கிரிமினல் வழக்கில், தேவையான ஆவணங்களை கொடுக்க மறுக்கலாமா …?

…..

….

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட, உயர்நீதி மன்ற தீர்ப்பின்
மூலம் முக்கியமான ஒரு விஷயம் தெரிய வருகிறது….

பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி மத்திய அமலாக்கத்துறை –
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2021 ஜூலை மாதம் பதிவு
செய்த ஒரு வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கொடுக்க
மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது……

இது குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் சாரம் கீழே –

………..

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளில் ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறை
தாக்கல் செய்த மனுவை சென்னை எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி
செய்திருந்தது.

அதை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனு மீது – முக்கிய உத்தரவை மார்ச் 30ஆம் தேதி
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

……

செந்தில் பாலாஜி 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை
அமைச்சராக இருந்தார். அப்போது அரசு போக்குவரத்து
கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக பலரிடம்
பெரிய அளவில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக
புகார்கள் எழுந்தன.

இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீது மத்திய
குற்றப்பிரிவில் –

441/2015, 298/2017, 344 /2018 ஆகிய எண்களைக் கொண்ட
மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் வழக்கு
எண் 344 சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ‌‌
புகார் கொடுத்தவர்கள் தங்களுக்கு உரிய பணம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டதால் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டதை
அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

(அதாவது வேலை கோரி லஞ்சம் கொடுத்து, வேலையும்
கிடைக்காமல், கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காமல்,
பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, லஞ்சம் வாங்கியவர்,
லஞ்சம் கொடுத்தவர்களுக்கே பணத்தை திரும்பக் கொடுத்து
விட்டதால், புகாரை வாபஸ் பெற்றுக் கொண்ட
விசித்திர வழக்கு…!!! )
………

இந்த வழக்குகளின் அடிப்படையில் பண மோசடி தடுப்புச்
சட்டத்தின்படி மத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி
மீது 2021 ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குக்காக அமலாக்கத் துறையின் துணை இயக்குனர்
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான
3 வழக்குகள் தொடர்புடைய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை வழக்குக்காக வழங்க வேண்டும் என ஒரு
மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கில் கடந்த 9-11 -2021 சிறப்பு நீதிமன்றம் சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்களை அமலாக்கத் துறைக்கு
வழங்க மறுத்தது.

இதனடிப்படையில் அமலாக்கத்துறை சென்னை சிறப்பு
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் மாநில அரசு சார்பில் வாதாடிய தலைமை
குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,
(இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில், திமுக சார்பாக
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்….!!!)
” ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்கள் வழங்கிய
தீர்ப்புகளின் படி சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு மூன்றாவது தரப்பினர் கேட்கும் ஆவணங்களை வழங்கவோ
மறுக்கவோ முழு உரிமை உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது”
என வாதாடினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர்
ஜெனரல் சங்கரநாராயணன், ” செந்தில் பாலாஜி மீது
பதியப்பட்டுள்ள பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படியான
வழக்கின் புலனாய்வு என்பது சிறப்பு நீதிமன்றத்தில்
செந்தில் பாலாஜி மீது கடந்த வழக்குகளில் போலீஸ் சேகரித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது.

அந்த ஆவணங்கள் இல்லாமல் செந்தில் பாலாஜியை
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது.
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் திமுக சார்பில்
வெற்றி பெற்று தற்போது திமுக அமைச்சரவையில்
அமைச்சராக இருக்கிறார். இந்த காரணத்தால் தற்போதைய
அரசின் போலீசார் செந்தில் பாலாஜி தொடர்பான
ஆவணங்களை அமலாக்கத்துறையுடன் பகிர்ந்து கொள்ள
தயக்கம் காட்டுகின்றனர்” என்று நீதிமன்றத்தில்
தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பிரகாஷ், நக்கீரன்
ஆகியோர் –

“அமலாக்கத்துறை சார்பில் –
உரிய விதிகளை பின்பற்றி சிறப்பு நீதிமன்றத்தின் முன்
செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு

-புதிய மூன்றாம் தரப்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆவணங்களை பார்வையிட
அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு உரிமை உண்டு.

அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் ஆவணங்களில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் குறிப்புகளை
எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர், தங்களுக்கு தேவையான ஆவணங்களை குறிப்பிட்டு
அந்த ஆவணங்கள் தேவைப்படுவதற்கான காரணங்களையும்
குறிப்பிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய
மனுவை தாக்கல் செய்யலாம்” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல்
செய்ய அமலாக்கத்துறை தயாராகிறது.

…….

குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை,
குற்றம் சாட்டப்பட்டவர், தற்போது ஆளும் கட்சியில் சேர்ந்து
விட்டார் என்கிற ஒரே ஒரு காரணத்தை வைத்து
அமலாக்கத் துறையின் விசாரணக்கு தர மறுப்பது சரியா….?

கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு,


தற்போது அவர் ஆளும் கட்சியில் இருக்கிறார் என்கிற
காரணத்தால் அரசு பாதுகாப்பு அளிக்கிறது என்கிற
அபிப்பிராயத்தை அது உண்டு பண்ணாதா….?

( லிங்க் – https://www.minnambalam.com/politics/2022/03/31/37/senthilbalaji-ed-documrnts-highcourt-pmla )

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கிரிமினல் வழக்கில், தேவையான ஆவணங்களை கொடுக்க மறுக்கலாமா …?

 1. Tamil சொல்கிறார்:

  போங்கடா நீங்களும் உங்க நீதியும் – இப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது

 2. கார்த்திகேயன் சொல்கிறார்:

  திராவிட மாடல்

 3. ஆதிரையன் சொல்கிறார்:

  நீதிபதிகளை, இவர்கள் மிரட்டாத வகையில், ஒன்றும் பிரச்சினை இல்லை ..
  அவர்களது சாத்வீகமான சட்ட போராட்டத்தை , நாம் பாராட்டிதான் ஆகவேண்டும் ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.