வலை’யில் கிடைத்தது … நன்றாகவே இருக்கிறது … வைத்துக் கொள்வோமே …!!!

………….

……………..

  • 1000 வருடங்களுக்கு முன்னர்,
    உலகிலேயே பெரிய பணக்கார நாடு ….?
  • சோழர் காலத்து தமிழ்நாடு தான் உலகத்திலேயே
    மிகவும் பணக்கார நாடாக இருந்தது…

எதை வைத்து சொல்கிறீர்கள்….?

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள்
ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்…

  • 1000 ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே உயர்ந்த
    கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,
    கங்கை கொண்ட சோழபுரமும்தான்…

அப்போது வட அமெரிக்கா,
தென் அமெரிக்கா கிடையாது.

அப்போது, லண்டன் – தேம்ஸ் நதிக்கரையில் ஒரு
மீன் பிடிக்கும் கிராமமாக இருந்தது.

  • ராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சை பெரிய கோபுரம்
    முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது.
    இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை
    1311 – ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால்
    கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல்
    எடுத்துச் செல்லப்பட்டது.
  • இந்த கோவில்களை எல்லாம் கட்டுவதற்கு
    எங்கிருந்து பணம் வந்தது?
  • எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில்
    தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம்
    மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் –
    சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.

  • இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள்,
    தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.
  • உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம்
    காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
    எங்கும் 3 போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் தடங்கலின்றி
    வந்து கொண்டிருந்தது.
  • வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும்
    கிடைத்த பணத்தை, தங்கத்தை – சோழர்கள் படை பலத்தைப்
    பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும்
யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

  • ஏன் இத்தனை கோவில்களை கட்டினார்கள்…?
  • மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசர்கள்,
    அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக
    எழுதி வைத்தனர்…. ?
  • உலகின் குருவாக(விஸ்வ குரு) பாரதம் ஆனது எப்படி …?
  • எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன,
    அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு,
    மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு என்று –
    வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான்
    பட்ஜட் போடுவார்கள்.
    இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.
  • கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று
    அதைத்தான் சொல்லி வெச்சாங்க.
  • மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு
    அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள்,
    சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான
    செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர்,
    அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு
    கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க,
    ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு,
    அதுவும் அரசரால் கொடுக்கப்படும் …… அரசு வேலை.

  • கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள்,
    குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம்
    விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று
    முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.
  • கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல்,
    அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த
    கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
  • நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள்.
    அதற்கு ஒரு சமூகம்.
  • சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை
    செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர்,
    அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
  • நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும்
    அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை.
    அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க,
    அதற்கேற்ப ஆண்டு முழுவதும் கோவில் உற்சவங்கள்.
  • மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம்.
    கூத்து கலைஞர்கள் என,
    அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை.

மாலை வேளைகளில் ஆன்மீகஉரைகள், இசை, நடனம்,
கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

-தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும்
தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

  • கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை,
    அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம்
    மானியம், வருட வருமானம்.
  • இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய,
    கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
  • இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க,
    அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு
    மிகப்பெரிய தொழிற்சாலை.

  • ஆன்மீகத்தை ஒட்டி வாழ்வாதாரம்.
  • பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும்,
    கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான
    அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத
    அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும்
    விளை பொருட்களின் விதை பொருட்கள்.
  • 12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து,
    மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன
    அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு,
தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே,
நம் கோயில்கள்.

  • ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்…
  • அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள்
    பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென
    ஒரு சமூகம் என, ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
    இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
  • மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள்,
    அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே
    சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
  • தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள்
    அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள்,
    அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
  • எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம்
    இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது
    அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல,
    அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில்
    வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக
    நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ,
உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ,
நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம்
எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி
செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை
கவனிக்க ஒரு சமூகம்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு
தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து
காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.*

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வலை’யில் கிடைத்தது … நன்றாகவே இருக்கிறது … வைத்துக் கொள்வோமே …!!!

  1. பாலாஜி சொல்கிறார்:

    அது ஹிந்து கோவில் அல்ல சைவ கோயில்.

