……………………………………………

……………………………………………
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் (3)
வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்
வாழை போலே
தன்னை தந்து தியாகி
ஆகலாம் உறுதியோடு
மெழுகு போலே ஒளியை
வீசலாம்
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் தெய்வம்
ஆகலாம்
ஊருக்கென்று
வாழ்ந்த நெஞ்சம் சிலைகள்
ஆகலாம் உறவுக்கென்று
விரிந்த உள்ளம் மலர்கள்
ஆகலாம் (2)
யாருக்கென்று
அழுதபோதும் தலைவன்
ஆகலாம் மணம் மணம்
அது கோவில் ஆகலாம்
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் (3)
மனமிருந்தால்
பறவை கூட்டில் மான்கள்
வாழலாம் வழி இருந்தால்
கடுகுக்குள்ளே மலையை
காணலாம் (2)
துணிந்துவிட்டால்
தலையில் எந்த சுமையும்
தாங்கலாம் குணம் குணம்
அது கோவில் ஆகலாம்
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம்
வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்
வாழை போலே
தன்னை தந்து தியாகி
ஆகலாம் உறுதியோடு
மெழுகு போலே ஒளியை
வீசலாம்
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் தெய்வம்
ஆகலாம்
..
…………………………
.
……………………………………………..
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா (2)
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் (2
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை (2
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு (2)
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு (2)
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
…………………..
கண்ணதாசனின் இந்த பாடலைப்பற்றி கவிஞர் வாலி –
முதல் 2 நிமிடம் 30 விநாடிகளை கடந்து,
பின்னர் வீடியோவை இறுதிவரை காணுங்கள் –
………..
.
…………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….