதைவிட அதிகமான உரிமை அண்ணாமலை அவர்களுக்கு உண்டு. திமுக ஜால்ரா, ஊழல் செய்து நாட்டை நாசமாக்கவேண்டும் என்ற ஆசை உள்ள ஊழல் கைக்கூலி மணிக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் மக்களுக்கு யார் தலைவர் ஆகவேண்டும் என்பதைப் பற்றியோ பேச என்ன தகுதி இருக்கிறது? இன்றைக்கு யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்காகவும், யார் தன்னைப் பேட்டி எடுக்கிறார்களோ அந்த சேனலின் வாய்ஸாகவும் பேசும் மணியின் அரசியல் கருத்துகளுக்கு எந்த மரியாதையும் கிடையாது.
அண்ணாமலை மோடி அவர்களை பிரதமராக ஆக்கவேண்டும் என்பதற்காக இந்தப் பாதயாத்திரையை மேற்கொள்ளவில்லை. பாஜக கட்சியின் வீச்சும், திமுக அரசின் ஊழலும், மத்திய அரசு தமிழகத்திற்குச் செய்கின்ற திட்டங்களைப் பற்றிப் பேசவும், இதைச் சாக்கிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் அறிமுகமாகவும் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். ராகுல் ஃபெரோஸ் கான் பாதயாத்திரைக்கு வால் பிடித்த மணிக்கு இது எல்லாம் எங்கே தெரியப்போகிறது?
“எதற்காக மோடி அவர்களை நாம் பிரதமராக ஆக்கவேண்டும்?” என்று கேட்கிறார் மணி. இந்த ‘நாம்’ யார்? தமிழகத்திலிருந்து பாஜகவிற்கு எம்பிக்கள் இல்லை. Technically Modi had sizeable support from TN. However he was elected by many bigger states than TN.
அண்ணாமலைக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான தரவுகள் எங்கிருந்து கிடைத்தால் மணிக்கு என்ன? மணி பேசுவது எல்லாமே அவரே நேரே போய் ஒவ்வொரு பேச்சின்/செயலின்போதும் கூட இருந்து தெரிந்துகொண்டதா? இவருக்கு காசு கொடுப்பவர்கள் கொடுக்கும் தரவுகளை மாத்திரமே வைத்துக்கொண்டு பேசுவதுதானே மணியின் ஸ்டைல். திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் ‘சில’ வற்றில் உண்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் கம்யூனிஸ்ட் மணிக்கு, நாட்டின் மீதான அக்கறையைவிட, அவரது வயிற்றெரிச்சல்தான் இந்தப் பேட்டியில் வெளிப்படுகிறது.
மன் கீ பாத் பற்றிப் பேசும் மணி, என்றைக்காவது, ஸ்டாலின் அதே போன்று செய்தியாளர்களைச் சந்திக்காமல் திரையைப் பார்த்து மாத்திரம் பேசுகிறார் என்று சொல்லியிருக்கிறாரா? சொல்லியிருந்தால் இவர் பத்திரிகையாளர். அப்படிச் சொல்லவில்லை என்றால் இவரும் ஊழல்வாதியே, நாட்டிற்கு எதிராகச் செயல்படும் எட்டப்பனே.