…………………………………………………..

…………………………………………………….
பசுத்தோல் போர்த்திய புலி என்று உத்தமர் வேடம் போடும்
அயோக்கியர்களை சொல்வதுண்டு …
காஞ்சி பெரியவரை ப்ரொஃபைல் படமாக வைத்துக்கொண்டு,
எனக்கு பதவி ஆசை கிடையாது, நான் அரசியலிலேயே இல்லையாக்கும்
என்று அவ்வப்போது வெளியில் தம்பட்டம் அடித்துக்கொண்டு,
திரைக்குப்பின்னே அந்தரங்கமாக தமிழக அரசியல் விவகாரங்கள்
அனைத்திலும் தலையிட்டுக்கொண்டு இருப்பவர்கள் –
காஞ்சி மடத்தையும் கைப்பற்றுவதில் காட்டும் தீவிரம் பற்றி
இந்த காணொலியில் சொல்லப்படுவதை கேட்கும்போது
மிக வேதனையாக இருக்கிறது…
இவர்கள் எல்லாம் …. போகும்போது,
எதைக்கொண்டு போகப்போகிறார்கள் … ???
காணொலியில் சொல்லப்படுவது அனைத்தும் உண்மையாக
இருக்குமென்று நான் சொல்ல வரவில்லை. மிகைப்படுத்தல்கள்
இருக்கின்றன… ஆனால் அடிப்படையில் நிச்சயம் நிஜம் உண்டு.
நான் ஏற்கெனவே சில விஷயங்கள் கேள்விப்பட்டேன்.
ஆனால் சரியாகத் தெரியாது. சங்கர மடத்துடன் தொடர்பில்
உள்ளவர்கள், அடிக்கடி அங்கே போய் வருபவர்களுக்கு மேற்கொண்டு
விவரங்கள் தெரிந்திருக்கலாம். இது குறித்து மேலும் அறிந்த வாசகர்கள்
தாங்கள் அறிந்தவற்றை இங்கே பின்னூட்டம் மூலம் பகிர்ந்து
கொள்ளலாம்.
…………………………
.
…………………………………………………………………………………………………………..



இது credibility இல்லாத தகவல். பச்சமுத்து அவர்கள் ஏன் தனிக்கட்சி ஆரம்பித்தார்? எதற்காக போயஸ் கார்டனுக்கும் (குறிப்பாக சசிகலா) காஞ்சி மடத்திற்கும் (ஜெயேந்திரர் பதவிக்கு வந்த பிறகு) பலத்த உரசல் வந்தது? திமுக சார்பாகவே பேசும், எழுதும் நக்கீரனில் இந்தப் பேட்டி வருவதிலிருந்தே இதன் பின்னணி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
எந்த மடத்திலும் இரண்டு வகையான வேலைகள் உண்டு. ஒன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. அதாவது மடத்தின் தலைவர், மடத்திற்கு வரும் பக்தர்களின் நன்மைக்கான விஷயங்களைச் செய்வது. மடத்தின் தலைவர் துறவி என்பதால் அவர் நேரடியாக பணத்தை handle செய்ய முடியாது. அதனால் இந்த இரண்டாவது வேலையான ‘நிர்வாகம்’ இருக்கிறது. முடிந்த அளவு தாங்கள் நேர்மையானவர்கள் என்று நினைப்பவர்களுக்கு இதன் பொறுப்பு வழங்கப்படும். எந்த நிர்வாகத்திலும் தவறுகள் நடப்பதற்கும் தவறானவர்கள் பொறுப்புக்கு வருவதற்கும் வாய்ப்புகள் நிறைய உண்டு. மடத்தின் தலைவர்கள் ‘நிர்வாகத் திறமை’ மிகுந்தவர்களாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அவர்கள் பக்தர்களின் மதிப்புக்கு உகந்தவர்களாக மாத்திரமே இருக்க இயலும். மடத்தின் நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு பலவித அரசியல் அழுத்தங்களும் ஏற்படலாம், influences இருக்கும். அதையும் மீறி ஓரளவு நேர்மையாக நிர்வாகத்தை நடத்தத்தான் பார்ப்பார்கள்.
