எடப்பாடியார் – ராகுல் காந்தியுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பாரா …? சாத்தியமா ..? WHY NOT …!!!

……………………………………………..

……………………………………………………

ரவீந்திரன் துரைசாமியின் வீடியோவுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பு –

” EPS-யை வைத்து Savukku Shankar போட்ட திட்டம் …!
2024-ல் இது நடக்கவே நடக்காது..!”

அவலை நினைத்து உரலை இடிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா …?
வர வர ரவீந்திரன் துரைசாமி பேசுவது அப்படித்தான் இருக்கிறது.
சவுக்கு சங்கருடன் அவருக்கான நிழல் சண்டையின் பிரதிபலிப்பு
மேற்கண்ட தலைப்பு..

முதலில் காணொலியை கண்டு விடுங்கள் … பிறகு கதைப்போம் ..!!!

………………………………………………

…………………………………………………………………….

தலைப்பில் சொல்வதைப்போல், காணொலியின் உள்ளே
சவுக்கு சங்கரையும் காணோம் எடப்பாடியாரின் திட்டத்தையும் காணோம்..

ஆனாலும் நம்மால் ஓரளவு யூகிக்க முடிகிறது.

2024 பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியாரும், ராகுல் காந்தியும்
கூட்டு சேர்ந்து பாஜகவை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்
ரவீந்திரன் துரைசாமி…

மற்றவர்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம்.
ஆனால் சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன்.

காங்கிரசை, திமுக – தன் கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று
பாஜக தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. திமுக தலைவரும்
இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த திட்டம்
தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் அரங்கேறும். புதிய கூட்டணியை
உருவாக்கி விட காங்கிரசுக்கு அவகாசம் கொடுக்கக்கூடாதே …!!!

இன்னொரு பக்கம் எடப்பாடியாரும், பாஜகவை கழட்டிவிட
காத்துக்கொண்டிருக்கிறார்…இதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்
நடக்கலாம்…

எனவே அத்தகைய சூழ்நிலையில், இயற்கையாகவே எடப்பாடியாரும் –
காங்கிரசும் நெருங்கி வருவார்கள்…அநேகமாக விசிக-வும் காங்கிரஸ்
எடப்பாடியார் கூட்டணிக்கு வரக்கூடும்.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், திமுக கூட்டணி மிகவும்
பலவீனமாகி விடும்…

இதைத்தான் பாஜக தலைமையும் விரும்புகிறது…

மும்முனை போட்டி..அதில் கிட்டதட்ட சமநிலையில்
3 கூட்டணிகளும் போட்டி …!!!

தேர்தல் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் ..
ஆனால் முடிவு தான் –
எப்படி இருக்குமென்று யாராலும் கணிக்க முடியாது …!!!

.
…………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.