பாஜக விரித்த வலை….! சிக்கலில் ஸ்டாலின்! | Journalist Mani Interview

………………………………………………..

…………………………………………………

……………………………………………..

இப்போது கூட மணி அவர்களுக்கு, ஊழல் ஆட்சி ஒழியவேண்டும் என்று சொல்ல மனமில்லை….. இனியும் திமுக-வை காப்பாற்ற யாராலும் முடியாதே என்று தான் வருத்தப்படுகிறார்.

இன்றைய தினம் திமுக ஆட்சி, எந்த காரணம் கொண்டேனும் கவிழுமேயானால், தமிழகத்தில், சாதாரண பொது மக்கள் கூட பட்டாசு வெடித்து கொண்டாடினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்படி அசிங்கப்பட்டும், ஆட்சியில் எவருக்கும் பந்தா மட்டும் குறையவே இல்லை. இத்தனைக்கும் பிறகும், இவர்களெல்லாம் எப்படி வெட்கம் சிறிதுமின்றி பொது நிகழ்ச்சிகளில் சிரித்துக்கொண்டே வலம் வருகிறார்கள் என்பது தான் புரியவில்லை.

……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பாஜக விரித்த வலை….! சிக்கலில் ஸ்டாலின்! | Journalist Mani Interview

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    #GSquare பெயரிலேயே ரியல் எஸ்டேட் கம்பெனிகள் மட்டும் 26

    ஜி ஸ்கொயர் ஹோம் டெவலப்பர்ஸ்
    ஜி ஸ்கொயர் லேண்ட் டிசைன்
    ஜி ஸ்கொயர் ஜமீன் ப்ராப்பர்ட்டீஸ்
    ஜி ஸ்கொயர் லேண்ட் ஹோல்டிங்
    ஜி ஸ்கொயர் பில்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் ராயல் எஸ்டேட்ஸ்
    ஜி ஸ்கொயர் ஹவுசிங் டெவலப்பர்ஸ்
    ஜி ஸ்கொயர் சாரா பில்ட்மோர்
    ஜி ஸ்கொயர் சிக்னிடிவ் பில்ட் ஆன்
    ஜி ஸ்கொயர் யுனைடட் ரியாலிட்டி
    ஜி ஸ்கொயர் லேண்ட் & பில்டிங்
    ஜி ஸ்கொயர் கிரியேட்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் குயின் கேட்
    ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் எனினும் கிராண்ட் எஸ்டேட்
    ஜி ஸ்கொயர் ஜமீன் எஸ்டேட்
    ஜி ஸ்கொயர் லே அவுட்
    ஜி ஸ்கொயர் கிரவுண்ட் & ப்ரமோட்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் ஹைடெக் பில்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் எகோசென்ஸ் கிரியேஷன்ஸ்
    ஜி ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் கிரீன் ரோப் டெவலப்பர்ஸ்
    ஜி ஸ்கொயர் ரியல் ப்ரமோட்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் ஏட் காம் கிரியேஷன்ஸ்
    ஜி ஸ்கொயர் பென்டோ க்ரியேட்டர்ஸ்
    ஜி ஸ்கொயர் குனீத் டெவலப்பர்ஸ்

    இதில் எத்தனை ஷெல் கம்பெனிகளோ…. அண்ணாமலை சொல்கிறார், திமுக ஆட்சியில் இல்லாதபோது நஷ்டக்கணக்கு காண்பித்தது என்று. ஆட்சிக்கு வந்த புதிதில், வேக வேகமாக இந்தக் கம்பெனிக்கு மாத்திரம் வருவாய்த்துறை மற்றும் மற்ற துறைகள் அனுமதி கொடுத்தன என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. கோவை என்று நினைவு, ஜிஸ்கொயர் நிலங்களுக்காக புதிய பேருந்து நிலையம் அந்த நிலங்களுக்கு அருகில் திறக்கப்படப்போவதாக செய்தி அடிபட்டது. இன்றோ (இரண்டு வருடங்களுக்குள்) 36,000 கோடி வரவு என்று அண்ணாமலை குறிப்பிடுகிறார். அண்ணாமலைக்கு இப்படி பொதுவெளியில் ஒன்றைக் குறிப்பிடுவதில் உள்ள லீகல் ரிஸ்க் தெரிந்திருக்கும் (கோர்ட் கேஸில் நியாயப்படுத்தவேண்டுமே). அதனால் என் மனதில் இது 36,000 கோடியாக இருக்காது. பல மடங்காக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.

