2ஜி வழக்கின் கதி …

……………………………………………………..

…………………………………………………..

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக
முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்
தொடுத்திருந்தார்.இந்த முறைகேடு புகாரை தினசரி விசாரிக்க
உச்சநீதிமன்றம் 2011-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியை நியமித்தது.

இந்த வழக்கை 7ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி –
ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத்தொடா்பு செயலா் சித்தாா்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலா் ஆா்.கே. சந்தோலியா உள்பட 19 பேரை 2017, டிசம்பா் 21-ஆம் தேதி விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.

‘சுமாா் 7 ஆண்டுகள் இந்த வழக்கில் ஆதாரங்களை அளிப்பாா்கள் என்று
எதிா்பாா்த்து காத்திருந்தேன். ஒருவா்கூட அந்த ஆதாரத்தைக் கொண்டு வரவில்லை. பொதுக் கருத்துகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இடமில்லை’ என்று நீதிபதி ஓ.பி. சைனி தனது தீா்ப்பில் குறிப்பிட்டிந்தாா்.

இந்தத் தீா்ப்பின் அடிப்படையில் அமலாக்கத் துறையின் வழக்கில் இருந்தும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் 2018, மாா்ச் 19-இல் அமலாக்கத் துறையும், அடுத்த நாள் சிபிஐயும் மேல் முறையீடு செய்தன.

இந்த வழக்கை தினசரி விசாரணை நடத்தி வந்த நீதிபதி
பிரஜேஷ் சேதி, சிபிஐயின் வாதத்தை முடித்துவிட்டு அமலாக்கத் துறையின்
வாதத்தை தொடங்க இருந்தாா். 2020 நவம்பா் 30-ஆம் தேதி அவா் ஓய்வு பெற்றதால் மீண்டும் புதிதாக

  • ( ஏன் புதிதாக …? ) இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

அந்த மேல்முறையீடு மனுக்களை தற்போது நீதிபதி தினேஷ்குமார் சர்மா
விசாரணைக்கு எடுத்து கொண்டிருக்கிறார். கடந்த மே 29 அன்று நடைபெற்ற
விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீரஜ் ஜெயின், மேல்முறையீடு அனுமதி தொடர்பாக பல்வேறு வழக்குகளில் கூறப்பட்டுள்ள தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தார்.


செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர்
நீரஜ் ஜெயின், ‘சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அலட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்களை மதிப்பீடு செய்த முறையே தவறானது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீா்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதை ஆதாரத்துடன் நாங்கள் சுட்டி காட்டுகிறோம் என தெரிவித்தார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளது. இது சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசு அதிகாரிகளுக்கும் தொலைத் தொடா்பு
நிறுவனங்களுக்கும் இடையேயான தொடா்பு, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான இறுதி தேதி நிா்ணயம், முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை கொள்கை, அனுமதி கட்டணம் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படாதது, ரூ.200 கோடி முறைகேடு ஆகிய விவகாரங்களில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அரசுக்கு
ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ இவை வெளிப்படையாக
சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடைசி நேரத்தில் முதலில் வருபவருக்கு முதல் முன்னுரிமை
என்ற காரணமே தவறான செயல் என நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது
மிக பெரிய தவறு …என வாதிட்டார்.

ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, வரையறுக்கப்பட்ட குற்றம் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்

  • என விஜய் மதன்லால் சவுத்திரி வழக்கிலும், அதைத் தொடர்ந்து இந்திராணி
    பட்நாயக் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
  • அதன்படி,
    சி.பி.ஐ. வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்கள் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து
    தானாகவே விடுவிக்கப்பட வேண்டும்.

முடக்கப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க கோரி தாக்கல் செய்த
மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.

வாதத்தை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, மேல்முறையீடு
அனுமதி மனுக்கள், இந்த வழக்கில் முடக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறது….

2011-ல் துவங்கப்பட்ட வழக்கு 2023-ல் இன்னமும் உயர்நீதிமன்றத்திலேயே
துவக்க கட்டத்தில் தான் இருக்கிறது. இது என்றைக்கு முடிவுக்கு வரும் ….???


