……………………………………………………….

………………………………………………………..
ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவதையோட்டி,
அதனை பிரபலப்படுத்த – மத்திய அரசு நாடு முழுவதும் பல முக்கிய இடங்களில், கலை, இலக்கிய, இசை – விழாக்களை நடத்தி வருகிறது.
சென்ற மாதம், சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில்,
“வசுதைவ குடும்பகம்” ( உலகம் முழுவதும் ஒரே குடும்பம் தான்…)
(யாதும் ஊரே – யாவரும் கேளிர் – நினைவுக்கு வருகிறதா…?)
என்கிற தலைப்பில் 3 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதில் ஒரு நாள், இசைஞானி இளையராஜா அவர்களின்
இயக்கத்தில், பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட
ஒரு ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தது.
ராஜா சில அற்புதமான ராகங்களை இசைக்க வைத்தார்.
மேண்டலின் ராஜேஷ் அவர்கள் மேண்டலினிலும்,
சிறிய வயதிலேயே உலகப்புகழ்பெற்ற இளைஞர் லிடியன்
கிடாரிலும் இளையராஜாவின் பயிற்சியில் அற்புதமான
கர்நாடக பாடல்களை இசைத்துக் காண்பித்தனர்.
அந்த ராக நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் அளவுக்கு
எனக்கு இசை ஞானம் கிடையாது, அந்த பாடல்களை என்னால்
புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் கூட,
” இன்னும் கொஞ்ச நேரம் வாசித்தால் தானென்ன ” … என்கிற
ஏக்க உணர்வு தோன்றியது என்னவோ உண்மை…
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் …”
கீழே அந்த இரண்டு பாடல்கள்….
மேண்டலின் – ஸ்ரீநிவாஸ் ராஜேஷ்
க்ளாஸிகல் கிதார் – லிடியன் நாதஸ்வரம்
……………………………………………..
(இந்த காணொலியில் மட்டும் – முதல் 3 நிமிடங்களை தவிர்த்து விடலாம்…)
…………………….
.
………………………………………………



இளையராஜா போல் ஒருவர் இசை உலகில் செய்த சாதனைகள் ஒரு வாழ்நாளில் ஒருவர் செய்ய முடியும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இறைவன் அருள். கிட்டதட்ட 25 வருடங்கள் தினமும் காலை 4 மணிமுதல் மாலை 9 வரை ஒவ்வொரு நாளும் அவரின் உழைப்பு.. பிரமிப்பாக இருக்கிறது!