…………………………..

……………………………..
பிபிசி ஆவணப்பட வீடியோவை நாம்
கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அது
இத்தனை விளம்பரத்தை பெற்று பரபரப்பை
ஏற்படுத்தி இருக்காது… We should have simply ignored it ..
ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்டை பற்றிய வரை –
இந்த விஷயத்தை வெளியிடுவதன் மூலம்
தாங்கள் பண ஆதாயம் பெறுவோம்
என்கிற உண்மையை அந்த நிறுவனமே
வெளியிட்டிருக்கும்போது திரும்ப திரும்ப, அதையே
பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை…
ரிப்போர்ட்டின் மூலம் வெளிவந்திருக்கும்
பல புரட்டல் வேலைகளும்,மோசடிகளும்,
முழுவதும் உண்மை…. அவற்றின் மீது
என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பற்றி
தான் பேசவேண்டும் ….
- விவரமாக, தெளிவாக அலசுகிறார்
சுமந்த் சி ராமன் = கீழே உள்ள காணொளியில்…
இந்த விஷயங்களில் கிட்டதட்ட எனக்கும்
இதே கருத்து தான் …
…………………………………….
.
……………………………………………………………………………………………………………………………………………..
//ரிப்போர்ட்டின் மூலம் வெளிவந்திருக்கும் பல புரட்டல் வேலைகளும்,மோசடிகளும், முழுவதும் உண்மை…. அவற்றின் மீது
என்ன நடவடிக்கை எடுப்பது// – இதெல்லாம் ஒன்றும் நடக்காது. அரசியலாக்கி, நாட்டுக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்டை ஊத்தி மூடிவிடுவாங்க.
//வீடியோவை நாம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால்// – இதில் பாஜக அரசு செய்தது சரி என்றே நான் நினைக்கிறேன். கிறித்துவ மிஷனரிகள் மற்றும் சீனாவின் பணம் வாங்கிக்கொண்டு பிபிசி, நம் நாட்டிற்கு எதிரான வேலைகளைச் செய்வதற்காக இறங்கியிருக்கிறது. நியாயத்தின்பக்கம் இருப்பதாக பிபிசி நினைத்தால் முதலில் அது எதிர்க்கவேண்டியது பிரிட்டிஷ் அரசையும் கிறித்துவ மிஷினரிகளையும்தான். அவர்கள்தாம் உலகத்தின் முதல் எதிரிகள். பிபிசி முழுமையாக தடை செய்யப்படுவதும் நியாயம்தான். நம் நாட்டைக் கொள்ளையடித்து அதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளத்தைப் பெருக்கின பிரிட்டிஷாரின் ஒரு பகுதிதான் பிபிசி. அவர்கள், பிரிட்டிஷார் உலகத்தில் செய்த அநியாயங்கள், அடித்த கொள்ளைகள், அந்தப் பணத்தால் வளர்ந்த பிபிசியைப் பற்றி முதலில் பிபிசி ஆவணப்படங்கள் வெளியிடட்டும்.