டெல்லி திஹார் ஜெயிலுக்கு தூக்கிச் செல்வதை சுலபமாக்கினார் -சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொண்ட செ.பா….!!!

…………………………………………………..

…………………………………………………

நீதிமன்றத்தில் என்ன காரணம் சொல்லி இவரை டெல்லிக்கு
கொண்டு செல்லலாமென்று யோசித்து வந்த அமலாக்கத்துறைக்கு
தானாகவே விஷயத்தை ரொம்பவும் சுலபமாக்கி விட்டார்….
இ.இல்லாத செ.பா….!!!

சென்னை – புழல் சிறையில் அவர் செய்துள்ள,
செயல்களின் மூலம் ஆதாரபூர்வமாக சிக்கி இருக்கிறார் செ.பா.

……………….

சென்னை: வேண்டிய உதவிகளை செய்து தர, அவர் – ‘கூகுள் பே’ வாயிலாக
சிறை காவலர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தை அமலாக்கத்துறை
கண்டு பிடித்திருக்கிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை
அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜூன் 14ல் கைது செய்தனர். சென்னை
காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது.
தற்போது புழல் மத்திய சிறை மருத்துவமனையில் முதல் வகுப்பு கைதியாக
தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

விதிகளை மீறி, டி.ஐ.ஜி. ஒருவர் அவரை சந்தித்து வருவதாக , தகவல்கள்
வெளியானதையடுத்து, செந்தில் பாலாஜிக்காக சிறையில் நடக்கும்
திரைமறைவு வேலைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள்
விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் – அவருக்கு விரும்பிய உணவு மற்றும் வேண்டிய உதவிகளை செய்ய காவலர் ஒருவருக்கு ‘கூகுள் பே’ வாயிலாக 30,000 ரூபாய் தரப்பட்டுள்ளது குறித்த தகவல் சிக்கி, அதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணுடன் சிறைக்காவலர் ஒருவரின்
வங்கி கணக்கு இணைக்கப்பட்டு ‘கூகுள் பே’ வாயிலாக பணம் அனுப்புவது
மற்றும் பெறுவதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

வேண்டிய வசதிகளை செய்து தர அவரது உறவினர்களிடமிருந்து
அந்த அலைபேசி எண் வாயிலாகத் தான் பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு
தெரியவந்துள்ளது.

இது போதாதா….!!!

.
……………………………………………………………………………………………………………………..……

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to டெல்லி திஹார் ஜெயிலுக்கு தூக்கிச் செல்வதை சுலபமாக்கினார் -சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொண்ட செ.பா….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    செ.பா வுக்கு அவர் யாரென்றே தெரியாது. அவருடைய அனுமதி இல்லாமல் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கும் செ.பா விற்கும் என்ன சம்பந்தம்? இதை சென்னை உயர்நீதி மன்றத்தில் அதே அமர்வு (நீதியரசர்கள் நிஷா பானு மற்றும் பரத் சக்ரவர்த்தி) விசாரிக்கவேண்டும் என்று சொன்னால் ஆச்சு. அது இழுக்கும் இன்னும் இரண்டு மாதங்கள். (இவர்கள் தீர்ப்பு ஒத்துப் போகவில்லை என்றால், மூன்றாவது நீதிபதி, பிறகு உச்ச நீதிமன்றம்)

    அமைச்சர் ரகுபதி அவர்கள்தான் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறாரே.. மற்ற முதல் வகுப்புக் கைதிகளைப் போலத்தான் செ.பா விற்கும் செய்யப்படுகிறது. எந்த தனிப்பட்ட வசதியும் கிடையாது என்று. இன்னமுமா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை?

  2. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    இவரை பற்றிய எல்லா விவரங்களையும் இடுக்கையாக போட்டுவரவம் . இவர் நாளைக்கு பிஜேபி க்கு மாறும்போது உங்கள் எல்லார் முகத்திலும் நீங்களாகவே கரியை பூசிக்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Jksmraja

    இவர் பிஜேபி-க்கு போனாலும் சரி,
    பிரதமருடன் போட்டோவுக்கு
    (ஷிண்டே மாதிரி ..)
    போஸ் கொடுத்தாலும் சரி,
    என் கருத்து என்றும் மாறாது …!!!

    .
    -வாழ்த்துகளுடன்
    காவிரிமைந்தன்

  4. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    //இவரை பற்றிய எல்லா விவரங்களையும் இடுக்கையாக போட்டுவரவம் . இவர் நாளைக்கு பிஜேபி க்கு மாறும்போது உங்கள் எல்லார் முகத்திலும் நீங்களாகவே கரியை பூசிக்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்
    //

    மிஸ்டர் பரிசுத்தம் என்ற ஆன பிறகு நாம் எதற்கு அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்

  5. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    திமுக அமைச்சரை பற்றி ஏதாவது சொன்னால் சொன்னவர் பிஜேபி ஆளாகத்தான் இருக்கவேண்டுமா? ஊழலை எங்கிருந்தாலும் எதிர்ப்போம்! அது திமுக வாக இருந்தால் என்ன பிஜேபியாக இருந்தால் என்ன?

    • Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      என்ன இப்படி சொல்லிட்டிங்க
      திமுகாவை எதிர்த்தால் அவங்க கண்டிப்பாக சங்கி தான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.