“கணக்கில் வராத ரூ.3,000 கோடி – ! ” – பெருச்சாளிகளின் பட்டியலை வெளியிடுங்கள் …!!!

…………………………………………………….

…………………………………………………….

……………………………………………………….

வருமானவரித்துறை அறிவிப்பு –

`உறையூர், செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்த
சோதனையில், பான்கார்டு இணைக்கப்படாமல் செங்குன்றத்தில்
ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான
பத்திரப்பதிவுகள் நடந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய
வந்திருக்கிறது.’

https://tamil.indianexpress.com/tamilnadu/uraiyur-sub-registrar-has-no-account-for-3000-cores-says-ed-department-716770/………………………..

30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை
பதிவுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் அது குறித்த
விவரங்களை, மத்திய நிதியமைச்சகத்தின், வருமான வரி இலாகா
இணையத்தளத்தில் பதிவேற்றியாக வேண்டும் என்பது விதி…

இந்த விவரங்களை வாங்குவோர், விற்போரின் ஆதார் மற்றும்
பான் கார்டு விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம்,
வருமான வரி இலாகா, சம்பந்தபட்ட நபர்களின் வருமான வரி
கணக்குடன் இந்த விவரங்களை இணைத்து சரி பார்க்கும்.
எங்கேயாவது தவறு இருப்பின், மேல் நடவடிக்கை எடுக்கும்.

லஞ்சப்பணம் / கருப்புப் பணம் மூலம் சொத்துகளை வாங்குவோர்,
இந்த தகவல்களை மறைத்து விட முயற்சி செய்கின்றனர் –
சார்பதிவாளர்களின் துணையோடு…!!!!

………

தமிழ்நாட்டின் – பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பான்கார்டு இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், இதனால்
பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வருமான வரித்துறைக்குத்
தகவல் கிடைத்திருக்கிறது.

அதனடிப்படையில், சந்தேகத்துக்குரிய சார் பதிவாளர்
அலுவலகங்களைக் கண்டறிந்து, அங்கு வருமான வரித்துறையின்
நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு
செய்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக –
சென்னைக்கு அருகிலிருக்கும் செங்குன்றம்,
மற்றும் திருச்சிக்கு அருகிலிருக்கும் உறையூர் –
ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்துக்கும் மேற்பட்ட
அதிகாரிகள் கடந்த 4-ம் தேதி சோதனை மேற்கொண்டு, கோப்புகளை ஆய்வுசெய்தனர். 16 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச்
சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக
வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், “உறையூர்,
செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்த சோதனையில்,
பான்கார்டு இணைக்கப்படாமல் செங்குன்றத்தில் ரூ.2,000 கோடி,
உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள்
நடந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மேலும்,
ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன”
எனத் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, சென்னை, திருநெல்வேலி மண்டலங்களைச்
சேர்ந்த மாவட்ட பதிவாளர்கள் 36 பேரை அதிரடியாகப் பணியிட
மாற்றம் செய்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று
முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச்
சேர்ந்த 78 சார் பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்….

(மேலே இருப்பது செய்தி மட்டும் ….. இனி – நாம் … )

…………………………………….

இது எப்படி நடந்திருக்க முடியும் …?

ஒரு பத்திரத்தை பதிவுசெய்ய – ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும்
புகைப்படம் ஆகியவை அடிப்படை தேவைகள் ஆயிற்றே….
இவை இல்லாமல் ஒரு ரெஜிஸ்டிரார்(பதிவாளர்) எப்படி ஓப்புதல்
அளித்து, அந்த பதிவில் கையெழுத்து போட்டிருக்க முடியும்….?

முதல் பார்வையிலேயே -லஞ்ச ஊழல், மோசடி –
வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே….

இதில் பணிமாறுதல் எப்படி உதவும்…? புதிய இடத்திற்கு போய் அங்கேயாவது மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யுங்கள் என்று உதவியா …?


சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் உடனடியாக சஸ்பெண்டு ( பணியிடை நீக்கம்) செய்யப்பட்டிருக்க வேண்டாமா ….?

மேலேயிருந்து உத்திரவுகள் இல்லாமல், மேற்படி சார்பதிவாளர்
அலுவலக பொறுப்பாளர்கள் இதைச் செய்திருக்க முடியுமா….?

இந்த தில்லுமுல்லுகளில் அமைச்சர்கள் வரையில் நிச்சயமாக
சம்பந்தப் பட்டிருக்கவேண்டும்… 2018 முதல் 2023 ஏப்ரல் வரையிலான
காலம் என்று சொல்லும்போது, திமுக, அதிமுக ஆகிய இரண்டு
கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இதில் நிச்சயம் பங்கு
இருக்க வேண்டும்.

வருமான வரி இலாகா, வரி ஏய்ப்பு என்கிற கோணத்தில் மட்டுமே
இந்த விஷயத்தை அணுகும்…அபராதத்துடன் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து விடும்.