    அங்கு உதவியர் அனைவரும் தமிழர்கள்
    பூசை செய்தவர்களும் தமிழர்களே பூர்வகுடிகளே

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பாலாஜி,

    எல்லாம் தெரிந்தது போல் எழுதும் முன்னர்,
    சரித்திரத்தை ஒழுங்காக படித்து விட்டு வாருங்கள்…

    “சதுர்வேதி மங்கலம்” என்று ஒரு கிராமம்,
    ராஜராஜசோழன்/ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்தது தெரியுமா…?

    அதைப்பற்றிய விவரங்களை படித்து தெரிந்து கொண்டு
    இங்கே வாருங்கள்…. நீங்கள் எழுதியிருப்பது குறித்து
    மேற்கொண்டு பேசலாம்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  3. புதியவன் சொல்கிறார்:

    இது என்றாவது நமது சரித்திரப் புத்தகங்களில், மாணவர்களுக்கான வரலாற்றுப் புத்தகங்களில் இருந்திருக்கிறதா? தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, திருவரங்கம் கோவிலிலும் முஸ்லீம் அரசர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டதும் வரலாற்றுப் புத்தகங்களில் இல்லை. அசோகர் மரம் நட்டார், அக்பர் குளம் வெட்டினார் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. இதனால்தான் கட் அவுட் கவிஞர்கள், தமிழர்களுக்கு கல்வியறிவு கடந்த 50 ஆண்டுகளில்தான் பரவலாக்கப்பட்டது, கிறித்துவர்கள் வந்தபிறகுதான் கல்வியறிவு வந்தது என்று நாக்கூசாமல் பேச முடிகிறது.

    சோழர்கள் கட்டிய பல கோவில்களுக்கான இடங்களும், கட்டிடங்களுடன் கூடிய இடங்களும் தற்போது ஆக்கிரமிப்பில் (எந்த மதம் என்று சொல்ல வேண்டியதில்லை). இதற்கு நான் நிறைய உதாரணங்கள் தரமுடியும். பல பிரம்மாண்டமான கட்டுமானங்கள் அழிவின் விளிம்பில் (சந்தேகம் இருந்தால் கும்பகோணத்தில் தங்கி, தஞ்சை அதன் சுற்றுப்புறக் கோவில்களைப் பார்த்துவிட்டு வாருங்கள். என்னிடமும் படங்கள் இருக்கின்றன)

    ஹிந்து கோவில் அல்ல, சைவக் கோவில் என்பது பிதற்றலான கருத்து. முதலில் அவருக்கு ‘சைவம், அசைவம்’ என்றால் என்ன என்று தெரியுமா? நம் பாரதத்தில், குறிப்பாக தமிழகத்தில் 4 சமயங்கள் இருந்து, பிறகு வட நாட்டிலிருந்து வந்த இரு சமயங்களினால் 6 சமயங்களாக ஆனதும், அவர்களுக்குள்ளேயும் சண்டைகள் ஏற்பட்டு, அரசன் எந்த சமயத்தை அப்போது ஆதரித்தானோ அந்தச் சமயம் செழித்தோங்கியதும், பிறகு ஒரு காலத்தில், அதைவிடப் பெரிய பிரச்சனைகளான பாரதத்துக்குச் சம்பந்தமில்லாத மதங்கள் வந்தபோது, பாரத மதங்களை இந்திய அரசர்கள் காத்ததும் (முஸ்லீம் மன்னர்களிடமிருந்து, கிறித்துக கிழக்கிந்திய கம்பெனிகளிடமிருந்து) வரலாறு. இதனை ஹொய்சாளர்கள், நாயக்கர்கள் போன்ற பலர் முன்னெடுத்துச் செய்தனர். சோழர்கள் காலத்தில் சைவ சமயம் பெரும் வளர்ச்சியுற்றது, பாரதத்திற்கான மற்ற மதங்களுக்கும் குறைவில்லாத ஆதரவு இருந்தது, ஒரு சில மன்னர்களைத் தவிர.

    • Ramaswamy thamilan சொல்கிறார்:

      //சோழர்கள் காலத்தில் சைவ சமயம் பெரும் வளர்ச்சியுற்றது// Then it is saiva temple only. And for your information Saiva samayam was at its peak when Naalvar lived. Pirkaala pallava dynasty. So better you learn what is mean by Saiva samayam and spit your brahmnical poison. There is no anda or aganda baratham no word called hindu all these are brahmins tactics to live a sophisticated life in tamil peoples hard work. Learn your vedas nowhere it is mentioned about – Shiva, Murugan and Kotravai.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.