    புதிதாக யூகே வங்கி ஒன்றுக்கே ஓனர் ஆகும்படியாக வரவு அவ்வளவு அதிகமாக இருந்திருக்கிறது.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அதே போல, மின்னம்பலம் எப்போதுமே திமுகவின் முரசொலியின் இன்னொரு வெர்ஷன். மணி எப்போதுமே திமுக கம்யூனிஸ்ட் ஜால்ரா என்பதால் அவரைப் பேட்டி கண்டு பிரச்சனையைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். (நம்முடைய உதய், பழைய சொத்துகள் இப்போ விலை உயர்ந்திருக்கும், ஊழலில் சேர்த்திருக்கலாம் இல்லையென்றால் பிஸினெஸில் சேர்த்திருக்கலாம் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் மணி ஜால்ரா அடிக்கிறார்)

      இவ்வளவு சம்பாதிக்கிறவங்களுக்கு பொறை போட்டு, சமூக வெளியில் தங்களுக்காகப் பேசும் ப த் தி ரி கை யா ள ர் க ளை நிறையவே உருவாக்கியிருக்காங்க.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மதவாத அரசியலைப் புகுத்துவது, மக்களைப் பிளவுபடுத்துவது – அண்ணாமலையின் அஜெண்டா. ஹா ஹா ஹா. கொடுத்த காசுக்கு நல்லாவே குரைக்கிறார் மணி.

    திமுக மதவாத அரசியலைச் செய்கிறது என்பது யாருக்குமே தெரியும். சபாநாயகரே (கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்), கிறித்துவர்கள்தாம் இந்த ஆட்சிக்கு முக்கியம் என்று பேசுகிறார். ஸ்டாலினும் முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்குமாக உழைக்கிறார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருக்கும்போதே, மக்களை ஏமாற்ற மதமாறியவர்களுக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கான சலுகை வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார். உதயநிதி, தான் கிறித்துவர் என்றும் தன் மனைவி கிறித்துவர் என்றும் கிறித்துவர்களுக்காகப் பேசும்போது மதவாதமாகத் தெரியவில்லை. இதைவிடப் பெரிய பொய்யை ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னபோது (மனுஸ்ம்ருதிதான் ஜாதியை உருவாக்கியதால், தனக்கு இந்து கோவில்களுக்குப் போக இஷ்டமில்லை என்று சொன்னார், முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு. மற்ற மதங்களில் ஜாதிகள் பிரிவுகள் இல்லையா? ஒரு பதவியில் இருந்துகொண்டு இந்து மதத்திற்கு எதிராகப் பேசுவது மதவாதம் இல்லையாம்) இவையெல்லாம் இந்த மணிக்கு மதவாதமாகத் தெரியவில்லை. இந்துக்களின் நன்மையை யாராவது பேசினால் மதவாதமாம்.

    இந்த மாதிரி புல்லுருவிகள் பத்திரிகைத் துறையில் பரவியிருப்பதுதான் தமிழ்நாட்டிற்கான சாபக்கேடு. புல்லுருவிக்கேற்ற பத்திரிகை மின்னம்பலம்தான் .

    • vgchandrasekaran's avatar vgchandrasekaran சொல்கிறார்:

      மணி அவர்களின் நேர்காணலில் ஒன்றை கவனிக்கும் பொழுது அவர் திராவிட மாடல் விடியல் ஆட்சியில் தவறுகள் இந்த இரண்டு வருடத்தில் இத்தனை சீக்கிரமாக நடந்து இருக்க வேண்டாம் சற்று பொறுத்து பொறுமையாக நிதானமாக நடந்து இருக்கலாம் என்ற வகையில் மாடல் ஊழல் ஆட்சியை நியாயப்படுத்துவது ஆகச் சிறந்த காமெடி. இதில் வரிக்கு வரி நான் அரசியல் சார்பற்றவன் பொது சமூகத்திற்காக மட்டுமே பேசுகிறேன் என்று வேறு தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறார். அவதூறு வழக்கின் தன்மை குறித்து மணிக்கு தெரிந்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியவில்லையா அல்லது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலைப்பாடா? ஆயினும் வாங்கிய காசுக்கு மிக நியாயமாக கூவுகின்றார் மணி…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.