அதன் பிறகு தோற்றவர்கள் மீண்டும் அப்பீலுக்கு போகும் வாய்ப்பும்
இருக்கிறது… இறுதியான தீர்ப்பு வரும்போது குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள்
நூறு வயதையும் தாண்டியிருக்கக்கூடும்…

நம் நாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெறும் ஏட்டளவோடு
நின்று விடுமோ …???

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to 2ஜி வழக்கின் கதி …

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //நம் நாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெறும் ஏட்டளவோடு
    நின்று விடுமோ …???// – இப்படி நம் நீதித் துறையை தவறாக நினைக்கலாமா? அவர்கள் வெகு வேகமாகச் செயல்படுபவர்கள். நேற்று கூட பாருங்க, IT raid செய்த அதிகாரிகளைத் தாக்கிய குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். IT அதிகாரிகள் மீது FIR போடப்பட்டுள்ளன (என்னது? அடிவாங்கிய அதிகாரிகள் மீது FIRஆ என்றெல்லாம் கேட்கக்கூடாது.) ஒரு ட்வீட் போட்டதால் ஒரு மாதம் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பலர். மத்தியதர வர்க்கம் அதற்குக் கீழானவர்கள் மிகச் சிறிய குற்றம் செய்தாலும் விரைந்து விசாரணை நடத்தி தண்டிக்கப்படுகிறார்கள். அதனால் குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்படுவதில்லை என்று சொல்ல முடியாது.

  2. Shaik Azeezuddin's avatar Shaik Azeezuddin சொல்கிறார்:

    ///இதனால் அரசுக்கு
    ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது///
    நான் ஏதோ 1 லட்சத்து 76-ஆயிரம் கோடி என்று நினைத்துவிட்டேன் ஐயா

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      😉

      • bandhu's avatar bandhu சொல்கிறார்:

        ஸ்வான் டெலிகாம் கம்பெனியை எடுத்துக்கொள்வோம்.

        இவர்களுக்கு Andhra Pradesh, Gujarat, Haryana, Karnataka, Kerala, Maharashtra, Punjab, Rajasthan, Tamil Nadu (including Chennai), Uttar Pradesh, Delhi, Mumbai பிரதேசங்களின் 2G ஸ்பெக்ட்ரம் இவர்களுக்கு கிடைத்தது. அதற்க்கு இவர்கள் செலுத்த வேண்டிய தொகை சுமார் 1500 கோடி. உடனடியாக ஸ்வான் டெலிகாமின் 45% பங்குகள் 4200 கோடிகளுக்கு விற்கப்பட்டது. அப்படி பார்த்தால் ஸ்வான் டெலிகாமின் மதிப்பு கிட்டதட்ட 9300 கோடிகள் என்றாகிறது. கிட்டதட்ட அரசுக்கு வரவேண்டிய வருவாய் 7800 கோடிகள் வராமல் போனது என்றாகிறது.

        அதேபோல் யூனிடெக் கம்பெனி 1661 கோடி கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கியபின் அதன் மதிப்பு 10,300 கோடி என்ற மதிப்பில் 60% நார்வே நாட்டின் telenor -க்கு விற்கப்பட்டது. இதில் அரசுக்கு வரவேண்டிய தொகை 8700 கோடி வராமல் போனது.

        இவர்கள் இருவரை தவிர, இன்னும் 16 கம்பெனிகள் லைசென்ஸ் பெற்றார்கள்.

        இந்த அடிப்படையில் கணக்கிட்டால் 1,76,000 கோடி என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்!

  3. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    இந்த வழக்கு கற்பனையாக புனையப்பட்ட வழக்கு. முக்கியமாக தமிழர்களுக்கும் சமூகநீதிக்கும் சவால்விடப்பட்டது 🤣

    • bandhu's avatar bandhu சொல்கிறார்:

      நல்ல நகைச்சுவை!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கார்த்திகேயன், நீதித்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றின் மீதான வெறுப்பில் (satire) எழுதியிருக்கிறார். இந்தியாவில் நீதி என்பது ஏழைகள் மற்றும் மிடில் கிளாஸுக்கு மாத்திரம்தான் போலிருக்கிறது என்பது பலரின் எண்ணம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.