ஆனால், வரி ஏய்ப்பின் பின்புலத்தில், லஞ்ச ஊழல், மோசடி, ஏமாற்றுதல்
போன்ற கிரிமினல் குற்றங்களும் அடங்கியிருக்கின்றன என்பதால்,
இதனை முற்றிலுமாக, விவரமாக விசாரணை செய்து,
சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை பட்டவர்த்தனமாக
பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். சட்டரீதியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட சொத்துகளை கருப்பு பணம் கொண்டு வாங்கியவர்கள், உடந்தையாக இருந்த சார்பதிவாளர்கள் ஆகியோர் மீது உரிய மேல் நடவடிக்கைகளை தொடரவேண்டும்.

என்ன – 20 ஆண்டுகள் கழித்து, வழக்குகள் ஒருவழியாக முடிந்து, சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகள் மீது – குற்றம் சந்தேகமற்ற முறையில் நிரூபிக்கப்படவில்லை, போதிய சாட்சியங்கள் இல்லை என்று தீர்ப்புகளில் கூறப்பட்டு –

தண்டனையிலிருந்து தப்பி, அந்த பிசாத்துகள் – சிரித்துக்கொண்டே வெளியே சுதந்திரமாக உலா வந்தாலும் கூட –


குறைந்த பட்சம், அந்த பெருச்சாளிகளின் பட்டியலாவது
பொதுமக்களின் பார்வைக்கு வந்தால்,

நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பினாலும், பொதுமக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள், அவர்களை வேறு எந்த வழியில், எப்படி தண்டிப்பது என்று….!!!

.
……………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to “கணக்கில் வராத ரூ.3,000 கோடி – ! ” – பெருச்சாளிகளின் பட்டியலை வெளியிடுங்கள் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும். இந்தச் சிலரே 3000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பார்களா? தமிழகம் முழுவதும் தோண்டினால் 3000 லட்சம் கோடி முறைகேடுகளாக இருந்திருக்குமோ?

  2. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    வெறும் இடமாற்றம் என்பது எல்லோரும் உள்கை என்று தெரிகிறது. வருமான வரித்துறை இதில் புகாரளித்ததால் வேறு வழியில்லாமல் இந்த ஊழல் வெளிவந்திருக்கிறது!

  3. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    என்னை கேட்டால், குற்றம் செய்தவர்கள் sorry கேட்டாலே, போதுமானது. அவர்களை இடமாற்றம் செய்திருப்பது , அப்பட்டமான மனிதஉரிமை மீறல்…

  4. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    //தமிழ்நாட்டின் – பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பான்கார்டு இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், இதனால்
    பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வருமான வரித்துறைக்குத்
    தகவல் கிடைத்திருக்கிறது.
    //
    பான் கார்டு ஆதார் கார்டு ஆகியவற்றை இணைத்து என்ன பயன்?

    தமிழ்நாட்டில் கைடு லைன் வேல்யூ என்பது மார்க்கெட் வேல்யூவை விட பல இடங்களில் 10 மடங்குக்கு மேல் குறைவாக இருக்கிறது. எனவே கருப்பு பணம் முதலைகள் இவற்றை இணைப்பதனால் மாட்டிக் கொள்ளப் போவதில்லை.

    ஒரு சொத்து விற்கப்படுகின்ற போது இன்னொருவர் அந்த சொத்தை விற்பனை செய்வதாக கூறுகின்ற விலையை விட இரண்டு மடங்கு அதிகம் விலை கொடுத்து வாங்க விரும்பினால் அதனை அங்கீகரிக்கக் கூடிய சட்டம் வந்தால் அது போதும் கருப்பு பணம் முதலைகள் மாட்டிக் கொள்ள.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      /விற்பனை செய்வதாக கூறுகின்ற விலையை விட இரண்டு மடங்கு அதிகம் விலை கொடுத்து வாங்க விரும்பினால் // – இப்போதும் அந்த நடைமுறை நிச்சயம் உண்டு. ஒரு சொத்தை 20 லட்சத்துக்கு வாங்கி (அப்போது guide value 6 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்), இப்போது 90 லட்சத்துக்கு விற்றால், அந்த 90 லட்சத்தையும் பத்திரத்தில் பதிவு செய்யச் சொன்னால் (அப்போதான் விற்பவருக்கு கருப்புப் பணம் இல்லாமல் எல்லாமே வெள்ளையாகும்) பத்திரப் பதிவு செய்வார்கள். Guide value என்பது, ஒரு சொத்தை, அதற்குக் குறைவாகப் பதிவு செய்ய முடியாது என்பதற்காக என்று நினைக்கிறேன் (அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக)

  5. Vicky's avatar Vicky சொல்கிறார்:

    இப்படி திடீர்னு பணி மாறுதல் செய்தால் நெஞ்சு வலி வந்து விட போகுது, வேண்டாம் விட்டுடலாம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.