இதில் இன்னொரு பிரச்சனையும் வரும். மடத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவரை விட (காஞ்சி மடத்தை மாத்திரம் குறிப்பிடவில்லை), அனுபவமும் ஆன்மீக knowledgeம் ஒழுக்கமும் நிரம்பியவர்கள் பலர் இருப்பர் (அந்த மடத்திலேயே அல்லது அந்த மடத்தின் கிளைகளிலேயே). ஆனால் மடத்தின் தலைவராக வருவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டியிருக்காது. அதனை நான் எப்படிப் பார்ப்பேன் என்றால், divine call வரவில்லை, அதாவது இவர் தலைவராக வருவதற்கு இறையின் ஆசி இல்லை. அப்படிப்பட்டவர்கள் நல்லவராகவும் இருக்கலாம் அல்லது Ego நிரம்பியவராகவும் இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள், கொஞ்சம் அலட்சியமாக நடந்துகொள்வார்கள், அல்லது குடைச்சல்களைக் கொடுப்பார்கள். இதனை மீறி, தான் மடத்தின் தலைவர் என்ற நிலையை அடைய நிறைய வருடங்களாகும். (சில மடங்களில், அப்படிப்பட்டவரை வெளியேற்றும் அளவுக்கு ஓரளவு வயதுடையவராக இருப்பார் மடத்தின் புதிய தலைவர்)
மடங்கள் நடத்தும் நிறுவனங்கள் எல்லாமே, நல்ல நோக்கத்துடன், அரசியல் சட்டங்கள் கூறும் நெறிமுறைகளினால் (அதாவது மக்கள் பணி செய்யணும், அதிலும் வருவாய் செலவிடப்படவேண்டும் என்றெல்லாம்), மடங்கள், நிறுவனங்களை ஆரம்பிக்கின்றன. சாதாரணமாக இந்த நிறுவனங்கள் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. அதுவே பெரிய நிறுவனங்களாக ஆகிவிட்டாலோ இல்லை மிக விலையுயர்ந்த அசையாச் சொத்துக்களைக் கொண்டவைகளாக மாறிவிட்டாலோ, அதன் மீது அரசியல்வாதிகள் கண் திரும்பும். இதுதான் மடங்களுக்கான பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம்.
நம் அரசியல்வாதிகளின் qualification, thinking, நோக்கம் என்பதைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். சுதந்திரத்திற்குப் பிறகு அவற்றின் தரம் வெகு வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. இதனைச் சுலபமாக மடங்களால் face பண்ண முடியாது. பல மடங்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் சென்று தங்கள் சொத்துக்களை, உரிமைகளைக் காப்பாற்றிக்கொண்டுள்ளன (ஜெகத்ரட்சகன் அவர்களும் அப்படிப்பட்ட சிலருக்கு உதவி செய்திருக்கிறார். அதனைக் கேள்விப்பட்ட எனக்கு, ஜெகத் மீது மிகுந்த மரியாதை வந்தது). அதனால் இந்தக் காணொளி மற்றும் அதன் கருத்துகள் உள்நோக்கம் உடையவை என்றே நினைக்கிறேன்.
மடத்தின் மீது பற்றுக்கொண்டு, சிலர் செய்ய நினைக்கும் நன்மைகளை, திசை திருப்பி அவரது பேரில் சாணியைப் பூச நினைப்பவர்களும் உண்டு. காஞ்சி மடத்தில் வடநாட்டவரைக் கொண்டுவர சதி என்பதே ஒரு புரூடா என்று நான் நம்புகிறேன். பல விஷயங்களை analyze செய்து இப்படி நடந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது.
தனிப்பட்ட முறையில், குருமூர்த்தி பணத்திற்கு ஆசைப்படுபவர், ஊழல் செய்ய எண்ணுபவர் என்றெல்லாம் நான் நம்பவில்லை. சோ, தன் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்ததை வைத்தே நாம் இதை முடிவு செய்ய முடியும். அவர் கருத்துக்களில் நமக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் நேர்மையில் இருக்கக்கூடாது என்பது என் எண்ணம்.
மடத்தின் தலைவர் என்பது ஒரு பதவியல்ல. அது மிகப் பெரும் சுமை. நிறைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. பலப்பல வருடங்களுக்கு முன்பு, நிறைய நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவேண்டிய சுமை மடத்தின் தலைவர்களுக்கு இல்லை. அவருடைய தினப்படியான கடமைகளைச் செய்துகொண்டு, அதன் மூலமாகவே மக்களை ஈர்க்கும் சக்தி இயல்பாகவே இருந்தது. அவர்களாலும் எளிமையை முற்றிலுமாகப் பேண முடிந்தது. மாறிவரும் காலகட்டங்களில் இன்னமுமே கடுமையான பணி அது. இந்த சப்ஜெக்ட் பற்றியும் நிறைய விஷயங்கள் எழுதலாம். பயணம் செல்வது, பிறரைத் தொடர்பு கொள்வது, நிர்வாக ரீதியான முடிவுகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு என்று காலம் மாற மாற பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன. என்ன ஒன்று, நேரடியாக உறவினர்களோ இல்லை நண்பர்களோ மடத்தின் சொத்துக்களினால் பலன் பெற முடியாது. அப்படி ஓரிரு நிகழ்வுகள் நடந்தாலும் மடத்தின் மீதான பக்தர்களின் ஈர்ப்பு பாதிக்கப்படும்.